விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

கொரோனா வைரஸிடம் இருந்து தமிழகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் அரணாய் காத்து வரும் நிலையில், அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் தற்போது வரை 18,944 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4,25,323 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

சீனா, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முடக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 24) இரவு அறிவித்தார். இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டால்தான், கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

எனவே அரசாங்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தவிர தமிழக அரசும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிகாரிகள் முழு வீச்சில் இயங்கி வருவதால், சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

தமிழகத்தில் தற்போது வரை 23 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலையை அளிக்க கூடிய எண்ணிக்கைதான் என்றாலும், ஒரு சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. குறிப்பாக நாட்டிலேயே கேரளாதான் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை 109 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைகளில் தமிழக அரசு சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், கேரளாவில் இருந்து மக்கள் சிலர் ஆம்புலன்ஸ்கள் மூலம் முறைகேடாக கோவைக்கு வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இதனால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் நாட்டிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள மாவட்டம் என்பதால், கோவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்த தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ''கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொறுப்பற்ற ஒரு சிலரின் நடவடிக்கைகள் எங்களின் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக இருப்பது வேதனையளிக்கிறது'' என்றனர்.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

கேரள மாநிலத்தில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் தமிழகத்திற்கு வந்தது வாளையார் சோதனை சாவடியில், சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது. பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் தற்போது முடங்கியுள்ளன. சொந்த வாகனங்களில் பயணம் செய்யவும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இதனால்தான் கேரளாவில் இருந்து தமிழகம் வருவதற்கு, குறிப்பாக கோவை வருவதற்கு, மக்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர். அதுவும் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக சைரன் போட்டு கொண்டு வருகின்றனர் என்பது கவலையை ஏற்படுத்துகிறது. சந்தேகம் ஏற்பட்டதால், வாளையார் சோதனை சாவடியில், சைரனுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்றை அதிகாரிகள் சமீபத்தில் நிறுத்தினர்.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இது குறித்து விசாரணை நடத்தியதில், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே ஆம்புலன்ஸ்கள் மூலம் சட்டவிரோதமாக பயணம் செய்வது தண்டனைக்கு உரியது என அதிகாரிகள் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பலர் முறையாக கடைபிடித்து வருகின்றனர். எனவே சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதை பயன்படுத்தி கொண்டு வாகன ஓட்டிகள் சிலர் ஜாலியாக சுற்றுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையை அளிக்கின்றன. இதனால் சரியான காரணம் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...

இதன்படி வீடுகளை விட்டு வெளியில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்கள் வந்ததற்கான காரணத்தை போலீசார் கேட்கின்றனர். இதற்கு சரியான காரணத்தை கூறாவிட்டால், ஸ்பாட்டிலேயே வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். நிலைமையின் தீவிரத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் உணர வேண்டும்.

தேவையில்லாமல் வாகனங்களில் இனி வெளியே வர வேண்டாம். அரசின் எச்சரிக்கையை மீறி வெளியே வந்தால், பாதிக்கப்படப்போவது நீங்கள் மட்டுமல்ல. உங்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படலாம். எனவே அரசாங்கத்திற்கும், இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நமக்காக உழைக்கும் அதிகாரிகள், காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவது நமது கடமை.

Source: Simplicity

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus (Covid-19) Lockdown - People Transported Illegally Through Ambulances From Kerala to Tamil Nadu - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X