கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

பெண்ணின் சாமர்த்தியத்தால் வழிப்பறி கொள்ளையர்கள் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

இந்தியாவில் ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் மாதங்களில், வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வரும் சூழலில், வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

இரு சக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம், சைக்கிள், பைக் ஆகிய வாகனங்களில் செல்வோரிடமும் கைவரிசையை காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் சென்னையில் ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நினைவாற்றல் காரணமாக கொள்ளையர்கள் இருவர், காவல் துறையினரிடம் சிக்கி கொண்டுள்ளனர்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) இந்த துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் பிரபாவதி என்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தினமும் பணி முடிந்த பிறகு பிரபாவதி சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

இதன்படி கடந்த சனிக்கிழமையும் அவர் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சைக்கிளின் முன்பக்கம் இருந்த கூடையில், பிரபாவதி கைப்பையை வைத்திருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் அந்த கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தனர்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

இதுகுறித்து உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்தில் பிரபாவதி புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் இருந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் என்பதால், அந்த பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை பிடிக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

ஆனால் ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்தது. எனவே காவல் துறையினரால் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய முடியவில்லை. எனவே விசாரணையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பிரபாவதியின் நினைவாற்றல் காவல் துறையினருக்கு கை கொடுத்தது. கொள்ளையர்கள் வந்து சென்ற இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் பிரபாவதியின் மனதில் பதிந்து விட்டது.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

அந்த பதிவு எண்ணை அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதன் மூலம் அந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கண்டறிந்தனர். பதிவு எண் மூலம் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டறிவது மிகவும் சுலபமான காரியம்தான். இதன்படி கண்டறியப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

இதில், அவரிடம் இருந்து இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்ற தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை அடிப்படையாக வைத்து கொள்ளையர்கள் இருவரையும் காவல் துறையினர் பிடித்து விட்டனர். அவர்களில் ஒருவரின் பெயர் ரஞ்சய். அவருக்கு வெறும் 19 வயது மட்டுமே ஆகிறது. மற்றொருவர் சிறார் ஆவார்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

தற்போது அவர்கள் இருவரும் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறையினரிடம் சிக்கியுள்ள இரு கொள்ளையர்களிடம் இருந்தும் கைப்பை மற்றும் 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

கொள்ளையர்களை காவல் துறையினர் விரைவாக பிடித்ததற்கு பிரபாவதியின் நினைவாற்றல்தான் முக்கிய காரணம். சிசிடிவி கேமராக்கள் இருந்தால், இது போன்ற வழக்குகளில் எளிதாக துப்பு துலங்கி விட முடியும். ஆனால் சிசிடிவி கேமராக்கள் இல்லாதபட்சத்தில், கொள்ளையர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவு எண்ணை பாதிக்கப்பட்டவர்கள் மனதில் குறித்து கொள்வது மிகவும் முக்கியம்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

காவல் துறையினரின் விசாரணைக்கு இது மிக உதவிகரமாக இருக்கும். இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக இதுபோன்ற குற்ற செயல்களுக்கு கொள்ளையர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்தினால், காவல் துறையினரிடம் அவர்கள் எளிதாக சிக்கி கொள்வார்கள்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

இதன் காரணமாக எங்கேயாவது இருந்து திருடப்பட்ட வாகனங்கள் அல்லது மற்றவர்களுக்கு சொந்தமான வாகனங்களைதான் அவர்கள் பயன்படுத்துவார்கள். தங்களுக்கு தெரிந்தவர்களுடைய வாகனங்களை பயன்படுத்தினால் கூட, இந்த சம்பவத்தை போன்று காவல் துறையினரிடம் கொள்ளையர்கள் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

எனவே திருடப்பட்ட வாகனங்கள்தான் கொள்ளையர்களின் முதல் தேர்வு. இப்படிப்பட்ட நபர்களிடம் உங்கள் வாகனத்தை பறிகொடுத்து விடாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வாகனத்தை பறிகொடுத்ததுடன் மட்டுமல்லாது, தேவையற்ற பிரச்னைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இச்சம்பவம் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai: Vehicle Registration Number Helps Cops To Arrest Thieves. Read in Tamil
Story first published: Wednesday, August 12, 2020, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X