ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்ட்டில் விற்கும் கேரள மக்கள்... ஏன் தெரியுமா?

சொகுசு கார்களை வைத்துள்ள பலர், அவற்றை தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அனைத்து தரப்பு மக்களிடமும் தற்போது இந்த எண்ணம் மேலோங்கியுள்ளது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

இதன் காரணமாக புதிய கார் மற்றும் டூவீலர்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தற்போதே பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. சம்பளம் குறைப்பு, வேலையிழப்பு, வேலையில் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருவதால், புதிய கார்களில் பணத்தை முதலீடு செய்ய தயங்குகின்றனர்.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

அதே சமயம் கொரோனா அச்சமும் இருப்பதால், மிக குறைவான விலையில் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை உயர்ந்து வரும் நிலையில், பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தைக்கு சொகுசு கார்கள் விற்பனைக்கு வருவதும் அதிகரித்துள்ளது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

குறிப்பாக கேரள மாநிலம் கொச்சியில், சொகுசு கார்களை வைத்திருக்கும் பலர் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் அவற்றை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். வங்கிகளுக்கு கட்ட வேண்டிய அதிகப்படியான மாதாந்திர தவணை தொகை காரணமாகவும், வேலையில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும்தான் சொகுசு கார்களின் உரிமையாளர்கள் பலர் இந்த முடிவை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

இதுகுறித்து பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை விற்பனை செய்யும் ஒரு டீலர்ஷிப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால், புதிய சொகுசு கார்களை வாங்குவதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

அதற்கு பதிலாக ஒரு சிலர் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை வாங்கி கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். புதிய கார்களுடன் ஒப்பிடும்போது, பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் பாதி விலைக்கு கிடைப்பதுதான் இதற்கு காரணம். அதாவது புதிய காரின் விலை 60 லட்ச ரூபாய் என்றால், பயன்படுத்தப்பட்ட சந்தையில் அதே கார் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டு கால அளவில், சொகுசு கார்களை வாங்கிய பலர் தற்போது தங்களது காரை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாத தவணை செலுத்த முடியாததுதான் இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது. ஒரு சிலருடைய கார்களின் மறுவிற்பனை மதிப்பை விட, கடன் தொகை அதிகமாக இருக்கும் நிலையும் காணப்படுகிறது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

இதுபோன்ற சூழல் உள்ள கார்களின் உரிமையாளர்கள், தாங்கள் விரும்பும் விலைக்கு காரை வாங்கி கொள்ள கூடிய வாடிக்கையாளர்களை கண்டறிவது கடினமாக உள்ளது. ஆனால் பயன்படுத்தப்பட்ட கார்களுடைய விற்பனை தற்போது வெகுவாக உயர்ந்துள்ளது. கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை நன்கு உயர்ந்துள்ளது'' என்றார்.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை மட்டுமல்லாது, பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஒரு டீலர்ஷிப்பின் அதிகாரி கூறுகையில், ''பொது போக்குவரத்து வாகனங்களை தவிர்ப்பதற்காகவே பலர் தற்போது சொந்த வாகனங்களை வாங்குகின்றனர்.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

பயன்படுத்தப்பட்ட கார்கள் மட்டுமல்லாது, குறைந்த விலையில் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வாங்குவதிலும் மக்களிடம் ஆர்வம் காணப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு பலரிடமும் விருப்பம் காணப்படுகிறது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஒரு சில இடங்களில் அவற்றுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. மக்கள் குறைந்த விலையில் சொந்தமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கி கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்'' என்றார். கொச்சி மட்டுமல்லாது, பல நகரங்களிலும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை உயர்ந்துள்ளது.

அடக்கடவுளே... ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் விற்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

இது தொடர்பாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், புதிய கார்களின் விற்பனையும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை நோக்கி வந்து கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி கொண்டிருப்பதால், வருகின்ற மாதங்களில் புதிய கார்களின் விற்பனையும் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Impact: Unable To Pay Hefty EMI, People Sell Off Luxury Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X