வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, வெறும் 1,500 ரூபாய் செலவில், சூப்பரான வழி ஒன்றை, கோவை கார் உரிமையாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய இந்த ஊரடங்கு, மே 3ம் தேதி வரை, மே 17ம் தேதி வரை என நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. ஆனால் மே 17ம் தேதியும் ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

அதற்கு பதிலாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கில் தற்போது ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பொது போக்குவரத்து வாகனங்களுக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருவதும் ஒன்றாகும். இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, ரிக்ஸா ஆகிய பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

ஆனால் தற்போது பஸ், ரயில், விமான சேவைகளை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன. அத்துடன் ஒரு சில இடங்களில் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் முக்கியமானவர்கள்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

தினசரி வருவாயை நம்பியுள்ள அவர்கள், ஊரடங்கால் வேலையிழந்து, குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் ஆட்டோ, டாக்ஸிகளின் சேவை தொடங்கியுள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ஆட்டோ, டாக்ஸி, கேப் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் எந்த அளவிற்கு முன்வருவார்கள்? என்பது சந்தேகமாக உள்ளது.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

கொரோனா அச்சம் காரணமாக சொந்த கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் பயணிகள் பாதுகாப்பானதாக கருதுவார்கள் எனவும், எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை அவர்கள் தவிர்க்க கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை உறுதி செய்வது உண்மையிலேயே சவாலான விஷயம்தான்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

ஆனால் கோவையை சேர்ந்த வாடகை கார் உரிமையாளர் ஒருவர், தனது வாகனத்தில் சமூக விலகலை உறுதி செய்வதற்காக வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமர்நாத். வாடகை கார் உரிமையாளரான இவர், சமூக விலகலை உறுதி செய்யும் வகையில், தனது காரின் இன்டீரியரில் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்துள்ளார்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

இதன்படி காரின் இன்டீரியரில், கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புகளை அவர் அமைத்துள்ளார். இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் உதவியுடன், காரின் இன்டீரியர் தனித்தனி கேபின்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையே சமூக விலகல் உறுதி செய்யப்படும்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

தனித்தனியாக அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்பதால், டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையே 'பிஸிக்கல் கான்டாக்ட்' தவிர்க்கப்படும். இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் உதவியுடன் கொரோனா அச்சமின்றி பயணிகள் பயணம் செய்யலாம். கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை இந்த ஸ்க்ரீன் குறைக்கும்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

பிலால் என்ற வடிவமைப்பாளர்தான், அமர்நாத்தின் காருக்குள் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மாடிஃபிகேஷனை செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் இயங்கும் வாடகை கார்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக என்னென்ன மாற்றங்களை செய்துள்ளனர் என ஒரு மாதமாக ஆய்வு செய்தோம்.

வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

இதில், செலவு குறைவாக இருந்த மாடலை தேர்வு செய்து, அதற்கு ஏற்ப வடிவமைத்துள்ளோம்'' என்றார். இந்த மாடிஃபிகேஷனை செய்வதற்கு, 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் எனவும் பிலால் கூறியுள்ளார். குறைவான செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு நடவடிக்கை பயணிகளிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19: Coimbatore Car Owner Installs Plastic Screen To Ensure Social Distancing. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X