ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

ஊரடங்கு காரணமாக 4 ஆஸ்திரேலியர்கள் ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த நிலையில், ஓலா நிறுவனம் அவர்களுக்கு உதவி செய்துள்ளது.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 69,487 பேர் கோவிட்-19 வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

தற்போது 12,74,578 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீனா தற்போது இந்த பாதிப்பில் இருந்து மீண்டு கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

கோவிட்-19 வைரஸ் உலகையே முடக்கியுள்ளது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பஸ், ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி போயுள்ளது.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகள் இதன் காரணமாக தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது போக்குவரத்து முடங்கியுள்ளதால், அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்ல வேண்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த 4 வெளிநாட்டவர்கள் டெல்லி செல்ல ஓலா நிறுவனம் உதவியுள்ளது. இவர்கள் நான்கு பேருமே ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன் இவர்கள் நான்கு பேரில் 2 பெண்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் கடந்த சனிக்கிழமை மதியம் டெல்லி சென்று சேர்ந்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது முதலே இவர்கள் நான்கு பேரும் ஜெய்ப்பூரில் தவித்து கொண்டிருந்தனர். பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜெய்ப்பூர் நகரை விட்டு அவர்களால் வெளியேற முடியவில்லை. எனவே டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய ஹை-கமிஷன் உதவியை அவர்கள் நாடினர்.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

இதன் விளைவாக ஜெய்ப்பூரில் இருந்து அவர்கள் 4 பேரும் ஓலா உதவியுடன் பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கான அனுமதியும், பாஸ்களும் அதிகாரிகளிடம் இருந்து முறையாக பெறப்பட்டது. அவர்கள் டெல்லி வருவதற்கான அனுமதியை பெற்ற பிறகு நன்கு பயிற்சி பெற்ற டிரைவரையும், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்ட கேப்பையும் ஓலா நிறுவனம் ஏற்பாடு செய்தது.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பாக ஜெய்ப்பூரில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று இல்லை. பொது போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், ஆஸ்திரேலியர்களுக்கு ஒலா நிறுவனம் இந்த உதவியை செய்துள்ளது.

ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா?

முன்னதாக ஓலா நிறுவனம் கர்நாடக அரசுக்கு 500 வாகனங்களை வழங்க சம்மதம் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் சென்று வருவதற்கும். கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். ஓலா நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Lockdown: Ola Helps Four Australians, Stranded In Rajasthan, Reach Delhi. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X