கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

உற்று உற்று பார்த்தும் இந்த படத்தில் இருப்பது என்னவென்று தெரியவில்லையா? அப்போ தொடர்ந்து படியுங்கள்.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை தற்போது நிலைகுலைய வைத்துள்ளது.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தங்களை தாங்களே மக்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வைரஸின் தீவிரத்தை இன்னும் ஒரு சிலர் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தேவையே இல்லாமல் ஒரு சிலர் வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறை தரப்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

மேலும் மிகவும் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல் துறையினர் தற்போது அணிந்து வரும் ''கொரோனா ஹெல்மெட்'' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டை அணிந்தபடி, காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில், காவல் துறையினர் கொரோனா ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதை நம்மால் பார்க்க முடிந்தது. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா ஹெல்மெட்டை தொடர்ந்து தற்போது கொரோனா காரை வடிவமைத்துள்ளனர்.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான முயற்சி தெலங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரின் பகடுர்புரா பகுதியில் உள்ள சுதா கார்ஸ் மியூசியமை சேர்ந்த சுதாகர் என்பவரால், இந்த கொரோனா கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

சுதா கார்ஸ் மியூசியம் தெலங்கானா மாநிலம் மட்டுமின்றி இந்திய அளவிலும் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இங்கு மிகவும் வித்தியாசமான கார்கள் உள்ளன. இந்த கார்கள் சுதாகரால் டிசைன் செய்யப்பட்டவைதான். பள்ளி பருவத்தில் இருந்தே அவர் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு அவரால் சுதா கார்ஸ் மியூசியம் திறக்கப்பட்டது.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

தற்போது கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொரோனா காரை அவர் டிசைன் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'கோவிட்-19 வைரஸின் பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வைரஸின் வடிவத்தில் நான் இந்த காரை டிசைன் செய்துள்ளேன். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்' என்றார்.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

இந்த கொரோனா காரில், 100 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருக்கும். மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் வேகம் வரை இந்த காரால் பயணிக்க முடியும். 'இந்த காரை டிசைன் செய்ய எனக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது' என சுதாகர் கூறியுள்ளார். தற்போது வரை தான் தயாரித்த இதேபோன்ற பல கார்களை சுதா கார்ஸ் மியூசியத்தில், சுதாகர் காட்சிக்கு வைத்துள்ளார்.

கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்

இதில், ஹேண்ட்பேக் கார், ஹெல்மெட் கார், கேமரா கார், டாய்லெட் கார் மற்றும் பர்கர் கார் உள்ளிட்ட கார்கள் குறிப்பிடத்தகுந்தவை. இதுகுறித்து சுதாகர் கூறுகையில், ''இந்த சமூகத்திற்கு எனது கருத்துக்களை சொல்ல பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக நான் கார்களை உருவாக்கியுள்ளேன். இந்த நேரத்தில் வீடுகளுக்கு உள்ளே பாதுகாப்பாக இருங்கள் என மக்களுக்கு சொல்வது முக்கியமானது.

இந்த கொரோனா வைரஸ் கார் அந்த மெசேஜை மக்களுக்கு கொண்டு செல்லும்'' என்றார். இந்த கொரோனா வைரஸ் கார் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்ட சுதாகருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
'Corona Car' Joins Fight Against Covid-19 Virus. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X