கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

கொரோனா வைரஸ ஓட ஓட விரட்டி கொண்டிருக்கும் நேரத்தில், கேரளாவிற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), உலகையே முடக்கி போட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதுதான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே வழி. எனவே சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளின் அரசுகளும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. சமூக விலகலை பின்பற்றாதவர்கள், கொரோனா வைரஸின் பிடியில் சிக்கும் சூழல் நிலவுகிறது.

MOST READ: சூப்பர்... உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கம்பெனியின் அதிரடி அறிவிப்பால் இந்திய டாக்டர்கள் நெகிழ்ச்சி

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

சமூக விலகலின் முக்கியத்துவம் காரணமாக, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, பொது போக்குவரத்திற்கான முக்கியத்துவம் குறைவதற்கான வாய்ப்புகள் வெகுவாக காணப்படுகின்றன. பஸ் மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களில் மக்கள் பயணிக்க தயக்கம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணிக்க மக்கள் முடிவு செய்யலாம்.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாக உள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்போது வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... ரகசியமாக உத்தரவு போட்ட தமிழக அரசு... என்னனு தெரியுமா?

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

ஆனால் அதே கொரோனா வைரஸ் காரணமாக வரும் காலங்களில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பஸ், டாக்ஸிகளில் பயணம் செய்தால் கொரோனா பரவி விடுமோ? என்ற அச்சம், சொந்த வாகனங்களை வாங்குவதற்கு மக்களை தூண்டலாம். இது கார் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபக்கம் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பஸ்கள் மீண்டும் வழக்கம் போல ஓட தொடங்கினாலும், அவை லாபகரமாக இயங்குமா? என்பது நிச்சயம் சந்தேகம்தான்.

MOST READ: மத்த சிஎம் மாதிரி இல்ல... காரை எடுத்து கொண்டு மம்தா செய்த காரியம்... எப்பவும் அவங்க ஸ்டைலே வேற!

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

கொரோனா அச்சம் காரணமாக சொந்த வாகனங்களில் பயணிக்கலாம் என்ற மக்களின் எண்ணமே இதற்கு காரணம். இதன் எதிரொலியாக கேரளாவை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள், ஒரு சில அதிரடியான முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பஸ்களை இயக்க மாட்டோம் என கேரள அரசிடம் தெரிவிக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் கடுமையான சமூக விலகல் விதிமுறைகள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர். பஸ்களை இயக்க வேண்டாம் என முடிவு செய்திருப்பதற்கு, ஒரு சில காரணங்களையும் அவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

MOST READ: கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அதிரடி... தைரியம் காட்டும் மத்திய அரசு

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

இதன்படி கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாகவே, அதாவது சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகள் இல்லாத சூழலிலேயே, தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், தற்போது உருவாகியுள்ள புதிய சூழல், பஸ்களை இயக்க முடியாத நிலைக்கு தங்களை தள்ளுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

இந்த பிரச்னையை கேரள அரசு எப்படி எதிர்கொள்ள போகிறது? என்பது தெரியவில்லை. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பது ஆகட்டும் அல்லது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஆகட்டும், இரண்டிலுமே நாட்டின் கவனத்தை கேரளா ஈர்த்துள்ளது. கொரோனாவில் இருந்து கேரளா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமயத்தில் இந்த புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்ள போகிறார்? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். கேரள மாநிலத்தை தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் கூட, தனியார் பஸ் உரிமையாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மட்டுமான பிரச்னை கிடையாது.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

மாநில அரசுகளால் நடத்தப்படும் போக்குவரத்து துறைகளுக்கும் இதே நிலைமை பொருந்தும். எனவே அரசு பேருந்துகளும் நஷ்டத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனா அச்சம் காரணமாக இந்த பிரச்னை மட்டுமல்லாது, மேலும் ஒரு பிரச்னையையும் இந்தியா சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளதால், இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிக அளவில் உள்ளது. (ஊரடங்கு காரணமாக தற்போதைக்கு அவ்வாறான நிலை இல்லை). எனவே சொந்த வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து கொண்டு, பொது போக்குவரத்திற்கு மக்கள் மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

இப்படிப்பட்ட சூழலில், கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கு பதிலாக சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Pandemic: Over 10,000 Private Buses Not Willing To Ply In Kerala Post-Lockdown. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X