ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 42,344 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. அத்துடன் 8,60,170 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஈரான் போன்ற நாடுகள்தான் கோவிட்-19 வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனாவும் கடும் பாதிப்புகளை சந்தித்தது. ஆனால் பாதிப்புகளில் இருந்து தற்போது சீனா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆனால் உலகின் மற்ற நாடுகளிலோ கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி கொண்டுள்ளது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதை தடுக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர முடியும். ஆனால் தேவை இல்லாமல் சிலர் வாகனங்களில் உலா வந்து கொண்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் பஸ், ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடாததாலும், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

எனவே இதை பயன்படுத்தி கொண்டு சாலைகளில் ஜாலியாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் உலா வருவதற்கு பலர் விரும்புகின்றனர். கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், இப்படி வலம் வந்து கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளை காவல் துறையினர் தற்போது அடக்கி வருகின்றனர். தேவை இல்லாமல் ஊர் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

அத்துடன் வாகனங்களை பறிமுதல் செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். சாதாரண பொதுமக்கள்தான் விழிப்புணர்வு இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர் என்றால், ஒரு சில பிரபலமான மனிதர்களும் அவ்வாறே நடந்து கொள்வது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

ஆம், ஊரடங்கு உத்தரவின் விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்திற்காக, மிகவும் பிரபலமான கூலர் (Kooler Restaurant) ரெஸ்டாரென்ட்டின் உரிமையாளரை மும்பை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். கூலர் ரெஸ்டாரென்ட்டின் உரிமையாளரான அலி கூலர் சமீபத்தில் சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

அவர் தனது காரில் வலம் வருவதை அந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்தியாவில் தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அலி கூலர் தனது காரில் போலீஸ் சைரனை பயன்படுத்தி கொண்டு, பொது சாலைகளில் வலம் வந்துள்ளார்.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

தேவை இல்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை செய்துள்ள நிலையில், பிரபல ரெஸ்டாரென்ட்டின் உரிமையாளர் ஒருவர் இப்படி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா... கொரோனா... என அவர் கூறுவதையும், அத்துடன் கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

அந்த காரில் பயணித்த மற்றொரு நபரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு நேரம் காரில் இப்படி வெளியே சுற்றினர்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவத்திற்காக அலி கூலர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக மற்றொரு வீடியோவில் பேசியுள்ள அவர், ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தங்களின் சொந்த பாதுகாப்பிற்காக அனைவரும் ஊரடங்கை முறையாக பின்பற்ற வேண்டும் என அவர் அந்த வீடியோவில் கேட்டு கொண்டுள்ளார். மன்னிப்பு கேட்டுள்ள சூழலிலும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் உலகின் வல்லரசான அமெரிக்கா போன்ற நாடுகளையே கோவிட்-19 வைரஸ் புரட்டி போட்டுள்ளது.

ஊரடங்கை மீறி ஊர் சுற்றுவதற்காக பிரபல ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்... அதிர்ந்து போன போலீசார்...

இப்படிப்பட்ட சூழலில், அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவினால், மிக கடுமையான பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியது வரும். எனவேதான் வாகன ஓட்டிகள் வெளியே சுற்ற வேண்டாம் என காவல் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதும் ஒரு சிலர் இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியை அளிக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Famous Restaurant Owner Arrested By Mumbai Police For Not Following The Coronavirus Lockdown Orders - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X