கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, தமிழக அரசு வகுத்துள்ள ஒரு வியூகம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

கொரோனா வைரஸை (கோவிட்-19) ஒழித்து கட்டுவதற்காக மனித இனம் போராடி வருகிறது. உலகின் பல நாடுகளில், கோவிட்-19 வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் உலக அளவில் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியிருந்தது. எனினும் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், இரண்டாம் கட்டமாக வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகதான் பொருளாதார சீர்குலைவை பற்றி கவலைப்படாமல், ஊரடங்கு உத்தரவின் மூலம் நாட்டையே முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏறக்குறைய நாட்டின் அனைத்து மாநில அரசுகளும் தற்போது தங்கள் எல்லைகளை சீல் வைத்துள்ளன.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

எல்லை பகுதிகளில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தால், வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. அத்தியவாசிய சேவைகளில் இருக்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, மிகவும் வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்துள்ளது.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

இந்திய அளவில் பார்த்தால், கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரையில், 1,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாகன இயக்கத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

மாநிலத்திற்கு உள்ளே இவ்வாறான நடவடிக்கைகள் என்றால், எல்லை பகுதிகளிலும் தமிழக அரசு தீவிரமான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. வாகனங்கள் தேவை இல்லாமல் தமிழகத்திற்குள் வருவதை தடுப்பதற்காக, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சிலர் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வாகனங்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர்.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

எனவே வாகன இயக்கத்தை நிறுத்துவதற்காக, ஆந்திர மாநிலத்தின் எல்லையில் தமிழக அரசு அதிரடியாக தடுப்பு சுவர்களை கட்டியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமாக இருக்கும் ஆந்திராவும் கோவிட்-19 வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை 1,097 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனங்களை தடுப்பதற்காக, ஆந்திர எல்லையில் தடுப்பு சுவர்களை கட்டி அதிரடி காட்டியுள்ளது தமிழக அரசு. இந்த நடவடிக்கை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

கோவிட்-19 பரவுவதை தடுப்பதற்காகவும், ஊரடங்கு விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவதற்காகவும், ஆந்திர மாநிலத்தின் எல்லையில், 7 அடி உயர சுவர்களை கட்டும்படி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில் வாகன இயக்கத்தை தடுப்பதற்காக ஆந்திர எல்லையில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

சித்தூர்-பொன்னை-சென்னை சாலை மற்றும் சித்தூர்-குடியாத்தம் சாலைகளில், 2 முக்கியமான எண்ட்ரி மற்றும் எக்ஸிட் பாயிண்ட்களில், 7 அடி உயரம் வரையில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. தேவை இல்லாத வாகனங்களின் இயக்கத்தை தடுப்பதற்காகவே இந்த சுவர் எழுப்பும் முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...

தமிழக அரசின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையை மையமாக வைத்து மீம்ஸ்கள் கூட உருவாக்கப்பட்டு, சமூக வலை தளங்களில் அதிகமாக உலா வருகின்றன. எனினும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்காக, சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், மறுபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நல்ல விஷயம். தமிழகத்தில் தற்போது வரை 1,020 பேர் மீண்டுள்ளனர். நோயாளிகளை குணப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Tamil Nadu Builds Walls At Andhra Border To Stop Movement Of Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X