லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

லாக்டவுனை மீறி பயணம் செய்வதற்காக புதுமண தம்பதி செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், பிரேசில் என உலகின் பல்வேறு நாடுகளை முற்றிலுமாக நிலைகுலைய வைத்துள்ள கோவிட்-19 வைரஸ், இந்தியாவிலும் தற்போது தனது உக்கிரத்தை காட்ட தொடங்கியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என அனைத்து விதமான பொது போக்குவரத்து சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தேவை இல்லாமல் வெளியே வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

இதனால் தனியார் கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களின் இயக்கமும் இன்றி சாலைகள் காற்று வாங்கி வருகின்றன. கடும் எச்சரிக்கைகளையும் மீறி தேவை இல்லாத காரணங்களுக்காக வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

ஆனால் காவல் துறையினரின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், ஒரு சிலர் தொடர்ந்து பயணம் செய்து கொண்டுதான் உள்ளனர். ஊரடங்கால் வேலையிழந்தவர்கள், இங்கு இருந்தால் கொரோனா பரவி விடுமோ? என்ற அச்சத்தில் இருப்பவர்கள், உணவு கிடைக்காமல் கஷ்டப்படும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டுள்ளனர்.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால், சைக்கிள் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் அவர்கள் சொந்த ஊர் சென்று வருகின்றனர். இன்னும் சிலரோ வித்தியாசமான வழிகளை பயன்படுத்தி, சொந்த ஊர் சென்று கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பை விமான நிலைய ஊழியர் ஒருவர், வெங்காய வியாபாரி போல வேடம் தரித்து, தனது சொந்த ஊரான அலகாபாத்திற்கு சென்றார்.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

அத்தியாவசியமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என்பதால், லாரி ஒன்றில் வெங்காயத்தை வாங்கி ஏற்றி கொண்டு அவர் அலகாபாத் சென்றடைந்தார். இதற்காக ரூ.3 லட்சத்தை அவர் செலவிட்டது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள மற்றொரு சம்பவமும் கவனம் பெற்றுள்ளது.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

பயணங்களுக்கு தடை இருக்கும் சூழலில், புதுமண தம்பதியரும், அவரது குடும்பத்தினரும் நோயாளிகளை போல நடித்து ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில், நேற்று முன் தினம் (ஏப்ரல் 29ம் தேதி) நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று உத்தர பிரதேச போலீசார், சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தினர்.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இருந்து முசாபர்நகர் சென்று கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸில், மணமகன் மற்றும் மணமகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இருந்தனர். நோயாளிகள் என்ற போர்வையில் அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதை கண்டதும் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

எனவே புதுமண தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றி வந்ததாக, ஆம்புலன்ஸின் டிரைவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மணமகன், மணமகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 7 பேர், கட்டாலி பகுதியில் இருக்கும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

பயணங்களுக்கு இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களை முறைகேடாக பயன்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரள மாநிலத்தில் இருந்து சிலர் தமிழகத்திற்குள் நுழைந்தனர்.

லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?

மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகம் வருவதற்கு அவர்கள் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தினர். அதே பாணியைதான் தற்போது உத்தர பிரதேசத்தில் புதுமண தம்பதியரும், அவரது குடும்பத்தினரும் பின்பற்றியுள்ளனர். கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அத்தியாவசிய பணிகள் இருக்கும்பட்சத்தில், சிறப்பு அனுமதி பெற்று பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Bride, Groom Return In Ambulance By Posing As Patients In Uttar Pradesh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X