இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

வாகன ஓட்டிகளிடம் இருந்து தமிழக காவல் துறை அபராதமாக வசூல் செய்த தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினத்தில் இருந்து ஆட்டோ, டாக்ஸி, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

தனியார் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் கைதும் செய்யப்பட்டனர். அத்துடன் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

இதன் பின்னர் கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் வாகனங்களை இயக்குவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னமும் ஊரடங்கு நீடித்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். எனவே காவல் துறையினரின் நடவடிக்கை இன்னமும் தொடர்ந்து வருகிறது.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

தேவை இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களின் மீதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீதும் காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரையிலான (நேற்று) 140 நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

இதன்படி கடந்த 140 நாட்களில், ஊரடங்கை மீறியது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக மொத்தம் 8,67,158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகும். அத்துடன் 9,57,743 பேர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

ஆனால் காவல் துறையினரால் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6,77,629 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விதிகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த 140 நாட்களில், ஒட்டுமொத்தமாக சுமார் 20.16 கோடி ரூபாயை தமிழக காவல் துறை அபராதமாக வசூலித்துள்ளது.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

தமிழகத்தில் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்வதற்கு இன்னமும் பல்வேறு கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. இ-பாஸ் முறை அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகளுக்கு கூட ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக இ-பாஸ் முறையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...

ஆனால் தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் முறையை திரும்ப பெறவில்லை. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் பேருந்துகளுக்கு மீண்டும் எப்போது அனுமதி வழங்கப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Tamil Nadu Collects Rs 20.16 Crore Fine From Traffic Rule Violators In 140 Days. Read in Tamil
Story first published: Wednesday, August 12, 2020, 20:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X