இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

இந்தியா, உலகின் மிக பெரிய நாடாக இருப்பினும் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பின்பற்றுவதில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இங்கு பொது இடங்களில் நடக்கும் சமூக சீர்க்கேடான விஷயங்களை பொதுமக்கள் தட்டி கேட்பர்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

அவ்வாறு பொதுமக்களினால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். பீகாரில் இருந்து வெளியாகியுள்ள கீழுள்ள வீடியோவில் வித்தியாசமான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் ஜோடியை காணலாம்.

பின் இருக்கையில் அமர வேண்டியவர், ஓட்டுனரை பார்த்தவாறு பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளார். இந்த ஆபத்தான பயணத்தை பார்த்த மற்றொரு வாகன ஓட்டி இந்த நிகழ்வை அப்படியே தனது போனில் படமாகியுள்ளார்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

அதுமட்டுமின்றி உள்ளூர்வாசிகளுடன் அவர்களை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டுள்ளார். சாலை காலியாக தான் உள்ளது இருந்தாலும், இவ்வாறான பயணங்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்பதற்காக இவர்களது இந்த ரொமான்ஸை கண்டித்துள்ளனர்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

இவ்வாறு ஏன் பயணம் செய்கிறீர்கள் என கேட்ட ஊர்மக்கள் இதுபோன்றவற்றை எல்லாம் உங்களது சொந்த இடத்தில் எங்காவது வைத்து கொள்ளுங்கள் என அந்த ஜோடியை கடிந்து கொண்டனர். இருப்பினும் தொடர்ந்து அந்த ஜோடி வாக்குவாதம் செய்ததால் போலீஸை அழைக்கும் முடிவில் பொதுமக்கள் சென்றனர்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

இதில் சற்று அதிர்ந்துபோன ஜோடி அங்கிருந்து நைசாக நழுவி சென்றது. இவ்வாறு தான் 2015ல் கோவாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பொது சாலையில் பயணம் செய்தது. இதுபோன்று ஒருவர் அந்த காட்சியை படமாக்க, அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

பிறகு கோவா போலீஸார் அவர்களை எப்படியோ தொடர்பு கொண்டு, பொது சாலையில் ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர். சமூக வலைத்தளம் இது போன்ற சம்பவங்களின் போதுதான் எவ்வளவு வலுவானது என்பது தெரிகிறது.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

இவ்வாறான செயல்கள் சாலையில் செல்வோரை கவரக்கூடியவை, ஆதலால் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தானாக மாட்டி கொள்வதற்கு சமம். அதுமட்டுமில்லாமல் இது மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதற அடிக்கும். இது விபத்தில் சென்று முடியலாம்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

ஒரு சில நேரங்களில் ஆபத்தான மற்றும் சாலை விதிகளை மீறி இவ்வாறு பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கலாம். அல்லது அவர்களுக்கு அருகில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படலாம். இதனால் தான் இத்தகைய பயணங்களை போலீஸார் அனுமதிப்பது இல்லை.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

இவ்வாறான ஸ்டண்ட்களுக்கு ஜெயில் தண்டனை அல்லது மிக பெரிய அளவிலான அபாரதம் கூட செலுத்த வேண்டியிருக்கலாம். எனவே இப்படி ரொமான்ஸ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், தனிப்பட்ட நிலங்களில் வைத்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

அப்போது கூட தகுந்த பாதுகாப்பு உதாரணங்களுடன் மேற்கொள்ள பாருங்கள். நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த செய்தியில் கூட ஓட்டுனர் மட்டும் தான் ஹெல்மெட் அணிந்துள்ளார். பெண் பயணி அணியவில்லை. நிச்சயம் இதையெல்லாம் அந்த ஊர்மக்கள் காட்டமாக சுட்டிக்காட்டி கேட்டிருப்பர்.

இதுபோன்ற பயணங்களை ஊக்கப்படுத்த கூடாது!! இளம் ஜோடியை சுற்றி வளைத்த பொதுமக்கள்

இவர்கள் ஓட்டி செல்வது ராயல் என்பீல்டு என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்த மாடல் என்பது தெரியவில்லை. புல்லட் 350 மாடலாக இருக்கலாம். பைக்கில் இரட்டை-சைலன்ஸர் அமைப்பு உள்ளது. ஒருவேளை கூடுதல் ஆக்ஸஸரீயாக வாங்கி உரிமையாளர் அதனை பொருத்தி இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Couple in inappropriate behaviour locals moral police them video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X