பெட்ரோல், டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா?

பெட்ரோல் விலையைப் போல CNG விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது. எவ்வளவு விலை ஏறியுள்ளது? ஏன் இந்த விலையேற்றம்? இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

இந்தியாவில் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110-ஐ தாண்டி பல மாநிலங்களில் விற்பனையாகிறது. இந்தியாவில் போக்குவரத்திற்கு பெட்ரோல் டீசல் தான் மிகவும் முக்கியம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல் டீசல் இன்ஜினகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

பெட்ரோல் விலையேறினால் அது போக்குவரத்துறைக்கு மட்டும் பாதிப்பல்ல, இது சாதாரண மக்கள் வரை இதன் தாக்கம் இருக்கும். பெட்ரோல் விலை அதிகமானால் சரக்கு போக்குவரத்தின் செலவு அதிகமாகும். இந்த செலவு இறுதியாக மக்களின் தலையில் தான் வந்து முடியும். அதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் பெரிய அளவில் சம்மந்தம் இருக்கிறது.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

இந்நிலையில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி வாகனங்களை ஆட்டோமொபைல் துறை அறிமுகப்படுத்தியது. இன்று கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரு நகரங்களில் ஆட்டோ ரிக்ஷாக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் உடன் செயல்பட தடை உள்ளது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

அங்கெல்லாம் சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோக்கள் தான் பயன்பாட்டிலிருந்து வருகிறது. இது போகப் பலர் தங்கள் கார்களை சிஎன்ஜி பொருத்தப்பட்ட கார்களாக மாற்றிப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கியான காரணம் பெட்ரோல் டீசலை விட சிஎன்ஜி எரிவாயுவின் செலவு குறைவு என்பதால் மக்கள் பலர் சிஎன்ஜி வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டனர்.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

மேலும் பெட்ரோல் டீசல் உமிழும் மாசுவை விட சிஎன்ஜி கேஸ் வாகனங்கள் உமிழும் மாசு குறைவு என்பதால் அரசும் இந்த ரக வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த ஊக்குவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கேஸ் விலை எகிறிக்கொண்டே

இருக்கிறது. இன்றைய பெட்ரோல் விலையை கேஸ் விலையும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

இந்நிலையில் டில்லியில் ஒரு கிலோ கேஸ் ரூ71.61 ஆக இருந்தது. தற்பேஆது ரூ73.61 ஆக உயர்ந்துள்ளது பெட்ரோல் விலையை விட கேஸ் விலை குறைவாகத் தானே இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம் ஆனால் கேஸ் விலை உயர்வு எவ்வளவு வேகமாக இந்த உயர்வை அடைந்துள்ளது எனத் தெரிந்தால் அடேங்கப்பா என ஆச்சரியப்படுவீர்கள்.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

கடந்த மார்ச் மாதம் 7ம் தேதிக்குப் பிறகு சிஎன்ஜி கேஸ் வரை இதுவரை 12 முறை விலையேறியுள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் கேஸ் விலையிலிருந்து மார்ச் மாதம் விற்பனையான சிஎன்ஜி கேஸ் விலை ரூ 17.6 கிலோ குறைவு, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சிஎன்ஜி கேஸ் விலை கிலோவிற்கு ரூ7.5 உயர்ந்துள்ளது.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

இதுவே கடந்தாண்டு கேஸ் விலையை ஒப்பிடும் போது கடந்தாண்டை விட கேஸ்விலை இந்தாண்டு 60 சதவீதம் அதிகமாகியுள்ளது. அதாவது தற்போது விற்பனையாகும் விலையிலிருந்து கிலோவிற்கு ரூ30.21 குறைவான விலையிலேயே விற்பனையாகி வந்தது.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

இந்த விலையேற்றம் கடந்த 2021 அக்டோபர் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த சிஎன்ஜி கேஸ் விலையேற்றம் என்பது கடந்த ஏப்ரல் 1ம் தேதி அரசு நேச்சுரல் கேஸின் விலையை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியதால் இந்த அதிக விலையேற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

நேச்சுரல் கேஸை கம்பரஸ் செய்துதான் சிஎன்ஜி என வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதே கேஸ்தான் வீட்டில் சமையல் எரிவாயு கேஸாகவும் விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் சமீபத்தில் ரூ100 வரை விலை அதிகரித்துள்ளது. தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரே ஒரு சிலிண்டர் ரூ1000-த்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல் , டீசலை தூக்கிச் சாப்பிடும் CNG விலை ! இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா ?

இந்த கேஸ் விலை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள கேஸ் விலையை மையாக வைத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த மாநில வரியைப் பொருத்து கேஸ் விலையில் மாற்றம் இருக்கும். பெட்ரோல் டீசல் விலைதான் தாங்க முடியவில்லை என்றால் இந்த பக்கம் சைலண்டாக கேஸ் விலையும் ஏறியுள்ளது. யாரும் எதிர்பாராத இந்த கேஸ் விலை உயர்வு சிஎன்ஜி வாகனங்களை வைத்திருப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cng price hiked in last few months know the history
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X