கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் தற்போது தேசிய அளவிலான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளின்படி பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

எனவே மிக மிக அவசியமான பணிகள் இருந்தால் மட்டுமே வீடுகளை விட்டு ஒருவரால் வெளியே வர முடியும். ஆனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமானோர் தேவையே இல்லாமல் வெளியே வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஜாலி ரைடு சென்று வருவதை பார்க்க முடிகிறது.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

இதனால் அத்தகைய நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் வாகன ஓட்டிகளை போலீசார் லத்தியால் கடுமையாக தாக்கினர். இந்த வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து, போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அபராதம் விதிப்பது, வழக்கு பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு போலீசார் மாறி விட்டனர்.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

அத்துடன் தோப்பு கரணம் போட சொல்வது, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வை நடத்துவது போன்ற வித்தியாசமான நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர். மேலும் வீடுகளுக்கு உள்ளேயே இருப்பது எவ்வளவு முக்கியமானது? வீடுகளை விட்டு வெளியில் வருவது எவ்வளவு ஆபத்தானது? என்ற விழிப்புணர்வையும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

இந்த வரிசையில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையை காவல் துறையினர் தற்போது தொடங்கியுள்ளனர். இந்த வாகனங்கள் அனைத்தும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகுதான் விடுவிக்கப்படும் என போலீசார் கூறுகின்றனர். அதாவது ஊரடங்கு முடிவுக்கு வந்தபின்புதான் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்படும்.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

குறிப்பாக வாகனங்களை பறிமுதல் செய்வதில், பெங்களூர் காவல் துறை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களின் வாகனங்களை மட்டுமல்லாது, அத்தியாவசிய பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பெங்களூர் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

இதன்படி பெங்களூர் நகர போலீசார், நேற்று (ஏப்ரல் 1ம் தேதி) இரவு வரை 6,852 வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதில், சொகுசு வாகனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வருவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

அவை எதுவுமே வேலைக்கு ஆகாததால், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறை களமிறங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருப்பதை உறுதி செய்வதற்காகதான் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

இந்த அதிரடி நடவடிக்கையை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்கிறேன் என சாக்குப்போக்கு சொல்லி கொண்டு ஒரு சிலர் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதாக கூறப்படுகிறது. எனவேதான் இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

அதே சமயம் மளிகை பொருட்களை வாங்குவதற்கு வாகனங்களை எடுப்பதற்கு பதிலாக நடந்து செல்லலாம் எனவும் காவல் துறை அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று தேவையான மளிகை சாமான்களை வாங்குவதற்கு மக்கள் தினமும் செல்லக்கூடாது எனவும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் ஒருவர் தினமும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தால், மருத்துவமனையில் இருந்து பெற்ற சிறப்பு அனுமதி மற்றும் தேவையான மற்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மேலும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பாஸ்களை வாங்கி கொள்ள முடியும். ஆனால் தினசரி அடிப்படையில் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

பாஸ் இல்லாத வாகனம் பறிமுதல் செய்யப்படும். சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பாஸை தவறாக பயன்படுத்தியதாலும், ஒரு நாள் பயன்படுத்தி விட்டு திரும்ப ஒப்படைக்காத காரணத்தாலும் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

பெங்களூர் போலீசார், 6,321 டூவீலர்கள், 227 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 304 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 6,852 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் போலீசாரின் இந்த நடவடிக்கையை ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர். வாகனங்கள் இல்லாமல் மளிகை கடைகளுக்கு செல்வது கடினம் என அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் வாகனங்கள் இல்லாமல் மளிகை சாமான்களை கொண்டு வருவதும் சிரமம் என்பதும் அவர்களின் வாதம். ஆனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வருவதை தடுப்பதற்கு மிக கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்பது போலீசாரின் கருத்தாக உள்ளது. இதன்மூலம்தான் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் எனவும் போலீசார் கூறுகின்றனர்.

Image Courtesy: V Sreenivasa Murthy/The Hindu

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus: 7,000 Vehicles Seized By Bangalore Police For Flouting Lockdown Rules. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X