கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

குஜராத் மாநிலத்தில் காரை திருடிய திருடனை புகார் வந்து 18 மணி நேரத்தில் போலீசார் படித்துள்ளார். சினிமாவை மிஞ்சும் பாணியில் அவர்கள் திருடனை பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பர

By Balasubramanian

குஜராத் மாநிலத்தில் காரை திருடிய திருடனை புகார் வந்து 18 மணி நேரத்தில் போலீசார் படித்துள்ளார். சினிமாவை மிஞ்சும் பாணியில் அவர்கள் திருடனை பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து முழு செய்தியை கீழே விரிவாக காணலாம்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

குஜராத் மாநிலம் சூரத்தில் வெளியூரில் இருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் காரை அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு நண்பரை பார்த்து விட்டு திரும்ப வந்து பார்க்கம் போது தன் கார் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

இதை நண்பரிடம் கூறி அப்பகுதி முழுவதும் தேடியும் அவரது கார் கிடைக்கவில்லை. அப்பொழுது அவரது செல்போனிற்கு ஒரு போன் வருகிறது. அதில் மர்ம நபர் ஒருவர் பேசி தான் தான் அவரது காரை திருடியுள்ளதாகவும் பணம் தந்தால் காரை திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

இதையடுத்து அவரது அவரது நண்பரும் சூரத்தில் உள்ள போலீசில் இது குறித்து புகார் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் காரை திருடியதாக போன் செய்தவரின் நண்பரை டிராக் செய்ய துவங்கினர். அவரது செல்போன் பரோதா பகுதியில் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

இதையடுத்து காரை பறிகொடுத்தவர், அவரது நண்பர், மற்றும் 3 போலீசார் அவர்களுடன் காரில் பரோதாவிற்கு சென்றனர். அங்கு பல்வேறு பகுதியில் தேடியதில் ஒரு தெருவோர இளநீர் கடை அருகே திருடு போன கார் நின்று கொண்டிருந்தது. இதை கண்டவும் இந்த குழு கார ஓரமாக நிறுத்தி திருடனை பிடிக்க தயாரானார்கள்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

முதலில் காரில் இருந்து இரண்டு போலீசார் இறங்கி சாதாரணமாக நடந்து செல்வது போல் சென்று இந்த காரை திருடியவனை சுற்று வளைத்தனர். பின்பு காரில் இருந்தவர்கள் தாங்கள் வந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி சென்று திருடனை பிடித்தனர்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சுரத் போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் முழுவதும் திருடு போன காரை தேடி சென்றவர்கள் பயன்படுத்திய காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த கேமரா, காருக்குள்ளும் காருக்கு வெளியிலும் நடக்கும் விஷயங்களை பதிவு செய்யும் விதமாக இருந்ததால் இரண்டுபுறங்களும் என்ன நடந்தது என நம்மால் உணர முடிகிறது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இச்சம்பவம் கார் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்ட 18 மணி நேரத்தில் நடந்துள்ளது. அதாவது புகார் அளிக்கப்பட்டு 18 மணி நேரத்தில் காரை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து காரை திருடு கொடுத்தவர் கார் திரும்ப கிடைத்ததை ஏஎண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைந்தர்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

இச்சம்பவம் பதிவாகியிருந்த வீடியோவை காரை பறிகொடுத்தவரின் நண்பர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. நவீன காலத்தில் திருடர்கள் காரில் எவ்வளவு லாக்குகள் இருந்தாலும் அதை எல்லாம் எளிதாக உடைத்துவிட்டு காரை திருடி விடுகின்னறர். இவ்வாறான திருடனர்களிடம் இருந்து உங்கள் காரை பாதுகாக்க சில டிப்ஸ்கள் உங்களுக்காக சில டிப்ஸ்களை கீழே வழங்கியுள்ளோம்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

விலை உயர்ந்த பொருட்களை காரில் வைக்காதீர்கள்

காரை திருடுபவர்களுக்கு முக்கிய காரணம் பணம் தான். ஆனால் வெறும் காரை திருடினால் இன்றை சூழ்நிலையில் வெளியே விற்பது கடினம். மேலும் காரிலும் அதிக பாதுகாப்பு வசதிகள் வந்து விட்டது. ஆனால் நீங்கள் காருக்குள் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள், பணம் ஆகியவற்றை வைத்திருந்தால் அதன் மீது ஆசைப்பட்டு உங்கள் கார் திருடப்படலாம். இதனால் நீங்கள் காரை பார்க் செய்து விட்டு செல்லும் போது காருக்குகள் விலை உயர்ந்த பொருட்களை வைத்து விட்டு செல்லாதீர்கள்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

பாதுகாப்பான பார்க்கிங்

பொதுவாக திருடப்படும் கார்கள் எல்லாம் பொதுவெளியில் எந்த வித பாதுகாப்பும் இல்லாத இடத்திலோ, அல்லது சரியான பாதுகாவல் இல்லாத பார்க்கிங் பகுதியிலோ தான் திருடப்படுகிறது. இதனால் உங்கள் காரை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்வதே காரை திருட்டில் இருந்து 90 சதவீதம் பாதுகாத்து விடலாம். மேலும் சிசிடிவி கேமரா உள்ள பகுதியில் காரை பார்க் செய்வது கார் திருடப்படாலும் அதை கண்டு பிடிக்க சிலவழிகள் கிடைக்கும்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

பொதுவெளியில் காரை ஆன் செய்துவிட்டு போகதீர்கள்

சில கார் திருட்டுகள் காரில் ஒரு கடைக்கு சென்று சிறு பொருட்கள் வாங்குவதற்காக சிலர் காரை ஆன் செய்து வைத்து கொண்டே கடைக்கு செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் செல்லும் போது கார் திருடப்படுகிறது. இந்த பழக்கத்தையும் விட வேண்டும்.

கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்

காரில் ஜிபிஎஸ்

இன்று ஜிபிஎஸ் கருவிகள் குறைந்த விலையில் மார்கெட்டில் விற்பனைக்கு வந்து விட்டது. இதனால் இந்த கருவியை வாங்கி யார் கண்ணிற்குள் எளிதில் புலப்படாத இடத்தில் இந்த கருவியை பொருத்தி விடுங்கள். மேலும் இந்த கருவியை பொருத்தியிருப்பது பற்றி உங்கள் நண்பரிடம் கூட தெரிவிக்காதீர்கள், ஒரு வேலை உங்கள் கார் திருடப்பட்டால் அந்த கார் எங்கிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Cop & car owner catch Innova Crysta thief; Captured on live video. Read in Tamil
Story first published: Tuesday, June 12, 2018, 15:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X