கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

கொரோனா பரவலாம் என்ற அச்சத்தால், டாக்ஸிகளில் ஏசியை ஆன் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

கொரோனா வைரஸ் (கோவிட்-19) நமது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதால், நம்மில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறோம். தற்போதைய ஊரடங்கு வரும் மே 17ம் தேதி வரை நீடிக்கவுள்ளது. ஆனால் அதன் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

எனினும் ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் சூழலில், மறுபக்கம் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

இதன்படி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரின் ஒரு சில இடங்களில் தற்போது டாக்ஸிகளின் இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ரைடின்போது ஏசிக்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்பது ஒன்றாகும்.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

இதனால் இந்த கோடை காலத்தின்போது ஏசி வசதியுடன் கூடிய பயணத்தை எதிர்பார்க்க வேண்டாம். கேப் ஆபரேட்டர்களும், ஆன்லைன் கேப் நிறுவனங்களும் தங்கள் டாக்ஸிகளில், ஜன்னல் கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டு, ஏசியை ஆஃப் செய்ய முடிவு செய்துள்ளன. இதன் மூலம் கொரோனா வைரஸ் செழித்து வளராது என நம்பப்படுகிறது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

அத்துடன் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையலாம் எனவும் கூறப்படுகிறது. கொல்கத்தா நகரில் தற்போது ஏசி டாக்ஸி ஆபரேட்டர்கள் பலர், பயணிகளின் அனுமதியை பெற்று இதனை செய்து வருகின்றனர். ஏசி கார்களில் கோவிட்-19 வேகமாக பரவதற்கான வாய்ப்புகள் இருக்குமோ? என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு ஏசி ரெஸ்டாரென்ட் மூலமாக கோவிட்-19 வைரஸ் பரவியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்டோமொபைல் நிபுணரும், பேராசிரியருமான பிரபீர் பாசு என்பவர் கூறுகையில், ''இந்த ஆய்வு மறுக்க முடியாததாக உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை அப்படியே முற்றிலுமாக ஒதுக்கி விட முடியாது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

குறிப்பாக காரை எடுத்து கொண்டால், அதற்குள் இட வசதி மிகவும் குறைவாகதான் இருக்கும்'' என்றார். இரு பெரும் கேப் நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் ஆகியவை ஏற்கனவே பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. இதில், ரைடின்போது விண்டோ கண்ணாடிகளை கீழே இறக்கி விட வேண்டும் எனவும், ஏசியை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

பயணிகள் மற்றும் டிரைவர் பார்ட்னர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் விண்டோ கண்ணாடிகளை கீழே இறக்கி விடுவது உண்மையில் பாதுகாப்பான ஒரு ஆப்ஷன் என்றுதான் டாக்டர்களும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

இதுகுறித்து ஆர்என் தாகூர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் சயின்ஸஸ் ஆலோசகர் அரிந்தம் பிஸ்வாஸ் கூறுகையில், ''மூடப்பட்ட சூழ்நிலைகளில் ஏசியை ஆன் செய்து வைக்கும்போது, வைரஸ் உயிர் வாழ்வதற்கான மற்றும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்'' என்றார். ஆனால் பயணிகள் எந்தளவிற்கு இதனை ஏற்று கொள்வார்கள்? என்பது தெரியவில்லை என டிரைவர்கள் சிலர் கூறியுள்ளனர்.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

கோடை வெயில் வறுத்தெடுக்கும் சூழலில், ஏசி-யை ஆன் செய்யும்படி பயணிகள் கூறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்படலாம் அல்லது பயணிகளை இழக்க நேரிடலாம் எனவும் டாக்ஸி டிரைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டிரைவர்கள் சிலர் கூறுகையில், ''ஆபத்தை உணர்ந்திருந்தாலும், ஏசியை ஆன் செய்யும்படி பயணிகள் எங்களிடம் கூறலாம்.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

ஏசிக்கும் சேர்த்துதான் சேர்த்து கட்டணம் வசூல் செய்கிறீர்கள்? எனவும் அவர்கள் எங்களிடம் வாக்குவாதம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றனர். எனினும் கொல்கத்தாவில் தற்போது டாக்ஸி டிரைவர்கள் பலர் ஏசியை ஆன் செய்வதில்லை. அத்துடன் ஜன்னல் கண்ணாடிகளையும் கீழே இறக்கி விட தொடங்கியுள்ளனர்.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

இதுதொடர்பாக டாக்ஸி டிரைவர் ஒருவர் கூறுகையில், ''வாடிக்கையாளர்களின் அனுமதியை பெற்று ஏசியை ஆஃப் செய்து வருகிறோம். அத்துடன் விண்டோவையும் திறந்து வைக்கிறோம். இது ஏன் அவசியம்? என்பது குறித்து அவர்களிடம் எடுத்துரைக்கவும் செய்கிறோம். ஒரு சில பயணிகள் இதனை பாராட்டி வரவேற்கின்றனர்.

கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

ஆனால் சில பயணிகளோ, ஏசியை ஆன் செய்யும்படி வலியுறுத்துகின்றனர்'' என்றார். கொரோனா நம்முடன் நீண்ட காலம் இருக்கலாம் எனவும், எனவே நாம் அதனுடனேயே வாழ பழகிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இதனால் நீங்களும் மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19: Cabs To Switch Off ACs During Rides. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X