நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

நகை கடை மூலம் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற மன்சூர் கானின், விலையுயர்ந்த கார்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் முகமது மன்சூர் கான். இவர் சிவாஜிநகரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில், தனது நகைக்கடையில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக அவர் அறிவித்திருந்தார். இதனை நம்பிய பெங்களூரு மக்கள் பெருமளவில் திரண்டு முதலீடு செய்தனர்.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இந்நிலையில், கடந்த 8ம் தேதி, நகைக் கடை அதிபர் மன்சூர் கான் திடீரென மாயமானார். மேலும், சிவாஜிநகர் தொகுதி எம்எல்ஏ ரோஷன் பெய்க், தன்னிடம் வாங்கிய ரூ. 400 கோடியை தர மறுப்பதாகவும். அதனைத் திருப்பி தரும்படி கேட்டதற்கு, தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார் என்ற ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். இதன்காரணமாக, தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாக அந்த ஆடியோவில் கூறியிருந்தார்.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இதனால், அதிர்ச்சியுற்ற முதலீட்டாளர்கள், தங்களின் பணம் மோசம் செய்யப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல், மன்சூரின் நகை கடைக்கு முன்பாக கடந்த 10ம் தேதி போராட்டம் நடத்தினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், முதலீடு செய்த மக்களிடம் புகாரளிக்கும்படி அறிவுறுத்தினர். இந்த புகாரின்மூலம், இதுவரை ரூ. 1,230 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இந்த சம்பவம் தொடர்பாக, மன்சூர் நிர்வாகத்தின் இயக்குநர்களாக பணியாற்றி வந்த 7 பேரை போலீஸார் கைது செய்து, விசாரித்தனர். அதில், மன்சூர் துபாய் தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக மன்சூர் கான் மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

அதேசமயம், மன்சூர் கான் மீது இதுவரை ஏராளமான மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு, இதுவரை 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர், அவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புகார்களின்கீழ் போலீஸார் தங்களின் தீவிர விசாரனையைத் தொடங்கியுள்ளனர்.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இந்நிலையில், மன்சூர் கான் பயன்படுத்தி வந்த லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆகிய கார்களை போலீஸார் பறிமுதல் செய்யதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை, அவர் நாட்டை விட்டு தப்பி செல்லும்போது, பெங்களூரு ஏர்போர்ட் வளாகத்தில் உள்ள, கார் பார்க்கிங் விட்டுச் சென்றுள்ளார். இதையறிந்த போலீஸார், அந்த காரை அங்கிருந்தே பறிமுதல் செய்தனர்.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இந்த ரேஞ்ச் ரோவர் காரில் 3.0 லிட்டர் வி6 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 225 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த காரை, மன்சூர் பாண்டிச்சேரி பதிவெண்ணில் வாங்கியுள்ளார். வரியைக் குறைக்கும் விதமாக, அவர் பாண்டிச்சேரி ஆர்டிஓ-வில் பதிவுச் செய்துள்ளார்.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இதேபோன்று, மன்சூருக்கு மிகவும் பிடித்தமான காரான, ஜாகுவார் எக்ஸ்எஃப் மாடலை, அவர் வீட்டில் வைத்தே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை அவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த லக்சூரி கார், 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜினைப் பொற்றுள்ளது. இது, அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

இதைத்தொடர்ந்து, மன்சூர் கானின், அசையும் மற்றும் அசையாத சொத்துக்களையும் பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டு வருகின்றது. மேலும், அவரை துபாயில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...!

அண்மைக் காலங்களாக நாட்டில் மோசடி சம்பவங்களை நிகழ்த்தி விட்டு, வெளிநாடு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், இதற்கு முன்பாக வைர வியாபாரி நிரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், வங்கியில் பெற்றிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய்களை மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றனர். இவர்களிடம், இதுபோன்றே சொத்துக்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cop seizes ima scam mansoor khans cars - Read in Tamil.
Story first published: Saturday, June 15, 2019, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X