வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணத்தை கேட்டு பைக் ஆர்வலர்கள் கண் கலங்கி வருகின்றனர்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

மோட்டார்சைக்கிள்கள் மீது காதல் கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம். என்னதான் கார்கள் இருந்தாலும் கூட பைக் பயணங்கள்தான் அவர்களுடைய விருப்பமாக இருக்கும். ஆசை ஆசையாக வாங்கிய பைக்கை பொக்கிஷம் போல அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த பைக்கிற்கு ஏதாவது ஒன்று என்றால், அவர்களுடைய மனம் சந்திக்கும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

அதுவும் தங்களுக்கு மிகவும் விருப்பமானவர்கள் வாங்கி கொடுத்த பைக் என்றால், அவர்களின் நினைவாக அந்த வாகனம் மீது கூடுதல் அக்கறையை பைக் ஆர்வலர்கள் காட்டுகின்றனர். சிறு கீறல் கூட விழுந்து விடாமல், அதனை பொத்தி பொத்தி பாதுகாக்கின்றனர். அப்படி பாதுகாக்கப்பட்ட பைக் தொலைந்து போனதால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

இந்த வருந்தத்தக்க சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தந்தையின் நினைவாக இருந்த மோட்டார்சைக்கிள் தொலைந்து போனதால், தியாகராஜன் என்ற அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெரு பகுதியில் இவர் வசித்து வந்தார். தியாகராஜனுக்கு 21 வயது மட்டுமே ஆகிறது.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

செல்போன் கடை ஒன்றில் தியாகராஜன் வேலை செய்து வந்தார். இவருக்கு மோட்டார்சைக்கிள்கள் என்றால், மிகவும் பிடிக்கும். குறிப்பாக யமஹா ஆர்15 வாங்க வேண்டும் என்பது இவரது ஆசை. எனவே மிடில்-க்ளாஸ் குடும்பம் என்ற போதிலும், அவரது தந்தை தன் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, யமஹா ஆர்15 பைக்கை வாங்கி கொடுத்தார்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

ஆனால் மகனுக்கு பைக் வாங்கி கொடுத்த அடுத்த சில மாதங்களில் உடல் நலக்குறைவு காரணமாக, அவரது தந்தை உயிரிழந்து விட்டார். எனவே தந்தையின் நினைவாக அந்த பைக்கை தியாகராஜன் கண்ணும், கருத்துமாக பராமரித்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி அவரது பைக் கொள்ளையடிக்கப்பட்டது.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால் தியாகராஜன் மனமுடைந்து போனார். எனினும் பைக்கை கண்டுபிடித்து தரும்படி வேப்பேரி காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்தார். ஆனால் பைக் பறிபோனதில் இருந்தே அவர் மனமுடைந்த நிலையில்தான் இருந்து வந்தார்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

மறுபக்கம் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை, போலீசார் தேடி வந்தனர். ஆனால் தற்போது கொரோனா பிரச்னை காரணமாக, இந்த வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தியாகராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

ஆனால் அம்முறை அவரை எப்படியோ காப்பாற்றி விட்டனர். இதன்பின்பு ஊரடங்கு முடிவடைந்த பின்னர், பைக்கை கண்டுபிடித்து தருவதாக போலீசார் அவரிடம் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மோட்டார்சைக்கிள் மாயமாகி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டதால், நேற்று முன் தினம் (மே 6ம் தேதி) தியாகராஜன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக வாகனங்களை மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் கொள்ளையர்களிடம் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதுவும் விலை உயர்ந்த வாகனங்கள் என்றால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

இல்லாவிட்டால் கொள்ளையர்களின் பணி எளிதாகி விடும். வாகனத்தை பார்க்கிங் செய்த பிறகு, மறக்காமல் சாவியை எடுத்து சென்று விடுங்கள். ஒரு சிலர் சாவியை வாகனத்திலேயே விட்டு சென்று விடுகின்றனர். இது கொள்ளையர்களின் பணியை சுலபமாக்கி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். கார் என்றால், டோர்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

அத்துடன் இரவு நேரங்களில் வேலை செய்வதைதான் வாகன கொள்ளையர்கள் விரும்புவார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். எனவே எப்போதும் இருட்டில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். இரவு நேரங்களில் வாகனங்களை எங்கே பார்க்கிங் செய்கிறோம்? என்ற விஷயத்தில் எப்போதும் கவனமாக இருங்கள். கூடுமான வரை வெளிச்சம் உள்ள பாதுகாப்பான இடத்தில் பார்க்கிங் செய்யவும்.

வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளைஞர்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் பைக் காதலர்கள்...

ஒரு சிலர் இடப்பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் வீடுகளுக்கே வெளியே பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதேபோல் டிராக்கிங் டிவைஸ்களையும் வாங்கி வாகனங்களில் பொருத்தி கொள்ளலாம். ஒருவேளை உங்கள் வாகனம் திருடப்பட்டால், அதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

Note: Yamaha R15 Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Youngster Commits Suicide After Losing Bike - Tips To Prevent Vehicle Theft. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X