“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

வெளிநாடுகளில் பரவலாக உபயோகத்தில் இருக்கும் ஏடிவி எனப்படும் அனைத்து-பாதை வாகனங்கள் நம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும் இத்தகைய வாகனன்களை பொது சாலைகளில் பயன்படுத்துவதற்கு எப்போதோ தடை விதிக்கப்பட்டுவிட்டது.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

இதனை தொடர்ந்தே டிராக்டர்களை உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கின. இருப்பினும் தனிப்பட்ட இடங்களில் சில ஏடிவி பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுடன் சாலையில் போலீஸாரின் கண்ணில் சிக்கினால் பெரிய பிரச்சனை தான். அதிகப்பட்சமாக லட்சங்களில் கூட அபராதத்தினை செலுத்தி வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

அவ்வாறு தான் இங்கு ஒருவர் தனது ஏடிவி-இல் பயணித்தப்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளார். ஆனால் இவர் ஆஃப்-ரோட்டில் இருந்ததால் எந்த அபராதத்திற்கும் உள்ளாகவில்லை. மாறாக போலீஸாருக்கே தனது ஏடிவி-ஐ டெஸ்ட் ட்ரைவ் கொடுத்துள்ளார். அதன்பின் நடந்தவற்றை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

ஒரு போலீஸ் குழு ஏடிவி ஒன்றின் உரிமையாளரிடம் இருந்து அந்த வாகனத்தை பற்றிய தகவல்களை கேட்க ஆரம்பிப்பதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. உரிமையாளர் வாகனத்தில் இடம்பெற்றுள்ள வசதிகளை ஒவ்வொன்றாக கூறுகிறார். இதனுடன் சேர்த்து, இந்த வாகனம் பொது சாலையில் இயக்க அனுமதி கிடையாது எனவும், இதனை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவும் செய்ய முடியாது எனவும் போலீஸாரிடமே தெரிவிக்கிறார்.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

அதன்பின் இந்த ஏடிவி எவ்வாறு செயல்படக்கூடியது என காட்டும்படி போலீஸார் கேட்டனர். இதனை தொடர்ந்து அந்த உரிமையாளர் வாகனத்தை ஆஃப்-ரோடிற்கு கொண்டு சென்று, 4x2 இயக்கி அமைப்பை கொண்ட வாகனமாக இருப்பினும் இது எவ்வாறு சவாலான சாலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை செய்து காட்டியுள்ளார்.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

இந்த ஏடிவி-இல் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கள் மற்றும் கியர்கள் என்னென்ன கண்ட்ரோல்களை கொண்டுள்ளன என்பதை விவரித்த உரிமையாளரிடமே பிறகு போலீஸார் ஒரு ரவுண்ட் கேட்டுள்ளனர். பிறகு பேசிய போலீஸார், இந்த பயணம் சிறப்பாக இருந்தது என்றாலும், ஆட்டோ ரிக்‌ஷா போன்ற வாகனத்தில் சென்றதுபோல் தான் இருந்தது எனவும், ஒரு முறையான வாகனத்தில் சென்றதுபோல் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

மேலும், இவற்றை வளைவுகளில் திருப்புவது சற்று கடினமானதாக உள்ளதாகவும், இதனால் தான் இத்தகைய ஏடிவி வாகனங்களை பொது சாலைகளில் இயக்க அரசு அனுமதி அளிப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். அதன் பிறகு, நீங்கள் இந்த வாகனத்துடன் சாலையில் தென்பட்டிருந்தால், நிச்சயமாக உங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம் என உரிமையாளரை மிரட்டும் பாணியில் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

ஆனால், பை-சைக்கிள்களையோ அல்லது இருசக்கர மோட்டார்சைக்கிள்களையோ கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இத்தகைய வாகனங்களை ஓட்டி முதலில் கற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் தற்சமயம் அமலில் இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளோடு இந்த அனைத்து-சக்கர ட்ரைவ் வாகனங்கள் ஒத்து போவதில்லை. இதனால்தான் அவற்றை பதிவு செய்ய அனுமதி இல்லை.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

ஒரு சில கார்பிரேட் நிறுவனங்கள் முறையான அனுமதிகளுடன் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக ஏடிவி-களை உபயோகப்படுத்தி வருகின்றன. இதேபோன்று பெரும்பான்மையான நாடுகளில் அனுமதிக்கப்படும் சகதி பைக்குகளையும் பொது சாலைகளில் இயக்க இந்திய போக்குவரத்து விதிமுறை இடமளிப்பது இல்லை. ஆனால் இவற்றையும் தனியார் இடத்திற்குள் தாராளமாக ஓட்டலாம்.

“சாலையில் சிக்கியிருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருப்போம்” என மிரட்டிவிட்டு, ஒரு ரவுண்ட் கேட்ட போலீஸார்

இந்த ஏடிவி உரிமையாளரிடம் ஒரு ரவுண்ட் வாங்கி ஓட்டிய போலீஸார், பொது சாலையில் அடையாள கண்டிருந்தால் அபராதம் விதித்திருப்போம் என்று மட்டுமல்லாமல், இனிமேல் உங்களை இந்த வாகனத்துடன் பொதுவெளியில் பார்த்தாலே அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். பொதுவாக இவ்வாறான விதிமீறிய பயணங்களுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படுவது உண்டு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cop warns of 5K challan if he spots ATV on roads: Then rides it on the road
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X