வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 ஒட்டுமொத்த உலகையும் தற்போது அச்சுறுத்தி வருகிறது. மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸால், தற்போது வரை உலகம் முழுவதும் 21,297 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

தற்போது வரை அதிகாரப்பூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் 4,71,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

இந்தியாவை பொறுத்தவரை தற்போது வரை 649 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், மற்றும் அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தனிமையில் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். பால், காய்கறி மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் பொது சாலைகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

இப்படிப்பட்ட சூழலில், அதிரடியான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில், டோல் கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை அறிவித்துள்ளார்.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

அவசர கால சேவைகளை எளிதாக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டோல்பிளாசாக்களிலும் டோல் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் இலவசமாக சென்று வரலாம். ஆனால் இந்த சலுகை தற்காலிகமானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது இந்தியாவில் மிக நீண்ட நாட்களாக இருக்கும் கோரிக்கை. அந்த கோரிக்கை தற்போது தற்காலிகமாக நிறைவேறியுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

அதுவும் போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், அவசர கால வாகனங்களை மட்டும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் கார் போன்ற வாகனங்கள் இல்லாமல் தற்போது சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் வாகனங்களில் உலா வந்து கொண்டுதான் உள்ளனர்.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு கடுமையாக எச்சரிக்கை செய்துள்ள நிலையிலும், ஒரு சிலர் அதனை பொருட்படுத்தாமல் வாகனங்களில் உலா வருகின்றனர். அத்தகைய வாகன ஓட்டிகள் மீது தற்போது போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தேவையில்லாமல் வலம் வரும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸால் தற்போது வரை 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால், தமிழக அரசு சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

இதற்கான அறிவிப்பை அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பம்பரமாய் சுழன்று வரும் மத்திய, மாநில அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை பொதுமக்களாகிய நமக்கு உள்ளது. எனவே உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். அவசியம் இல்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வராதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus (Covid-19) In India - Government Temporarily Suspends Toll Collection : Road Transport And Highways Minister Nitin Gadkari. Read in Tamil
Story first published: Thursday, March 26, 2020, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X