காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

உங்கள் காரில் உள்ள ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

இன்றைய நவீன யுக கார்கள் பல்வேறு வசதிகளுடன் வருகின்றன. எனவே கார்களில் உள்ள பிரச்னைகளை உரிமையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக, ஸ்பீடோமீட்டர் கன்சோலில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு எச்சரிக்கை விளக்குகளை வழங்குகின்றன. இந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம்? என்பது புரியாமல் சிலர் குழம்பி கொள்கின்றனர்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

எனவே கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் காணப்படும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம்? என்பதை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். ஆனால் இங்கே வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை விளக்குகள் எல்லாம் நீங்கள் சொந்தமாக வைத்திருக்கும் காரிலும் இருக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

பெரும்பாலான கார்களில் காணப்படும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளை பற்றி மட்டுமே நாங்கள் இந்த செய்தியில் தெரிவித்துள்ளோம். எனவே உங்கள் காரில் உள்ள ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கிற்கும் என்ன அர்த்தம்? என்பதை சரியாக தெரிந்து கொள்ள உரிமையாளர் கையேட்டை (Owner Manual) பார்ப்பது நல்லது.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

டோர் ஓபன் வார்னிங் லைட்

ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படவில்லையென்றால், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும். ஒரு சில கார்களில் எந்த கதவை மீண்டும் சரிபார்க்க வேண்டும்? என்ற சரியான தகவலும் காட்டப்படும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

வாஷர் ஃப்ளூயிட் ரிமைண்டர்

வைப்பர் திரவு அளவு மிகவும் குறைவான நிலைக்கு செல்லும்போது இந்த விளக்கு எரியும். ஆனால் இந்த எச்சரிக்கை விளக்கு பொதுவாக பிரீமியம் கார்களில் மட்டுமே காணப்படும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

ஏபிஎஸ் லைட்

காரின் ஏபிஎஸ் பிரேக்கில் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கோளாறுகள் இருந்தால், இந்த விளக்கு எரியும். ஆனால் இது ஏபிஎஸ் பிரேக்கில் உள்ள கோளாறுகளை மட்டுமே குறிக்கும். இந்த விளக்கு எரிவதால், வழக்கமான பிரேக்கிங் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம் கிடையாது.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

க்ரூஸ் கண்ட்ரோல் லைட்

உங்கள் காரில் நீங்கள் க்ரூஸ் கண்ட்ரோலை ஆக்டிவேட் செய்திருக்கும்போது இந்த விளக்கு ஒளிரும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

ஆட்டோமேட்டிக் ஷிஃப்ட் லாக்

ஆட்டோமேட்டிக் கார்களை பொறுத்தவரை நீங்கள் நியூட்ரலில் இருந்து கியருக்கு மாறும்போது பிரேக்கை அழுத்த வேண்டும். ஆனால் நீங்கள் பிரேக் பெடலை அழுத்தாமல், நியூட்ரலில் இருந்து கியருக்கு மாற முயற்சித்தால், பெரும்பாலான கார்களில் இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

டிராக்ஸன் கண்ட்ரோல் ஐகான்

தற்போது ஏராளமான கார்கள் டிராக்ஸன் கண்ட்ரோல் வசதியுடன் வருகின்றன. அந்த கார்களில் டிராக்ஸன் கண்ட்ரோலை டிஆக்டிவேட் செய்வதற்கான வசதிகளும் இருக்கும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது கன்சோலில் இந்த ஐகான் தோன்றும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

பனி விளக்கு ஐகான்

நீங்கள் பனி விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்யும்போது, ஸ்பீடோமீட்டர் கன்சோலில் இந்த ஐகான் தோன்றும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஐகான்

தற்போது பல்வேறு கார்கள் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உடன்தான் வருகின்றன. காரின் ஏதேனும் ஒரு டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தாலோ அல்லது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலோ இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

ஏர்பேக் ஐகான்

காரை ஸ்டார்ட் செய்த பிறகும் கூட, இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்து கொண்டே இருந்தால், காரின் ஏர்பேக் சிஸ்டமில் ஏதேனும் கோளாறுகள் இருப்பதாக அர்த்தம். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு செல்வதன் மூலமாக மட்டுமே இதனை சரி செய்ய முடியும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

சீட் பெல்ட் வார்னிங்

பெரும்பாலான கார்களின் ஸ்பீடோமீட்டர் கன்சோலில் பொதுவாக காணப்படும் எச்சரிக்கை விளக்கு இது. காரை ஓட்டும்போது நீங்கள் சீட்பெல்ட் அணியவில்லை என்றால், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

உங்களிடம் பிரீமியம் அல்லது சொகுசு கார் இருந்தால், டிஸ்ப்ளே பகுதியில் இன்னும் பல்வேறு ஐகான்கள் வழங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் காரில் இருக்க கூடிய ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கின் சரியான அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், காரின் உரிமையாளர் கையேட்டை பார்ப்பது சிறந்ததாக இருக்கும்.

காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே...

நீங்கள் உங்களுடைய காரில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, உரிமையாளர் கையேட்டை கையிலேயே வைத்து கொள்வதும் நல்லது. இன்னும் உங்களுக்கு தெரிந்த பல்வேறு எச்சரிக்கை விளக்குகள் பற்றிய தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Common Car Warning Lights And Meanings. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X