15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, சென்னையில் மிகவும் குறைவான கட்டணத்தில், கார்களுக்கு பாதுகாப்பு ஷீல்டு அமைக்கப்படுகிறது.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

கண்ணுக்கே தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் (கோவிட்-19), ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. ஒரு சில மாதங்களில் கொரோனா வைரஸ் ஒழிந்து விடும் என்றுதான் நாம் அனைவரும் முதலில் நினைத்தோம். ஆனால் கொரோனா வைரஸ் நம்மை விட்டு செல்வதாக இல்லை. எனவே அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

இதன் காரணமாக வரும் நாட்களில் நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாற போவது உறுதி. குறிப்பாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும்போது, நாம் சமூக விலகலை கடைபிடித்தே ஆக வேண்டும். இந்தியாவில் தற்போது பொது போக்குவரத்து வாகனங்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ள நிலையில், இது சவாலான ஒரு விஷயம்தான்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும், கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டன. ஆனால் இந்தியாவில் தற்போது பொது போக்குவரத்து மீண்டும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் விஸ்வரூம் எடுத்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

மேலும் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களை மீண்டும் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாகனங்களில் எல்லாம் நாம் சமூக இடைவெளியை எப்படி பின்பற்ற போகிறோம்? என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனினும் சேஃப்டி ஷீல்டு (Safety Shield) அமைப்பது ஒரு நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

கோவையை சேர்ந்த வாடகை கார் உரிமையாளர் ஒருவர், தனது வாகனத்தில் பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மூலமாக சமூக விலகலை உறுதி செய்திருந்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மூலமாக காரை தனித்தனி கேபின்களாக பிரித்து, அவர் சமூக விலகலை உறுதி செய்திருந்தார்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

இதே பாணியில் சென்னையை சேர்ந்த இருவர் கூட்டணியும், தற்போது வாகனங்களுக்கு சேஃப்டி ஷீல்டுகளை அமைத்து கொடுத்து வருகிறது. சென்னையை சேர்ந்தவர் கவாஸ்கர். இவரும், செல்வம் என்பவரும் ஒன்றாக இணைந்து ZOT CREATION என்னும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள நார்த் உஸ்மான் ரோட்டில் அவர்களது அலுவலகம் இயங்கி வருகிறது.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாக, கவாஸ்கர் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் வேலைகளை செய்து வந்தார். அதே சமயம் திருமணங்களுக்கு போட்டோ எடுக்கும் வேலையை செல்வம் செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவர்கள் இருவருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய தொழில் ஒன்றை தொடங்க இருவரும் முடிவு செய்தனர்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

அப்போது தோன்றிய ஐடியாதான் இந்த பிஸ்னஸ். தற்போது நிலையில் பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை உறுதி செய்வது அவசியமாக உள்ளது. அதுவும் சென்னையில் கேப்கள் அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே கார், டெம்போ டிராவலர் போன்ற வாகனங்களுக்கு சேஃப்டி ஷீல்டு அமைக்கும் தொழிலை தொடங்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

தற்போது டிரான்ஸ்ஃபரன்ட் பிவிசி சீட் மூலமாக, கார் மற்றும் டெம்போ டிராவலர் உள்ளிட்ட வாகனங்களுக்கு, அவர்கள் சேஃப்டி ஷீல்டு அமைத்து வருகின்றனர். அதுவும் குறைவான கட்டணத்தில் என்பது அவர்களின் சிறப்பம்சம். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ''வெளி மாநிலங்களில் ஒரு சிலர் வாகனங்களில் இது போன்று சேஃப்டி ஷீல்டு மூலம் சமூக இடைவெளியை உறுதி செய்தனர்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

எனவே சென்னையில் நாம் இதனை செய்தால் என்ன? என்ற யோசனை எங்களுக்கு உதித்தது. குறிப்பாக நம் சென்னையில் கேப்கள் அதிகம் என்பதால், உடனடியாக அதற்கான வேலைகளை ஆரம்பித்தோம்'' என்றார். முதலில் மிகவும் பிரபலமான டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் ஆர்டரை மொத்தமாக பெற்று அவர்களின் வாகனங்களுக்கு சேஃப்டி ஷீல்டு அமைத்து கொடுத்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

