தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட போலீசார் சிலர் மெடிக்கல் லீவு போட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் ஒரு காரணம் என்றால், போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் சிலர் தங்கள் கடமையில் இருந்து தவறுவதும் கூட ஒரு காரணம்தான்.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம்.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை செய்த மத்திய அரசு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை மிக கடுமையாக உயர்த்தியது. அபராத தொகைகள் கடுமையாக்கப்பட்டால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்பதும், இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதும் மத்திய அரசின் எண்ணம்.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

அதற்கேற்ப புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல்வேறு மாநிலங்களில் குறைந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாயின. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசு இவ்வாறு மெனக்கெட்டு வரும் நிலையில், போக்குவரத்து போலீசார் ஒரு சிலரின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கும் வகையில் உள்ளன.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் வசூல் வேட்டை நடத்துவது தொடர்பான புகார்கள் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. இதில், சில புகார்கள் அவ்வப்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுகின்றன. லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீசார் சிசிடிவி அல்லது வாகன ஓட்டிகளின் ஹெல்மெட்களில் இருக்கும் கேமராக்களில் சிக்கி கொள்வதன் மூலம் இது தொடர்பான புகார்கள் நிரூபணம் செய்யப்படுகின்றன.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

அத்தகைய வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாவது உண்டு. இந்த வகையில் சென்னை மதுரவாயல் போக்குவரத்து காவல் துறையினர் மீதும் தற்போது ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் உறுப்பினர் கணேஷ்குமார் என்பவர் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

கேஷ்லெஸ் முறையில் அபராதம் வசூலிக்கும் பணிகளின் போது மதுரவாயல் போக்குவரத்து போலீசார் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டுதான், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கேஷ்லெஷ் முறையில் அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தற்போது கேஷ்லெஷ் முறையில் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால் இதிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாகதான் தற்போது மதுரவாயல் போக்குவரத்து போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது வாகன ஓட்டிகளுக்கு மதுரவாயல் போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

ஆனால் அவர்களிடம் 200 ரூபாயை வசூலித்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பணம் செலுத்தவில்லை என பெண்டிங் ரசீது கொடுத்து அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக லாரி டிரைவர்களை குறிவைத்துதான் மதுரவாயல் போக்குவரத்து போலீசார் வசூல் வேட்டையை நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

வாகன ஓட்டிகளிடம் இவ்வாறு முறைகேடாக வசூலிக்கும் பணத்தில், உயர் அதிகாரிகள் சிலருக்கும் மதுரவாயல் போக்குவரத்து காவல் துறையினர் பங்கு அளித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் இந்த முறைகேட்டை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த முறைகேடு பல மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

இந்த முறைகேட்டை நுண்ணறிவு பிரிவு போலீசார் முன்கூட்டியே மோப்பம் பிடித்து, மாநகர போலீஸ் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தற்போதுதான் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனரும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

எனவே இந்த விசாரணைக்கு பயந்து கொண்டு மதுரவாயல் போக்குவரத்து போலீசார் ஒரு சிலர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உரிய முறையில் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுக்க பகிரங்கமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே வெளியில் எங்கு சென்றாலும் வாகன ஓட்டிகள் ஒரு வித கலக்கத்துடன் பயணிக்கின்றனர். இத்தகைய கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பு, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் உள்ளது.

Source: Polimernews

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

தமிழக போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. சமீபத்தில் இளைஞர் ஒருவரிடம் திருப்பூரில் போலீஸ்காரர் ஒருவர் லஞ்சம் வாங்க முயன்றார். பொதுவாக பலர் லஞ்சம் கொடுத்து விடும் சூழலில், அந்த இளைஞரோ போலீஸ்காரரை ஓட ஓட விரட்டினார்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

அந்த இளைஞர் எடுத்த வீடியோவால் போலீஸ்காரர் சிக்கி கொண்டார். இறுதியாக அந்த போலீஸ்காரருக்கு என்ன நடந்தது? என தெரிந்தால், அவரை மிரண்டு ஓட வைத்த அந்த இளைஞருக்கு கண்டிப்பாக சபாஷ் போடுவீர்கள். இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவது கிடையாது.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணம். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை கட்டாய ஹெல்மெட் விதி பெயரளவிற்குதான் உள்ளது.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதியை அமல்படுத்துவதில் உள்ள சுணக்கம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் கூட சமீபத்தில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. இவ்வளவு ஏன். இந்த விதியை முறையாக அமல்படுத்த வேண்டிய போலீசார் சிலரே ஹெல்மெட் அணிவதில்லை.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இப்படி ஹெல்மெட் அணியாமல் இருந்த போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால், அது தொடர்பாக விசாரணை நடத்திய உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

திருப்பூரை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர், சமீபத்தில் திருப்பூர்-பல்லடம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் என்ற போலீஸ்காரர், கணேஷை நிறுத்தி விசாரித்தார்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். ஆனால் அங்கு ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இதன்பின் மாவட்ட ஆயுதப்படையில் ராதாகிருஷ்ணன் வேலை செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன், கணேஷை நிறுத்தி விசாரித்தபோது, அவருடன் வேறு போலீஸ்காரர்கள் யாருமே இல்லை.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

அவர் மட்டும் தனியாக ஒரு பைக்கில் நின்று கொண்டு வாகன தணிக்கை செய்து வந்தார். அந்த பைக்கில் நம்பர் பிளேட் இருந்தது. ஆனால் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை. அனேகமாக அது புதிய பைக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவரிடம் ஹெல்மெட்டும் இல்லை.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

ஆனால் இதையெல்லாம் உணராத போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன், கணேஷ் செல்போனில் பேசியபடி இரு சக்கர வாகனத்தை ஓட்டியதாக குற்றம் சாட்டினார். இதை கணேஷ் மறுக்கவே வாக்குவாதம் உண்டானதாக கூறப்படுகிறது.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இதன் பின் தன் நண்பர் சரவணன் என்பவரை கணேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அவர்கள் இரண்டு பேரும் போலீஸ்காரர் ராதாகிருஷ்ணனிடம் நீண்ட நேரம் பேசி பார்த்தனர். ஆனால் எதற்கும் பலன் இல்லை. போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் லஞ்சம் பெற முயன்றதாக கூறப்படுகிறது.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இதனால் கோபமடைந்த கணேஷ், ராதாகிருஷ்ணனின் பைக்கில் பதிவு எண் குறிப்பிடப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? உங்கள் ஹெல்மெட் எங்கே? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் மிரண்டு போன ராதாகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

முன்னதாக அங்கு நடந்த சம்பவங்களை கணேஷ் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி, போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதனால் இந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இதில், ராதாகிருஷ்ணன் மீண்டும் பொது இடத்தில் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

சென்னை ஐகோர்ட்டின் கண்டிப்பிற்கு பிறகு தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் நபர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

ஆனால் இதில் சில போலீசாரே ஹெல்மெட் அணியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இருந்தபோதும் தற்போது நடவடிக்கைகள் தீவிரமாகி வருவதால், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்

இது போலீசாரின் நடவடிக்கைகளில் இருந்து உங்களை காப்பதுடன், நீங்கள் ஒருவேளை சாலை விபத்தில் சிக்க நேர்ந்தால், உங்கள் உயிரையும் காப்பாற்றும். தற்போது புதிதாக டூவீலர் வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என டீலர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Traffic Police Demands Bribe From Truck Drivers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X