அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

காவல் துறையினர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

கார்களில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? என்ற குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களில், பொது இடங்கள், வேலை செய்யும் இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

மேலும் பயணங்களை மேற்கொள்ளும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் காரில் பயணம் செய்பவர்கள் பொது இடத்தில் இருப்பதாக கருதப்பட்டு, தனியாக பயணம் செய்து கொண்டிருந்தாலும் கூட, முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் காரில் தனியாக பயணிப்பவர்களுக்கு எதற்கு முக கவசம்? என எதிர்ப்பு கிளம்பியது.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

எனவே குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், ''சுகாதார துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களில், காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்படவில்லை'' என கூறப்பட்டிருந்தது.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

அதாவது காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்திற்கு பின்னரும், புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாதவர்களுக்கு, காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இது தொடர்பாக புனேவை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, ''காரில் தனியாக பயணம் செய்யும் அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயமா? அனைத்து நேரமும் ஜன்னல் கண்ணாடிகள் மேலே ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் வழியில் எங்குமே நிறுத்தப்போவதும் இல்லை. அதற்கு எதற்கு முக கவசம்?

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

நான் காரில் தனியாக பயணித்து கொண்டிருந்தபோது, காவல் துறையினர் என்னை நிறுத்தினர். அப்போது முக கவசத்தை நான் எனது கழுத்து பகுதியில் இறக்கி விட்டிருந்தேன். ஆனால் நான் அளித்த விளக்கத்தை காவல் துறையினர் கேட்க மறுத்து விட்டனர். மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிவிப்பு தொடர்பாகவும் நான் கூறினேன். ஆனால் காவல் துறையினர் எதையும் காதில் வாங்கவில்லை.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

இதனால் நான் அபராதம் செலுத்த நேரிட்டது. சாலையோரமாக நின்று கொண்டு முக கவசம் அணியாமல், உணவு சாப்பிடுபவர்கள் மீதும், குளிர்பானங்களை அருந்துபவர்கள் மீதும் காவல் துறையினர் இப்படி நடவடிக்கை எடுப்பார்களா?'' என்றார். தற்போது இந்த பிரச்னைக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

இதன்படி காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தாலும் இனிமேல் அபராதம் விதிக்கப்போவதில்லை என டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர். அதாவது காரில் தனியாக பயணம் செய்யும்போதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

அதேபோன்று புனே மாநகர காவல் துறையினரும், காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியிருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர். குழப்பங்களுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், காரில் பயணம் செய்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

இதுகுறித்து புனே மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருப்பது உண்மைதான். எனவே காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...

ஆனால் காரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், முக கவசம் அணிந்திருப்பது அவசியம். அதாவது 2, 3 பேர் காரில் குழுவாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாமல் இருந்தால் காவல் துறையினர் எப்போதும் போல் அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops Stop Action Against ‘Unmasked’ Solo Car Drivers - Full Details. Read in Tamil
Story first published: Wednesday, September 9, 2020, 18:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X