2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

1,200 கிலோ மீட்டர் துணிச்சலாக சைக்கிள் ஓட்டிய சிறுமியை இந்தியாவே வியந்து பார்த்து கொண்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

கொரோனா வைரஸ் (கோவிட்-19) ருத்ரதாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சாதாரண கூலி தொழிலாளர்கள்தான். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கால், லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

எனவே அவர்களின் வாழ்க்கையை வறுமை மீண்டும் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. வேலையை இழந்த நிலையில், உணவு கிடைக்காததால் வெளி மாநிலங்களில் பணியாற்றும் கூலி தொழிலாளர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு விட்டது.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

பேருந்து, ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு சில இடங்களில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

மேலும் பேருந்து, ரயில், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. ஆனால் இன்னமும் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் கூலி தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. இதன் காரணமாக ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே ஊர் திரும்பி வருகின்றனர்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

இன்னும் சிலரோ சைக்கிள் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டுள்ளனர். இந்த வரிசையில் 15 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர், சுமார் 1,200 கிலோ மீட்டர்கள் சைக்கிள் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். காலில் காயமடைந்த தன் தந்தையை பின் இருக்கையில் அமர வைத்து அவர் சைக்கிள் மிதித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

இந்த நிகழ்வு தற்போது நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா அருகே இருக்கும் சிறு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கு 15 வயது மட்டுமே ஆகிறது. இவர் தனது தந்தையுடன் தலைநகர் டெல்லியில் வசித்து வந்தார். அங்கு அவரது தந்தை எலெக்ட்ரிக் ரிக்ஸா ஓட்டி வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவர் வேலையை இழந்தார்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

அத்துடன் அவரது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. தந்தைக்கு வேலை பறிபோன நிலையில், உதவிகள் எதுவும் கிடைக்காததால், சொந்த ஊர் திரும்புவது என ஜோதி முடிவு செய்தார். ஆனால் பஸ் குறித்து விசாரித்தபோது சுமார் 6 ஆயிரம் ரூபாய் கட்டணமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஜோதியிடமும், அவரது தந்தையிடமும் அவ்வளவு பணம் இல்லை.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

இதனால் சைக்கிள் மூலமாக சொந்த ஊர் திரும்புவது என ஜோதி துணிச்சலாக முடிவு செய்தார். ஜோதியும், அவரது தந்தையும் டெல்லியில் இருந்து கிளம்பியபோது அவர்களிடம் 600 ரூபாய் மட்டுமே இருந்தது. 500 ரூபாய் மதிப்பில் சைக்கிள் வாங்கிய நிலையில், எஞ்சிய பணத்தை மட்டும் கையில் வைத்து கொண்டு அவர்கள் இருவரும் பயணத்தை தொடங்கினர்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

அவர்கள் தங்கள் பயணத்தை கடந்த மே 10ம் தேதி தொடங்கினர். கடந்த மே 16ம் தேதியன்று அவர்கள் தங்கள் சொந்த ஊரான தர்பங்காவிற்கு திரும்பினர். டெல்லியில் இருந்து தந்தையை பின் இருக்கையில் அமர வைத்து கொண்டு சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரம் ஜோதி சைக்கிள் ஓட்டியுள்ளார். உண்மையிலேயே இது பெரிய விஷயம்தான்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

இதுகுறித்து ஜோதி கூறுகையில், ''இரவு நேரத்தில் சைக்கிள் ஓட்டும்போது கூட எனக்கு எந்தவிதமான பயமும் ஏற்படவில்லை. ஏனெனில் நெடுஞ்சாலைகளில் ஏராளமான தொழிலாளர்கள் நடந்து சென்று கொண்டுதான் இருந்தனர். சாலை விபத்துக்கள் மட்டுமே எங்களது ஒரே கவலையாக இருந்தது. நல்ல வேளையாக சாலை விபத்தில் நாங்கள் சிக்கவில்லை.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

டெல்லியில் எனது தந்தை எலெக்ட்ரிக் ரிக்ஸா ஓட்டி வந்தார். எனினும் ஊரடங்கால், எலெக்ட்ரிக் ரிக்ஸாவை அதன் உரிமையாளரிடம் எனது தந்தை ஒப்படைத்து விட்டார். இதன் காரணமாக எனது தந்தை வேலையை இழந்தார். டெல்லியில் பணம் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டு வந்தோம். வீட்டு உரிமையாளரும் உதவி செய்யவில்லை.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

வாடகையை செலுத்துங்கள், இல்லாவிட்டால் வீட்டை காலி செய்யுங்கள் என அவர் கறாராக கூறி விட்டார். டெல்லியில் எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால், எங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பி சென்று விடலாம் என முடிவு செய்தோம். இதற்காக ஒரு லாரி டிரைவரிடம் பேசினோம். ஆனால் டெல்லியில் இருந்து தர்பங்கா கூட்டி செல்ல அவர் எங்களிடம் 6,000 ரூபாய் கேட்டார்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. எனவேதான் சைக்கிள் பயணம் மேற்கொண்டோம் என்றார். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இரவு, பகல் பாராமல் ஜோதி சைக்கிள் ஓட்டியுள்ளார். ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் மட்டுமே அவர் ஓய்வு எடுத்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''இரவு நேரங்களில், பெட்ரோல் பங்க்குகளில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொள்வோம்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

நாங்கள் பெரும்பாலும் நிவாரண முகாம்களில்தான் சாப்பிட்டோம். வழியில் நாங்கள் சந்தித்த ஒரு சில நல்ல மனிதர்களும் உணவு வழங்கினர்'' என்றார். ஜோதியும், அவரது தந்தையும் ஊர் திரும்பிய உடனேயே அங்கு இருக்கும் நூலகத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கிராம மக்கள் அவர்களுக்கு உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!

ஆனால் தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள ஒரே ஒரு பெண் என்பதால், ஜோதி வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். காலில் காயமடைந்த தந்தையை சைக்கிள் பின்னால் அமர வைத்து கொண்டு, 1,200 கிலோ மீட்டர் இந்த துணிச்சலான சிறுமி தற்போது நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
COVID-19 Lockdown: 15-year-old Girl Brings Injured Father On Cycle From Delhi To Bihar. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X