சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

சவாரி இல்லாததால், ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரை ஓட்டுனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் மிகவும் முக்கியமானவர்கள். கடந்த மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அன்றைய தினத்தில் இருந்து ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் ஓடவில்லை.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

இதன் காரணமாக ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் வருவாய் இழந்தனர். அவர்களின் குடும்பத்தினர் உணவுக்கு சிரமப்படும் சூழல் உருவானது. ஆனால் ஊரடங்கில் படிப்படியாக வழங்கப்பட்ட தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோ, டாக்ஸிகளை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. எனினும் அதன் பின்னரும் கூட ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு பெரிதாக வருமானம் இல்லை.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் ஆட்டோ, டாக்ஸிகளில் பயணம் செய்வதை பொது மக்கள் தவிர்த்து வருவதே இதற்கு காரணம். இதன் காரணமாக ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் பலர் வேறு வேலைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இன்னும் சிலரோ ஆட்டோ, டாக்ஸிகளில் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்து, வேறு தொழில்களை செய்ய தொடங்கியுள்ளனர்.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

இந்த வகையில் கோவையை சேர்ந்த ஓட்டுனர் ஒருவர், ஆட்டோவின் பின் பகுதியில் பெட்டிக்கடை போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். சவாரி இருக்கும் சமயங்களில் அவர் ஆட்டோ ஓட்டுவார். சவாரி இல்லாத சமயங்களில் ஆட்டோவின் பின் பகுதியில் பெட்டி கடையை திறந்து வியாபாரம் செய்ய தொடங்கி விடுகிறார். அதற்கு ஏற்ற வகையில் அவரது ஆட்டோ மாற்றப்பட்டுள்ளது.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

இதேபோல் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் ஒருவர், தனது காரில் பயணிகள் அமரும் இருக்கைகளை அகற்றி விட்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே பதிவு செய்துள்ளது. இந்த வகையில் மற்றொரு ஆட்டோ டிரைவர் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

இன்றைய பதிவில் பாலகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பற்றிய தகவல்களைதான் பார்க்க போகிறோம். மதுரை கோச்சடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பாலகிருஷ்ணன், கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வந்தார். ஆனால் கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக நாட்டிலுள்ள மற்ற ஆட்டோ ஓட்டுனர்களை போல் பாலகிருஷ்ணனும் பாதிக்கப்பட்டார்.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

பாலகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்னையால் வருவாய் இழந்த காரணத்தால், அவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் மனம் தளராத பாலகிருஷ்ணனன் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டார். அதற்கு பதிலாக ஆட்டோவிலேயே வடை கடையை அவர் திறந்துள்ளார்.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

பாலகிருஷ்ணனின் ஆட்டோவில் வடை சுடுவதற்கு தேவையான அடுப்பு, பாத்திரம் என அனைத்தும் உள்ளன. அத்துடன் வடைகளை வைப்பதற்காக தேனீர் கடைகளில் இருப்பதை போன்ற கண்ணாடி பெட்டி, வடை சாப்பிடுபவர்களின் தேவைக்காக தண்ணீர் கேன் என ஆட்டோவை அப்படியே வடை கடையாக அவர் மாற்றியுள்ளார்.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

அவரது ஆட்டோ வடை கடையில் 10 ரூபாய்க்கு 4 வடை கொடுக்கப்படுகிறது. தற்போது இந்த வடை கடையின் மூலம்தான் வருவாய் ஈட்டி வருவதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சவாரி கிடைக்காமல் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தடுமாறி வரும் நிலையில், மனம் தளராமல் மாற்றி யோசித்துள்ள பாலகிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான்.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

பாலகிருஷ்ணனுக்கு ஆட்டோ ஓட்டுவதில் மட்டுமல்லாது, உணவக தொழிலும் ஏற்கனவே முன் அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தில் அவர் தற்போது வடை கடையை நடத்தி வருகிறார். இந்த வடை கடையின் மூலமாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வரை பாலகிருஷ்ணன் வருவாய் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் மட்டுமல்லாது, பேருந்து உரிமையாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், கொரோனா அச்சத்தால் பேருந்து பயணங்களை மக்கள் தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

இதன் காரணமாக வரும் காலங்களில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை உயரும் என வாகன நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. மேலும் தீபாவளி பண்டிகை காலமும் வரவுள்ளதால், வாகன விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Auto Rickshaw Converted Into Snacks Stall In Madurai. Read in Tamil
Story first published: Friday, August 14, 2020, 22:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X