1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

1,500 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள 4 தொழிலாளர்களின் கதை, மக்களை கண் கலங்க வைத்துள்ளது.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போதைக்கு மனிதர்களிடம் இருந்து விலகுவதாக இல்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே இன்னும் நீண்ட காலத்திற்கு கொரோனா நம்முடனே இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

இதன் காரணமாக கொரோனா வைரசுடன் வாழ பழகி கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், தினக்கூலி தொழிலாளர்கள்தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

MOST READ: நல்ல மனுஷன்யா... சொந்த ஊர் செல்ல சைக்கிளை திருடிய தொழிலாளி... மனசு கேட்காமல் என்ன செய்தார் தெரியுமா?

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

இதனால் அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தற்போது திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தினமே பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

மேலும் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. எனவே வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி கொண்டு, உணவு கிடைக்காமல் தவித்து வரும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் சைக்கிள் மூலமும், நடந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

MOST READ: கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை கார் போன்ற வாகனங்களில் கடப்பதே சிரமமான ஒரு காரியம்தான். அப்படி இருக்கையில் சைக்கிள் மூலமும், நடந்தும் கடப்பது என்பது மிகவும் சவாலான ஒரு காரியம். ஆனால் வேறு வழி இல்லாததால், தொழிலாளர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ் பெற்று சொந்த ஊர் திரும்பும் ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

ஆனால் தொழிலாளர்கள் பலரிடம் பைக்கோ அல்லது காரோ இல்லை. இதுகுறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி நம் மனதில் பாரத்தை ஏற்றி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி, தொழிலாளர்கள் மீது நமக்கு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. ஒடிசாவை சேர்ந்த 4 பேர் ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

MOST READ: போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

அவர்கள் நால்வரும் புதுச்சேரியில் உள்ள ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அங்கு சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலையை அவர்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலை செய்து வந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. எனினும் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் புதுச்சேரியிலேயே தங்கியிருந்தனர்.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்வதால் தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்று விடுவது என அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் பஸ், ரயில் சேவைகள் எதுவும் இல்லாததால், தாங்கள் சேமித்து வைத்திருந்த சிறு தொகையில் ஆளுக்கு ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு தற்போது ஒடிசா புறப்பட்டுள்ளனர்.

MOST READ: கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடிஜி-யின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தை சேர்ந்த நரோட்டம் பாரிக், ஜிதேந்திர பாரிக் மற்றும் சுரேந்திர பாரிக் ஆகியோரும், கட்டாக் மாவட்டத்தை சேர்ந்த பாலு என்பவருமாக மொத்தம் நான்கு பேர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து அவர்களின் சொந்த ஊர் சுமார் 1,500 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

இதுகுறித்து நரோட்டம் பாரிக் கூறுகையில், ''எங்கள் சேமிப்பு பணம் அனைத்தும் சைக்கிள் வாங்குவதற்கே செலவாகி விட்டது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை'' என்றார். அதே நேரத்தில் ஊரடங்கிற்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களுக்கு உரிய முறையில் சம்பளம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

எனினும் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக அவர்கள் புதுச்சேரியிலேயே தங்கியிருந்தனர். ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே செல்வதால், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர். அவர்கள் நான்கு பேரும் கடந்த புதன்கிழமை இரவு தங்கள் பயணத்தை தொடங்கினர். சொந்த ஊர் சென்று சேர்வது என்ற உறுதியுடன் கொளுத்தும் வெயிலில் அவர்கள் சைக்கிள் ஓட்டி வருகின்றனர்.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

அவர்கள் நான்கு பேரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னைக்கு வந்து சேர்ந்தனர். சென்னையில் ஒரு நல்ல மனிதர் அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் பிரட் போன்றவற்றை வழங்கி உதவி செய்துள்ளார். இதன்பின் அன்றைய தினம் மதியமே அவர்கள் மீண்டும் தங்கள் கடினமான பயணத்தை தொடங்கினர். சுமார் 12 நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

1,500 கிலோ மீட்டர்கள் தூரத்தை சைக்கிள் மூலமாக கடப்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு அப்படி ஒரு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இடம்பெயரும் தொழிலாளர்கள் பிரச்னை தீவிரம் அடைந்து வருகிறது. எனவே அவர்கள் ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

இதற்கான சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்காத வெளி மாநில தொழிலாளர்கள் இப்படி சைக்கிள் மூலமாகவும், நடந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Migrant Workers In Puducherry Set Out On 1500 KM Cycle Journey To Odisha. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X