வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு, இன்று முதல் அமலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) இன்று ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளன. பஸ், ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்தியாவில் முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு இன்றுடன் (ஏப்ரல் 14) முடிவுக்கு வருவதாக இருந்தது.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

ஆனால் இன்று காலை நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உரையாற்றினார். அப்போது நாடு தழுவிய ஊரடங்கை வரும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பலர் வெளியே சுற்றி வருகின்றனர். சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், அதை பயன்படுத்தி கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி கொள்ள இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

கொரோனா வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். முதலில் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை அதிகாரிகள் தடியடி நடத்தியதை பார்க்க முடிந்தது. அத்தகைய வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

ஆனால் காவல் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அதன்பின்பு காவல் துறை அதிகாரிகள் தங்கள் போக்கை மாற்றி கொண்டனர். இதன்படி வாகன ஓட்டிகளுக்கு கோவிட்-19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தேர்வை நடத்துவது, தோப்புக்கரணம் போட வைப்பது போன்ற வித்தியாசமான நடவடிக்கைகளை போலீசார் எடுத்தனர்.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

எனினும் அப்படியும் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக ஊர் சுற்றி கொண்டேதான் இருந்தனர். எனவே அத்தகைய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வது, அபராதம் விதிப்பது மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுக்க தொடங்கினர். குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக 1,87,623 பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கை மீறி வெளியே கொண்டு வரப்பட்ட 1,48,342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளிடம் இருந்து 76,96,544 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவது கட்டுக்குள் வரும் என காவல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த வரிசையில் தற்போது மற்றொரு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இனி முக கவசம் அணிந்து கொண்டுதான் மக்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

மாஸ்க் அணியாமல் வாகனங்களை ஓட்டினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசங்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன.

வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்

ஆனால் வாகனம் ஓட்டும்போது மட்டும் முக கவசம் அணிந்தால் போதும் என்று நினைத்து விட வேண்டாம். நடந்து சென்றாலும் கூட மாஸ்க் அணிவது அவசியம். அதாவது நீங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால், வாகனம் ஓட்டினாலும் சரி அல்லது நடந்து சென்றாலும் சரி மாஸ்க் அணிய வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட நேரிடும். எனவே இனி கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Pandemic: Pay Rs.500 Fine If You Don’t Wear Face Masks In Chennai. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X