துணிச்சலான காரியத்தை செய்த ஏர் இந்தியா... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டதன் மூலம், ஏர் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளது.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

கொரோனா வைரஸ் (Coronavirus) குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 (Covid-19) என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையே ஆட்டி படைத்து கொண்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் தற்போது வரை 15,337 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 3,51,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இந்தியாவில் மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சர்வதேச விமானங்கள் எதுவும் தரையிறங்க அனுமதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏர் இந்தியா விமானங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து கொண்டுள்ளன.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வருவதற்காகவே ஏர் இந்தியா இந்த சவாலான பணியை திறம்பட செய்து வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை, டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியாவின் போயிங் 777 இஆர் (Boeing 777 ER) விமானத்தில், இத்தாலியின் ரோம் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 263 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடி வருகின்றன. இதன் காரணமாக விமான நிறுவனங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவித்த ஏராளமான இந்தியர்களை பத்திரமாக மீட்டதன் மூலம், ஏர் இந்தியா தனது மதிப்பை நிலைநாட்டியுள்ளது.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

குறிப்பாக சீனா, இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று நாடுகளுமே கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூட, இத்தாலியின் மிலன் நகரத்திற்கு பறந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம், சிக்கி தவித்து கொண்டிருந்த 230 இந்தியர்களை மீட்டது.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

இதற்கெல்லாம் முன்னதாக, கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று, கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகருக்கு பறந்த ஏர் இந்தியா 747 (Air India 747) விமானம், அங்கு சிக்கி தவித்த 324 இந்தியர்களை மீட்டது. சர்வதேச அளவில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

ஆம், ஒரு சில நாடுகள் தங்கள் குடிகளை மீட்பதில் அசட்டையாக இருந்த சமயத்தில், இந்தியா மிக விரைவாக செயலாற்ற தொடங்கியது. இப்படி ஹீரோயிசம் காட்டி கொண்டிருக்கும் ஏர் இந்தியாவைதான் நாம் கிண்டல் அடித்து கொண்டுள்ளோம். ஏர் இந்தியாவின் சேவையை பலரும் விரும்புவதில்லை. ஏர் இந்தியாவின் உணவை பற்றி கடந்த காலங்களில் பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

அத்துடன் அதன் வயதான ஊழியர்கள் பற்றியும் கூட கிண்டல் அடிக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஒன்றை நாம் புரிந்து கொள்வது நல்லது. சர்வதேச வழித்தடங்களில் பறப்பதில் ஏர் இந்தியாவிற்கு இருக்கும் அனுபவமும், அதன் விமானங்களும்தான் இந்தியர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்ப முக்கியமான காரணம். இதனால் சின்னச்சின்ன விஷயங்களுக்காக எல்லாம் இனி ஏர் இந்தியா கிண்டலுக்கு ஆளாகாது என நம்பலாம்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

சரி, இந்தியர்களை மீட்பதற்காக போயிங் 777 இஆர் விமானத்தை ஏர் இந்தியா ஏன் ரோம் நகரத்திற்கு அனுப்பி வைத்தது என்பது உங்களுக்கு தெரியுமா? போயிங் 777 இஆர் விமானம் நீண்ட தூர பயணங்களுக்கும், நிறைய பேரை ஏற்றி வருவதற்கும் உகந்தது. இதன் காரணமாகதான் போயிங் 777 இஆர் விமானத்தை ஏர் இந்தியா தேர்வு செய்திருக்க கூடும்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

டெல்லியில் இருந்து ரோம் வெகு தொலைவில் உள்ளது. கிலோ மீட்டர்கள் அடிப்படையில் பார்த்தால், டெல்லி - ரோம் ஆகிய நகரங்களுக்கு இடையேயான தொலைவு, 5,898 கிலோ மீட்டர்கள். டெல்லியில் இருந்து ரோம் சென்று வர நீண்ட நேரம் ஆகும். இதற்கு ஏர் இந்தியாவின் போயிங் 777 இஆர் உகந்தது. இதன் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 351.5 டன்கள்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

போயிங் 777 இஆர் விமானத்தில், 4 பர்ஸ்ட் கிளாஸ் இருக்கைகளும், 35 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகளும், 303 எகானமி கிளாஸ் இருக்கைகளும் இருக்கும். இந்த விமானத்தின் ஒட்டுமொத்த நீளம் 242.3 அடி. ஒட்டுமொத்த உயரம் 61.5 அடி. இதன் கேபின் அகலம் 19.1 அடி. சராசரியாக மேக் 0.84 என்ற வேகத்தில், போயிங் 777 இஆர் விமானம் பறக்கும்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

அதிகபட்சமாக 43,100 அடி உயரம் வரை போயிங் 777 இஆர் விமானத்தை இயக்க முடியும். இதன் அதிகபட்ச எரிபொருள் திறன் 143.2 டன்கள். இது 2 இன்ஜின்களை கொண்ட விமானம் என்பதும் குறிப்படத்தக்கது. இது விமான பொறியியல் துறையின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 14,492 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

ஏர் இந்தியா செய்த துணிச்சலான காரியம்... வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டதில் வெளிவராத தகவல்

ஏர் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு விமான நிறுவனங்களிடமும் போயிங் 777 இஆர் இருக்கின்றன. உலகில் கட்டமைக்கப்பட்ட மிக சிறந்த விமானங்களில் ஒன்றாகவும் போயிங் 777 இஆர் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் ஏர் இந்தியாவால் மீட்கப்பட்டனர் என்ற செய்திகளை மட்டும்தான் இதுவரை நீங்கள் படித்திருக்க கூடும்.

ஆனால் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானம் தொடர்பான மேற்கண்ட தகவல்களை உங்களிடம் யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் அளித்திருக்கும் என நம்புகிறோம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Air India's Boeing 777 ER Interesting Facts. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X