சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அதிநவீன ரோபோவை தமிழகம் களத்தில் இறக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

கொரோனா வைரஸை (கோவிட்-19) எதிர்கொள்ள முடியாமல், மனித இனம் தடுமாறி வருகிறது. உலகளவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். கோவிட்-19 வைரசுக்கு தடுப்பூசி, மருந்துகள் எதுவும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

இதனால் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதுதான், கோவிட்-19 வைரஸை ஒழித்து கட்ட நம்மிடம் தற்போதைக்கு இருக்கும் சிறப்பான வழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை வெற்றிகரமாக செய்ய முடியாமல்தான் உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் திணறி வருகின்றன. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஏராளமான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

எனினும் ஊரடங்கை மீறி மக்கள் தொடர்ச்சியாக வெளியே வந்து கொண்டுதான் உள்ளனர். சில நாடுகளில் ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி போராட்டங்களும் கூட நடைபெற்றுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மத்தியிலும் ஒரு சில தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

எனினும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் (Containment Zones) தளர்வுகள் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த பகுதிகளை கண்காணிப்பதுதான் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருந்து வருகிறது.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

எனவே தனித்துவமான ஒரு நடவடிக்கையை சென்னை போலீசார் எடுத்துள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் சென்னையும் ஒன்று. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளது. எனவே சென்னையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு வருகிறது.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

இதன் ஒரு பகுதியாகவும், காவல் துறையினர் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும், 4 சக்கரங்கள் கொண்ட ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், என்னென்ன செயல்பாடுகள் நடக்கிறது? என்பதை கண்காணிப்பதற்கும், அங்கு வசிக்கும் மக்கள் மீது ஒரு கண் வைத்து கொள்ளவும், காவல் துறைக்கு இந்த ரோபோ உதவி செய்யும்.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

ரோபோட் காப் எல்டி வி5.0 (Robot Cop LD v5.0) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ரோபோட் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்களுடன், ரிஸ்க் எடுக்காமல் உரையாடுவதற்காக இந்த தனித்துவமான ஐடியாவை காவல் துறையினர் கையில் எடுத்துள்ளனர்.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

சென்னை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையின் கண்காணிப்பு அங்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. எனினும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்குள் நுழைந்தால், காவல் துறையினரும் பாதிக்கப்படக்கூடும். ஆனால் இந்த ரோபோவின் உதவியுடன், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்குள் நுழையாமலேயே போலீசார் தங்கள் வேலையை செய்ய முடியும்.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இந்த ரோபோவை கையாளலாம். வயர்லெஸ் கனெக்டிவிட்டி மூலமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ரோபோவால் செல்ல முடியும். கண்காணிப்பு, மக்களுடனான உரையாடல் என பல்வேறு தேவைகளை இந்த ரோபோ பூர்த்தி செய்கிறது. அத்துடன் காவல் துறையினர் முழு அளவில் களமிறங்கி பணியாற்றுவதை இந்த ரோபோ தவிர்க்கிறது.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

இதன் மூலம் காவல் துறையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த ரோபோவில் கண்காணிப்பிற்காக கேமரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் டூ-வே இன்டர்காமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக நேரடி பொது அறிவிப்புகளை காவல் துறையினரால் வெளியிட முடியும் என்பதுடன், பொதுமக்களிடம் இருந்து வரும் எந்த ஒரு தகவலையும் அவர்களால் கேட்க முடியும்.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

மேலும் புஷ் மெசேஜ்களுக்காக, எல்இடி டிஸ்ப்ளேவையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், பேரிகார்டு வைக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நின்று கொண்டு, அங்கு வசிக்கும் மக்களை போலீசாரால் தொடர்பு கொள்ள முடியும். போலீசாருக்கு பாதிப்பு இல்லாமல், ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த இந்த ரோபோ உதவி செய்யும்.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

சீனாவின் வுஹான் நகரில் இருந்துதான் கோவிட்-19 வைரஸ் உலகம் முழுக்க பரவ தொடங்கியதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்று உலகமே கதி கலங்கி நிற்கும் நிலையில், சீனா மட்டும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தியதும், அதிநவீன தொழில்நுட்பங்களை கையாண்டதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...

அதாவது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதன் மூலம் நோயாளிகளுடன் மற்றவர்கள் நேரடியாக தொடர்பு கொள்வது தவிர்க்கப்பட்டது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மூலம்தான் சீனா தற்போது கோவிட்-19 வைரஸை வென்றுள்ளது.

தற்போது அதே பாணியிலான நடவடிக்கையை சென்னை காவல் துறையும் மேற்கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக தமிழக தலைநகர் சென்னையில் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Tamil Nadu Police Using 4-Wheeled Robots In Containment Zones In Chennai. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X