வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக, வெறும் 48 மணி நேரத்தில் உயிர் காக்கும் கருவியை உருவாக்கி, இந்தியர்கள் அசத்தியுள்ளனர்.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19, மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கொரோனா வைரஸால் தற்போது வரை உலகம் முழுவதும் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், மக்களிடம் ஒருவித அச்சத்தை காண முடிகிறது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

கொரோனா வைரஸால் தற்போது வரை உலகம் முழுவதும் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

குறிப்பாக வென்டிலேட்டர்களின் தேவைதான் தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸானது, நோயாளிகளின் சுவாச அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதால், வென்டிலேட்டர்களின் தேவை முக்கியமானதாக உள்ளது. ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே, தற்போது வென்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் உதவி கேட்டுள்ளன. வென்டிலேட்டர்கள் மற்றும் தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கும்படி அரசுகள் சார்பில் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

அமெரிக்காவை பொறுத்தவரை ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரிக்க முன் வந்துள்ளன. இதில், டெஸ்லா நிறுவனம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வென்லேட்டர்களை தயாரிப்பதற்காக மூடப்பட்டுள்ள நியூயார்க் ஆலையை திறக்கவுள்ளது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில், தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. இதன்படி மஹிந்திரா குழுமத்தின் ஆலைகளில் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை உடனே தொடங்கும்படி, அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உத்தரவிட்டுள்ளார்.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

இந்த உத்தரவிற்கு ஏற்ப, மஹிந்திரா நிறுவனம் வெறும் 48 மணி நேரங்களுக்கு உள்ளாக, வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை உருவாக்கி அசத்தியுள்ளது. முதல் வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை 48 மணி நேரங்களுக்கு உள்ளாக, மஹிந்திராவின் சிறப்பு குழு உருவாக்கியுள்ளது என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இகத்புரி மற்றும் கண்டிவாலி ஆலைகளில் உள்ள பொறியாளர்களால் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் புரோட்டோடைப்பை அவர்கள் காட்டுகின்றனர். இணையத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்த பிறகு புரோட்டோடைப்பை உருவாக்கியதாக இன்ஜினியர்கள் கூறியுள்ளனர்.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிவது மற்றும் இணையத்தில் இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி செய்வது ஆகிய பணிகளுக்கு பிறகு இந்த குழு இன்னும் கூடுதலாக மூன்று புரோட்டோடைப்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. புரோட்டோடைப் பணிகளை இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

இந்த இடைக்கால உயிர் காக்கும் கருவிகள் வெறும் 7,500 ரூபாய் விலையில் வரலாம் என்று தெரிகிறது. அதே சமயம் அதிநவீன இயந்திரங்களின் விலை 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை என்பதை கட்டாயம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். எனவே மஹிந்திரா நிறுவனத்தின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து சீனா ஓரளவிற்கு மீண்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளாக கருதப்பட்டு வரும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளே நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் திணறுவதாக செய்திகள் வெளியாகின்றன.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

இந்த செய்திகள் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் இந்தியாவில் கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினால், அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சையை வழங்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

மஹிந்திரா பொறியாளர்கள் தங்களை தொழிற்சாலைகளுக்குள் முடக்கி கொண்டு, தூக்கம் கூட இல்லாமல் வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாக இந்த புரோட்டோடைப்பை உருவாக்கியுள்ளனர். இதுபோல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்திற்கு நமது ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.

வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை மீறி அவசியம் இல்லாமல், ஒரு சிலர் வெளியே வாகனங்களில் சுற்றி வருவதை காண முடிகிறது. கொரோனா பரவலுக்கு இது வழி ஏற்படுத்தி விடும் என்பதால், அனைவரும் வீடுகளுக்கு உள்ளே இருப்பது அவசியம். தேவை இல்லாமல் வெளியே வராதீர்கள்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Coronavirus: Mahindra Prepares Ventilator Prototype In 48 Hours. Read in Tamil
Story first published: Friday, March 27, 2020, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X