அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

இளைஞர் ஒருவர் 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சென்று, அவசர அவசரமாக திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

உலகின் பல்வேறு நாடுகளை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), இந்தியாவில் தற்போது தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே ஊரடங்கையும் மத்திய அரசு தொடர்ச்சியாக நீட்டித்து வருகிறது.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

முதலில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் மே 17ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்றுதான் (மே 1) வெளியானது.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

ஊரடங்கு காரணமாக பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. மேலும் தனியார் கார், டூவீலர் போன்ற வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

இருந்தபோதும் ஒரு சிலர் அவசர அவசரமாக தங்கள் திருமணத்தை முடித்து வருகின்றனர். இதற்காக சிறப்பு அனுமதி பெற்று, விதிமுறைகளை பின்பற்றி மிக எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு திருமணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புர் மாவட்டத்தில் உள்ள பாட்டியா கிராமத்தை சேர்ந்தவர் கல்கு பிரஜபதி. 23 வயதாகும் இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஏப்ரல் 25ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என கடைசி நிமிடம் வரை காத்திருந்தார்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

எனினும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மஹோபா மாவட்டம் பூனியா கிராமத்தில் இருக்கும் மணப்பெண் ரிங்கியின் வீட்டிற்கே நேரடியாக சென்று திருமணத்தை முடித்து விடுவது என கல்கு பிரஜபதி அதிரடியாக முடிவு செய்தார். கல்கு பிரஜபதியின் கிராமத்தில் இருந்து மணப்பெண் ரிங்கியின் கிராமம், சுமார் 100 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

ஆனால் தற்போது பஸ், ரயில் சேவைகள் இல்லாததால், இந்த 100 கிலோ மீட்டர் தொலைவையும் சைக்கிளில் கடப்பது என கல்கு பிரஜபதி முடிவெடுத்தார். இதன்படி உடனடியாக சைக்கிளை எடுத்த கல்கு பிரஜபதி, மணமகள் ரிங்கியின் ஊருக்கு சென்று திருமணத்தை முடித்தார். சைக்கிளில் அவர் மட்டுமே தனியாக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

மணமகள் ரிங்கியின் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணம் நடந்தது. மணமகனும், மணமகளும் சாதாரணமான உடையில், தங்கள் முகத்தை மாஸ்க்கால் மூடியபடி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து கல்கு பிரஜபதி கூறுகையில், ''எங்கள் திருமணத்திற்கு போலீசாரிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

எனவே வேறு வழியில்லாமல் சைக்கிளிலேயே மணமகளின் வீட்டிற்கு சென்று விட்டேன்'' என்றார். இவர்கள் திருமணம் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாக ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. எனவேதான் சைக்கிளில் சென்று கல்கு பிரஜபதி திருமணத்தை முடித்துள்ளார்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

இது தொடர்பாக கல்கு பிரஜபதி கூறுகையில், ''என்னிடம் மோட்டார்சைக்கிள் உள்ளது. எனினும் லைசென்ஸ் இல்லை. எனவே சைக்கிள்தான் நல்ல தேர்வாக இருந்தது. ஆனால் பயணத்தின்போது நோய் தொற்று எதுவும் எனது வாயை கைக்குட்டையால் மூடிக்கொண்டேன். இந்த அறிவுரையை எனக்கு பலரும் கூறினர். ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் அணிந்து கொண்டு எனது பயணத்தை காலை நேரத்தில் தொடங்கினேன்'' என்றார்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

தற்போதைய நிலையில் திருமணத்தின் முக்கிய நிகழ்வுகள் மட்டும்தான் நடைபெற்றுள்ளன. எனவே எஞ்சிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, கொரோனா வைரஸ் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? என்று புதுமண தம்பதியினர் காத்து கொண்டுள்ளனர். பொதுவாக திருமணம் முடிந்தால், கிராம மக்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

அந்த நிகழ்ச்சியும் இன்னும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் விருந்து வைத்து கொள்ளலாம் என புதுமண தம்பதி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கல்கு பிரஜபதி கூறுகையில், ''இவ்வளவு ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைத்த அனைவரையும், அழைப்பிதழ் அச்சடித்து வரவேற்போம். அதன்பின் எஞ்சிய நிகழ்ச்சிகளையும் முடிப்போம்'' என்றார்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

ஆனால் திருமணத்திற்கு சென்றதை காட்டிலும், திருமணம் முடிந்த பிறகான பயணம்தான் கல்கு பிரஜபதிக்கு இன்னும் கடினமாக இருந்துள்ளது. ஏனெனில் திரும்பி வரும்போது, தனது மனைவியை பின் இருக்கையில் அமர வைத்து அவர் சைக்கிள் ஓட்டி வந்துள்ளார். இது தொடர்பாக கல்கு பிரஜபதி கூறுகையில், ''டபுள் லோடுடன் பெடல் செய்து வந்தேன்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

எனது கால்களுக்கு இவ்வளவு அதிகமாக வலி ஏற்படும் என நான் கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. இதன் காரணமாக என்னால் தூங்க முடியவில்லை. நான் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது'' என்றார். எனினும் இந்த திருமணம் இரண்டு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

இவ்வளவு அவசரமாக ஏன் திருமணம் செய்ய வேண்டும்? லாக்டவுன் முடியும் வரை காத்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பியதற்கு, கல்கு பிரஜபதி பதில் அளித்துள்ளார். இதன்படி தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால், வீட்டில் பிரச்னைகள் இருப்பதாக கல்கு பிரஜபதி கூறியுள்ளார். இதை விட, குடும்பத்தினருக்கு சமைப்பதற்கு வீட்டில் யாரும் இல்லை எனக்கூறி அனைவரையும் அவர் திகைக்க வைத்துள்ளார்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

இதுதவிர லாக்டவுன் தளர்த்தப்படுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என்பது எங்களுக்கு தெரியாது எனவும் கல்கு பிரஜபதி கூறியுள்ளார். திருமணத்திற்காக கல்கு பிரஜபதி கடந்த ஏப்ரல் 27ம் தேதி பயணம் செய்ய தொடங்கினார். அன்றைய தினம் மாலையே அவர் அங்கு சென்று விட்டார். இதன்பின் மறுநாள், அதாவது ஏப்ரல் 28ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

சைக்கிள் ஓட்டி சென்றது சிரமத்தை ஏற்படுத்தினாலும், திருமணம் நடைபெற்றதும், மணமகளை வீட்டிற்கு கூட்டி வந்ததும் மகிழ்ச்சியை அளிக்கிறது என கல்கு பிரஜபதி கூறியுள்ளார். கல்கு பிரஜபதியை போல் ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், பலர் திருமணங்களை தற்காலிகமாக தள்ளி வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Groom Cycles 100 KM To Get Married In Uttar Pradesh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X