கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மாஸான நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

ஒட்டுமொத்த உலகத்தையும் இன்று அச்சுறுத்தி வரும் ஒரு பெயர் கோவிட்-19. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 தற்போது வரை உலகம் முழுவதும் 6,64,731 பேரை தாக்கியுள்ளது. அத்துடன் 30,892 பேரின் உயிரை பறித்துள்ளது. கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல் வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டுள்ளன.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

கோவிட்-19 வைரஸின் தாயகமாக கூறப்படும் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் என உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தற்போது மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தடுக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

அரசு இயந்திரம் களத்தில் இறங்கி பம்பரமாய் சுழன்று வருவதால், மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தற்போது வரை நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. ஆனால் வருகின்ற நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், ஒரு வித அச்சம் இருந்து கொண்டுதான் உள்ளது. கோவிட்-19 பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை கடுமையானது என்றாலும் கூட, மிக மிக அவசியமானது என்பதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால் மத்திய அரசு திடீரென உத்தரவு பிறப்பித்ததால், வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் திகைத்து போயுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கள் கிழமை (மார்ச் 23ம் தேதி) அறிவித்தார். அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இது அதிகமான நாட்கள் என்பதால், உணவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

எனவே அவர்கள் உடனடியாக சொந்த ஊர் புறப்பட ஆரம்பித்தனர். ஆனால் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் நடுரோட்டில் தவிக்கும் நிலைக்கு ஆளாயினர். எனினும் ஏதாவது ஒரு வழியை பயன்படுத்தி அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஊரடங்கு மேலும் அதிக நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என உலா வரும் தகவல்களும் அவர்கள் ஊர் திரும்ப காரணமாக உள்ளன.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

ஆனால் ஊர் திரும்பும் வழியில் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இவ்வாறு இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு தற்போது முன்வந்துள்ளது. ஆம், இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு சுங்க சாவடிகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

இந்திய அரசு நிறுவனமான என்ஹெச்ஏஐ (NHAI - National Highways Authority of India - இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்) தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தங்களின் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவை ஏற்பாடு செய்ய வேண்டும் என டோல் ஆபரேட்டர்களுக்கு என்ஹெச்ஏஐ உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

இது தொடர்பான கூட்டம் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. அப்போது இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும்படி டோல் ஆபரேட்டர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இடம்பெயரும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, லாரி டிரைவர்களும் இந்த நடவடிக்கையால் பயன்பெறுவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

தற்போது பஸ், ரயில் மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. தேவையில்லாமல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் லாரிகள் வழக்கம் போல இயங்கி கொண்டுள்ளன.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

அதாவது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் மட்டும் வழக்கம் போல இயங்கி வருகின்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் உணவிற்காக கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லி எல்லைகளில் நாம் பார்த்து கொண்டிருப்பதை தவிர, உள்ளூர் அளவில் அதிக இடப்பெயர்வு நடைபெற்று கொண்டுள்ளது. எனவே தங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக உணவு வழங்கும்படி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதற்கான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

அத்துடன் டோல்கேட்களில் ஊழியர்களும் இருக்கிறார்கள். ஏனெனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், அவர்களால் செல்ல முடியாது'' என்றனர். எனினும் டோல்கேட்களில் கூட்டம் கூடி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் இவர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் உணவு கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்படி டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இருக்கும் சுங்கசாவடிகளில் பழங்கள் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

அதே சமயம் இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் இந்த வசதி நாளைக்குள் (மார்ச் 30 ) தொடங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியதுதான். எனினும் தற்போது பலர் இடம்பெயர்ந்து வருவதால், ஊரடங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக நெட்டிசன்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் இப்படி பலர் இடம்பெயர்ந்து வருவது வைரஸ் பரவலை அதிகமாக்கி விடும் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. இதனால் இதுபோன்ற பிரச்னைகளை அரசு முன்கூட்டியே கருத்தில் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

குறைந்தபட்சம் இனி இடம்பெயரும் தொழிலாளர்களையாவது தனிமைப்படுத்தி பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பதும் நெட்டிசன்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus - NHAI Makes Way For Distributing Fruits And Food To Migrants At Toll Gates. Read in Tamil
Story first published: Sunday, March 29, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X