போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

கர்நாடக மற்றும் கேரள போலீஸார் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் அன்பவர் என்ற 35 வயதான தொழிலதிபர் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கீழுள்ள அந்த வீடியோவில், கடத்தல்காரர்களால் இடம் மாற்றம் செய்யப்பட இருந்த பிணைய கைதியை போலீஸார் எவ்வாறு தடுப்புகளை வைத்து மீட்டுள்ளனர் என்பதை காணலாம்.

அன்வரை கடத்தி 16 மணிநேரத்தில் இந்த போலீஸார் கூட்டணி மீட்டுள்ளது. கேரள, மலப்புரத்தில் வசிக்கும் ஆசாத் அன்வர், காசராகோட் மாவட்டம் உடுமாவில் அமைந்துள்ள ஒரு லாட்ஜூக்கு வெளியே இருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

கேரளா, கர்நாடகா என இரு மாநிலங்களின் போலீஸார் இணைந்து செயல்பட்டதால், நான்கு கடத்தல்காரர்களையும் அடையாளம் காண முடிந்துள்ளது. கரிப்பூரை சேர்ந்த உர நிறுவனம் நடத்தும் நாசர் என்பவருடன் ஆசாத் அன்வர் உதுமாக என்ற பகுதிக்கு சென்றதாகவும், நாசர், ஆசாத் அன்வரின் முதலாளி என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

உதுமாவில் அவர்கள் உரங்களுக்கான மூலப்பொருட்களாக முடித்திருத்தும் கடைகளில் இருந்து முடி சேகரிப்பது வழக்கம். இருவரும் ஒரு லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இவர்களிடம் பணம் இருப்பதை அந்த லாட்ஜில் பணியாற்றும் ஒரு உதவியாளர் தான் கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளார்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

கடத்தல்காரர்கள் வருவதற்குள் நாசர் எப்படியோ தப்பித்துள்ளார். ஆனால் ஆசாத் அன்வர் சிக்கி கொண்டுள்ளார். இவர்கள் இருவரிடமும் பணம் இல்லை என்பது கடத்தல்காரர்களுக்கு தெரியவர, அன்வரை விடுவிக்க ரூ.2 லட்சத்தை கேட்டு அவரது மனைவியை தொலைப்பேசி வாயிலாக மிரட்டியுள்ளனர்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

அன்வரின் மனைவி காசர்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிய போலீஸார் அவர்களது செல்போனை போலீஸார் கண்காணித்தனர். லாட்ஜ் இருக்கும் பகுதியை உள்ளூர்வாசிகள் சிலர் கடத்தல்காரர்களை பார்த்ததாக அங்கிருந்துவரும் தகவல் கூறுகின்றன.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

இவற்றையும் சேர்த்து வழக்கு பதிவு செய்த போலீஸார், கடத்தல்காரர்கள் கர்நாடக மாநிலம், மங்களூரில் இருப்பதை செல்போனை கண்காணித்ததில் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து காசர்கோடு போலீஸார், மங்களூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மங்களூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் பயணித்து கொண்டு இருப்பதை தெரிந்துக்கொண்டனர். சரியாக அவர்கள் வரும் சாலையில் வெவ்வேறான பகுதிகளில் தடுப்புகளை அமைத்து கடத்தல்காரர்களின் காரை மடக்கியுள்ளனர்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

இருப்பினும் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் என்பதால் கடத்தல்காரர்கள் எந்தவொரு சிரமுமின்றி சில தடுப்புகளை தட்டிவிட்டு அதில் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர். இதனால் போலீஸார் வாகனங்களை சாலையின் குறுக்காக நிறுத்தி பெரிய அளவிலான தடுப்புகளை அமைத்தனர்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

லாரி ஒன்றை சாலையின் குறுக்கே போலீஸார் நிறுத்துவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இருப்பினும் கடத்தல்காரர்கள் யு-டர்னில் திரும்ப முயன்ற போது போலீஸார் ஒருவர் காரின் பின்கதவை திறந்து அன்வரை விடுத்துவிடுகிறார்.

போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி

க்ரெட்டாவில் கடத்தல்காரர்கள் அங்கிருந்து பறந்து விடுகின்றனர். காரில் இருந்த நான்கு பேரையும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் இவர்கள் நால்வர் மட்டுமின்றி மேலும் சிலரும் இருப்பர் என போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Watch cops save kidnapped businessman by making him jump out of a moving Hyundai Creta.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X