கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தமிழக அமைச்சர் செய்துள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், தற்போது வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தனியார் கார், டூவீலர்களை இயக்குவதற்கும், பயணங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களின் சேவையும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

அதற்கு பதிலாக சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் பாதுகாப்பனதாக கருதுகின்றனர். எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் முன்னெச்சரிக்கையாக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பலர் பிளாஸ்டிக் கவர்களை பொருத்தி வருகின்றனர்.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

அதாவது பிளாஸ்டிக் கவர்கள் மூலமாக வாகனங்களின் இன்டீரியரை, தனித்தனி கேபின்களாக பிரித்து வருகின்றனர். பொதுவாக 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய கார் என்றால், தற்போது 4 பேர் மட்டும் அமரும் வகையில், பிளாஸ்டிக் கவர்களை கொண்டு தனித்தனி கேபின்களாக பிரிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை இதன் மூலம் உறுதி செய்ய முடியும்.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மட்டுமல்லாது, சொந்த பயன்பாட்டிற்கு கார்களை பயன்படுத்தி வருபவர்களும் கூட, தங்கள் வாகனங்களில் தற்போது பிளாஸ்டிக் கவர்களை பாதுகாப்பு அரணாக பொருத்தி கொள்வதை காண முடிகிறது. கார்களில் இப்படிப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பொருத்தி தரும் பிஸ்னசும் தற்போது வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

இதேபாணியை தற்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கையில் எடுத்துள்ளார். அவர் தனது காரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாஸ்டிக் கவர்களை பொருத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ மற்றவர்கள் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

தினமும் பல்வேறு இடங்களுக்கு சென்று வர வேண்டியிருப்பதால், பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் கவர்களை பொருத்தியுள்ளதாக அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். அமைச்சர் சரோஜாவை போல் உங்கள் காரிலும் பிளாஸ்டிக் கவர்களை பொருத்தி கொள்ள முடியும். கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை பிளாஸ்டிக் கவர்கள் குறைக்கிறது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

இதேபோல் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் பாதுகாப்பு நடவடிக்கைகயும் கவனம் ஈர்த்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று (ஜூலை 14ம் தேதி) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இரண்டு முக கவசங்களை அணிந்திருந்தார்.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் என் 95 மாஸ்க்கை அவர் அணிந்திருந்தார். அத்துடன் அதற்கு அடியில் மற்றொரு முக கவசத்தையும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அணிந்திருந்தார். இது தொடர்பாக தமிழ் நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

தற்போது தமிழக அமைச்சர்கள் ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிர களப்பணியாற்றி வரும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19: Tamil Nadu Minister Saroja Installs Plastic Screen In Her Car To Ensure Social Distancing. Read in Tamil
Story first published: Wednesday, July 15, 2020, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X