அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

அமெரிக்காவை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவிற்கு ஏற்ப, வேலைகள் அதிரடியாக தொடங்கியுள்ளன.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா வைரஸால் ஆட்டம் கண்டுள்ளன.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

உலகின் வல்லரசான அமெரிக்காவும் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பவில்லை. உலகிலேயே மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

MOST READ: சூப்பர்... கொரோனா வீசிய பந்தை சிக்சருக்கு விளாசும் மத்திய அரசு... தரமான சம்பவத்தை செய்ய ரெடி ஆகிறது

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக வாகன தொழிற்சாலைகளில், உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி அங்கு தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்ள தற்போது வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

எனவே வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கும்படி, ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் பல்வேறு நாடுகளின் அரசுகள் உதவி கேட்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதனை ஏற்றுக்கொண்டு, வென்டிலேட்டர்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதில், ஜென்ரல் மோட்டார்ஸ் (GM - General Motors) நிறுவனமும் ஒன்று.

MOST READ: 1,800 கிமீ சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? நாட்டையே கலங்க வைத்த இளைஞர்!

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வென்டிலேட்டர் உற்பத்தியை தொடங்கியுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஜென்ரல் மோட்டார்ஸ் நேற்று (ஏப்ரல் 14ம் தேதி) அறிவித்தது.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

அத்துடன் வென்டிலேட்டர்களின் முதல் பேட்ஜை நடப்பு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசாங்கத்திற்கு டெலிவரி செய்து விடுவோம் எனவும் ஜென்ரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, நடப்பு 2020ம் ஆண்டிற்குள், 1.37 லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கு, 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான 9 ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

இதில், ஜென்ரல் மோட்டார்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட 489.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தமும் அடங்கும். இந்த ஒப்பந்தப்படி, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க வேண்டும். தற்போது அதற்கான பணிகளை ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

வென்டெக் லைப் சிஸ்டம்ஸ் என்ற வென்டிலேட்டர் நிறுவனத்துடன் இணைந்து ஜென்ரல் மோட்டார்ஸ் வேலை செய்து வருகிறது. வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். நடப்பு ஏப்ரல் மாதம் முதல் பேட்ஜாக 600க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை வழங்கி விடுவோம் என ஜென்ரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது.

MOST READ: ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்! இவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியாம போச்சே

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

அத்துடன் வரும் ஜூன் மாத இறுதிக்குள் ஒப்பந்தத்தில் பாதி வென்டிலேட்டர்களை வழங்கி விடுவோம் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஒப்பந்தப்படி அனைத்து வென்டிலேட்டர்களையும் வழங்க ஜென்ரல் மோட்டார்ஸ் முயன்று வருகிறது. அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வென்டிலேட்டர்கள் உதவிகரமாக இருக்கும்.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

வென்டிலேட்டர்களை தயாரிக்கும் விவகாரத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் நேரத்தை வீணடிக்கிறது என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

அதன்பின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் பணிகளை துரிதப்படுத்தியது. இதைப்பார்த்த டிரம்ப், அதன்பின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டினார். ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது, உலகின் மற்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...

இதில், டெஸ்லா, ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்த பணிகளுக்கு உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Pandemic: General Motors Begins Production Of Ventilators For U.S. Government. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X