ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்படும் அசூர வேட்டை... போலீஸ் அதிரடிக்கு காரணம் இதுதான்

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து போலீசார் வேட்டையாடி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

இந்திய சாலைகளில் ஒலி மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டே செல்கிறது. சாலைகளில் ஒலி மாசுபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தேவை இல்லாத நேரங்களில் ஹாரன்களை தொடர்ந்து இடைவிடாமல் ஒலித்து கொண்டே இருக்கும் பழக்கம் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு உள்ளது. ஒலி மாசுபாட்டிற்கு இது ஒரு காரணம்.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

இதைக்காட்டிலும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள்தான் அதிக ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் சைலென்சர்களை தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்கின்றனர். இவற்றில் இருந்து வெளி வரும் அதிகப்படியான சப்தம் ஒலி மாசுபாட்டை உண்டாக்குகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

எனவே இந்தியாவில் இத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஏராளமான வாகன உரிமையாளர்கள் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர். அதிலும் குறிப்பாக ராயல் என்பீல்டு பைக்குகளில்தான் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

எனவே கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து பல்வேறு மாநில போலீசார் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை வேட்டையாடியுள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடும். அவற்றை மீண்டும் பயன்படுத்த கூடாது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை போலீசார் எடுப்பது வழக்கம்.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

மத்திய பிரதேச மாநிலம் இதற்கு ஒரு உதாரணம். அங்கு ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவற்றின் மீது பெரிய ரோடு ரோலரை ஏற்றி அழித்து விடுவார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் பொது வெளியில் நடக்கும். அத்துடன் அவற்றை வீடியோவாக பதிவு செய்தும் போலீசார் வெளியிடுவார்கள்.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே போலீசார் இதனை செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு பெரிய அளவில் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. ஏனெனில் இன்னும் பலர் தொடர்ந்து ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை தங்கள் வாகனங்களில் பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர்.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

எனவே தற்போது மீண்டும் ஒரு முறை ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முறை டெல்லி போலீசார் தரப்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி விதிமுறையை மீறிய ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்துதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

டெல்லி போலீசார் 500க்கும் மேற்பட்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களில் இருந்து ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அகற்றியுள்ளனர். இந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை வாகன உரிமையாளர்கள் மீண்டும் பயன்படுத்த கூடாது என்பதற்காக சம்பவ இடத்திலேயே போலீசாரால் அவை அதிரடியாக அகற்றப்பட்டு விட்டன.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

சிறப்பு குழுக்களை அமைத்து, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்துள்ளனர். அத்துடன் விதிமுறையை மீறியதற்காக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மட்டுமல்லாது அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் ஹாரன்கள் மற்றும் பிரஷர் ஹாரன்களை பயன்படுத்திய வாகனங்களும் பிடிக்கப்பட்டன.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

அத்துடன் ஆஃப்டர் மார்க்கெட் ஹாரன்கள் மற்றும் பிரஷர் ஹாரன்களையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களும் கூட இந்தியாவில் சட்ட விரோதமானதுதான். அதனை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதனிடையே இதுபோன்ற ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மார்க்கெட்டில் மிக எளிதாக கிடைக்கின்றன. அவ்வளவு ஏன்? ராயல் என்பீல்டு நிறுவனம் இதுபோன்ற ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை அதிகாரப்பூர்வமாகவே விற்பனை செய்கிறது. உண்மையில் அவற்றை மோட்டார்சைக்கிள்களில் பொருத்துவது சட்ட விரோதம் கிடையாது.

ராயல் என்பீல்டு பைக்குகளை குறி வைத்து நடத்தப்பட்ட அசூர வேட்டை.. போலீசாரின் அதிரடிக்கு காரணம் இதுதான்

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக சப்தத்தை உமிழும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை பொது சாலைகளில் பயன்படுத்துவதுதான் சட்ட விரோதமானது. இத்தகைய மோட்டார்சைக்கிள்களை ரேஸ் டிராக்குகள் அல்லது பண்ணை வீடுகள் போன்ற தனியார் இடங்களில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops Removes Royal Enfield Motorcycles With Loud Silencers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X