கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

சென்னையில் 2வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

சென்னை மீனப்பாக்கம் சர்வதேச விமான நிலையம் இந்தியா முழுவதும் பிரபலமான விமான நிலையங்களுள் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், சென்னையின் தற்போதைய சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 57கிமீ தொலைவில் 2வது சர்வதேச விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

இந்த புதிய சர்வதேச விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டு ஆக விளங்கும் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் எங்களது உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் மற்றுமொரு மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் வளர்ச்சி பெற்ற & கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

நம் மாநிலத்திற்கு வருகை தரும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள சென்னை விமான நிலையம் ஆனது ஆண்டுக்கு சராசரியாக 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்க பணிகளுக்கு பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் அதிகப்பட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் மென்மேலும் அதிகரித்துவரும் விமான பயணிகளின் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

அதன்படி, புதிய விமான நிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையம் ஆனது 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுத்தளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்பு பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின் புதிய விமான நிலையத்திற்கான திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்ட மதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும். மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008இல் வெளியிட்ட புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வழிக்காட்டுதலின்படி தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் பெற மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்பிக்கப்படும்.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

இட அனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதனை தொடர்ந்து விமான நிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி உள்ளிட்டவை மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?

பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லாகும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NOTE: Images are used for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennais 2 nd international airport to come up at parandur
Story first published: Tuesday, August 2, 2022, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X