இது மிகவும் பிரபலமாக இருக்கும் டிராவல்ஸ் நிறுவனம் ஆகும். சென்னையில் ஐடி நிறுவனங்களுக்கு கேப் சேவைகளை இந்த டிராவல்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. அவர்களின் நிறுவனத்திற்கு மட்டும் 600 வாகனங்களுக்கு சேஃப்டி ஷீல்டு அமைத்து கொடுத்துள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார். அதே சமயம் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 800 வாகனங்களுக்கு அவர்கள் சேஃப்டி ஷீல்டு அமைத்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

இது தொடர்பாக கவாஸ்கர் மேலும் கூறுகையில், ''எங்கள் நிறுவனத்தில் 20 பேர் வேலை செய்து வருகின்றனர். அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி வருகிறோம். மாற்று தொழில் ஒன்று வேண்டும் என்பதற்காகதான், சூழ்நிலைக்கு ஏற்ப இந்த தொழிலை சமீபத்தில் தொடங்கினோம்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

தற்போது பாதுகாப்பு ஷீல்டு அமைக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தற்போதைய நிலையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 150 வாகனங்களுக்கு பாதுகாப்பு ஷீல்டு அமைத்து கொடுத்துள்ளோம். ஆனால் எங்களால் ஒரு நாளைக்கு 250 வாகனங்களுக்கு பாதுகாப்பு ஷீல்டு அமைக்க முடியும்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

சாதாரண காருக்கு பாதுகாப்பு ஷீல்டு அமைக்க 15-20 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் டெம்போ டிராவலர் போன்ற பெரிய வாகனங்கள் என்றால், 30-45 நிமிடம் வரை ஆகிறது. மஹிந்திரா சைலோ, டவேரா, மற்றும் டாடா சுமோ போன்ற கார்களுக்குதான் அதிக அளவில் பாதுகாப்பு ஷீல்டுகளை அமைத்துள்ளோம். தற்போதைய நிலையில் டிராவல்ஸ் நிறுவனங்கள்தான் எங்களிடம் அதிகம் வருகின்றன.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

சிறிய கார்கள் என்றால், டிரான்ஸ்ஃபரன்ட் பிவிசி சீட் மூலம் நான்கு கேபின்களாக பிரிக்கிறோம். அதே சமயம் பெரிய கார் என்றால், 6 கேபின்களாக பிரித்து அமைத்து கொடுக்கிறோம். இந்த ஸ்க்ரீன் மூலம் பயணிகளுக்கு இடையே பிஸிக்கல் கான்டாக்ட் தவிர்க்கப்படுகிறது. எனவே கொரோனா பரவும் வாய்ப்புகளை குறைத்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும்.

கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... மலிவான கட்டணத்தில் கார்களுக்கு சேஃப்டி ஷீல்டு... சென்னையில் அசத்தல்

நம்முடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்குமா? இருக்காதா? என்பது நமக்கு தெரியாது. எனவே நாம் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்பது அவசியம். தற்போது டிராவல்ஸ் நிறுவனங்களுடன் சேர்த்து, பொதுமக்களும் தங்கள் வாகனங்களில் சேஃப்டி ஷீல்டு அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர். 50-60 பேர் வரை இதற்காக எங்களுடன் பேசியுள்ளனர்'' என்றார்.

வாகனங்களில் சேஃப்டி ஷீல்டு அமைக்க குறைந்தபட்சம் 600 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4,500 ரூபாய் வரை அவர்கள் கட்டணமாக வசூலிக்கின்றனர். வாகனத்தின் வகை, எத்தனை கேபின்களாக பிரிக்கப்படுகிறது? என்பதை பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. அவர்களை நீங்கள் தொடர்பு கொள்ள நினைத்தால், மேலே வழங்கப்பட்டுள்ள வீடியோவில் இருக்கும் தொடர்பு எண்களை பயன்படுத்தலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19: This Chennai-based Company Installing Safety Shields In Cars To Ensure Social Distancing. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X