வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க, வெறும் 220 ரூபாய் செலவில், சூப்பரான ஐடியா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கார், டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையாக விதிக்கப்பட்டன.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

இந்த கட்டுப்பாடுகளை மீறி, இந்தியா முழுவதும் தேவையே இல்லாமல் இயக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டு விட்டது.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது விமானங்களும் பறக்க தொடங்கியுள்ளன. இடம்பெயரும் தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயணிகள் ரயில் சேவையும் இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது. இதுதவிர ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை மீண்டும் இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கார், டூவீலர் போன்ற சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம்தான் இதற்கு காரணம்.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

எனவே ஆட்டோ, டாக்ஸி, கேப்கள் மீண்டும் இயக்கப்பட்டாலும் கூட, பயணிகள் வருகை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் பயணிகள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்குவதற்காக, கொல்கத்தா நகரை சேர்ந்த கேப், டாக்ஸி டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் புதிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் பிளாஸ்டிக் ஸ்க்ரீன் ஒன்றை பொருத்தி வருகின்றனர்.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

வாகனத்தில் டிரைவர் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு இடையே இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்பதுடன், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். காவல் துறையும் இந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

ஆப் சார்ந்து செயல்படும் கேப்கள், டாக்ஸிகள், ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்களுடனான கூட்டத்தை காவல் துறை நடத்தியுள்ளது. இதில், பிளாஸ்டிக் ஸ்க்ரீனின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. டாக்ஸி யூனியன் தலைவர்களும் இதனை ஏற்று கொண்டு, அனைத்து வாகனங்களிலும் பிளாஸ்டிக் ஸ்க்ரீனை பொருத்த முடிவு செய்துள்ளனர்.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்து வாகனங்களில் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் பலன் அளிக்கும் என்று நம்புகிறோம். பாலித்தீன் மூலமாக மிகவும் குறைவான விலையில் H-வடிவ பேரியர்களை நாங்கள் உருவாக்கினோம்.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

காரியா பகுதியில் உள்ள சில டெய்லர்கள் முதல் செட்டை எங்களுக்கு உருவாக்கி தந்தனர். அதனை நாங்கள் கேப் டிரைவர்களுக்கு வினியோகம் செய்தோம். தற்போது மற்ற டாக்ஸி டிரைவர்களும் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீனை வாங்க தொடங்கி விட்டனர்'' என்றனர். இந்த பேரியரின் விலை 220 ரூபாய் மட்டுமே என கூறப்படுகிறது.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''கோ-டிரைவர் இருக்கையில் அமர பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பின் இருக்கையில் 2 பேர் அமர்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்'' என்றனர். கொல்கத்தா நகரில் ஆட்டோ ரிக்ஸாக்களிலும் தற்போது இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் பொருத்தப்படுகின்றன.

வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

மேற்கு வங்கம் மட்டுமல்லாது, தமிழகத்திலும் ஏராளமான வாகனங்களில் இத்தகைய பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் உடன் வாடகை கார்கள் வலம் வர தொடங்கியுள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19: Cab, Auto, Taxi Drivers In Kolkata Installs Plastic Screen To Ensure Social Distancing. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X