தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

பைக்கில் ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு, இதுவரை யாருமே வழங்காத ஒரு தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்து விட்ட சூழலிலும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கு தற்போது வரை விலக்கி கொள்ளப்படவில்லை. மே 3ம் தேதி வரை, மே 17ம் தேதி வரை என அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகள் இருப்பவர்கள் மட்டுமே வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் தேவையில்லாமல் பலர் வாகனங்களில் ஜாலியாக ஊர் சுற்றி வருவதை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது. அத்தகைய வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட சமயத்தில், வாகனங்களில் வெளியே வந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். எதுவும் விசாரிக்காமல், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்பவர்கள் மீதும் காவல் துறையினர் தடியடி நடத்தியதாக அப்போது புகார்கள் எழுந்தன. எனவே அதன்பின்பு வாகன ஓட்டிகளை தாக்குவதை போலீசார் நிறுத்தி கொண்டனர்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

ஆனால் வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் அதன்பின்பு காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தற்போது வரை பல லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

ஆனால் என்னதான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, தேவையே இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அவ்வப்போது வித்தியாசமான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். இதன்மூலம் கொரோனா வைரஸின் தீவிரத்தை வாகன ஓட்டிகளுக்கு புரிய வைப்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

இந்த வகையில் திருப்பூர் போலீசார் சமீபத்தில் எடுத்த ஒரு நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றிய இளைஞர்கள் சிலரை போலீசார் ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றினர். அந்த ஆம்புலன்ஸில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருப்பதாக கூறி, அந்த இளைஞர்களை போலீசார் பயப்படுத்தினர்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே அப்படி ஒரு பொய்யை போலீசார் கூறினர். இதனால் அந்த இளைஞர்கள் அலறி துடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிகழ்வை வைத்து மீம்ஸ்களும் கூட உலா வந்தன. இந்த நடவடிக்கைக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, இதேபாணியிலான நடவடிக்கையை தற்போது டெல்லி போலீசாரும் எடுத்துள்ளனர்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

இந்தியாவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் டெல்லியும் ஒன்றாக உள்ளது. எனவே டெல்லியில் தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மோட்டார்சைக்கிள்களில் வந்த 5 இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

ஆனால் அந்த இளைஞர்களோ போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். எனினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இதன்பின் சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த 'டம்மி டெத் பாடி' ஒன்றை தூக்கும்படி அந்த இளைஞர்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர். அந்த நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர் எனக்கூறி இளைஞர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினர்.

தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ

ஆனால் அது டம்மியான டெத் பாடிதான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது திருப்பூர் போலீசாரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்றே உள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள மது விஹார் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஊரடங்கில் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாலைகளில் தற்போது அதிக அளவிலான வாகனங்கள் இயங்குவதை பார்க்க முடிகிறது. ஆனால் அத்தியாவசிய வேலை எதுவும் இல்லாமல், தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது முன்பு போலவே போலீசாரின் நடவடிக்கைகள் தொடரும் என்பதை எடுத்துக்காட்டுவது போல இந்த வீடியோ உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops Teach Lockdown Violators A Lesson, Ask Them To Pick Dummy Dead Body Of A Corona Patient - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X