2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

கோவை போலீசார் 2.09 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து அதிரடி காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக தமிழக போலீசாரும் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சூழலில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிரான கோயமுத்தூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கோவை மாநகர போலீசார் நடப்பாண்டில் தற்போது வரை (டிசம்பர் 5ம் தேதி வரை), 2.09 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இந்த கால கட்டத்தில் கோவை மாநகரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தது தொடர்பாக 2,78,472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

இதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தது தொடர்பாக 33,818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இதே கால கட்டத்தில் கோவையில் இதுபோன்ற வழக்குகள் வெறும் 2.30 லட்சம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

அதிவேகத்தில் பயணம் செய்தது தொடர்பாக 7,570 வழக்குகளும், சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி சென்றது தொடர்பாக 31,755 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 15,042 வழக்குகளும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியது தொடர்பாக 3,453 வழக்குகளும், பஸ், ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றியது தொடர்பாக 1,193 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 2.09 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்றனர்.

2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''46,966 டிரைவிங் லைசென்ஸ்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யும்படி பரிந்துரைத்துள்ளோம். தற்போதைய நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 29,824 டிரைவிங் லைசென்ஸ்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதன் விபரங்கள் பரிவாகன் வெப்சைட்டில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன'' என்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coimbatore City Police Collected Rs.2.09 Crore Fine From Traffic Rule Violators. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X