உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா?

உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாக கொண்டாடப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர் கார்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பிஎம்டபிள்யூ நிறுவன கார்களுக்கு சச்சின் டெண்டுல்கர் தீவிர ரசிகர். பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

பிஎம்டபிள்யூ நிறுவன கார்களை சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலமாக ஓட்டி வருகிறார். இந்தியாவில் மிக கவர்ச்சிகரமான கார் கராஜை வைத்திருப்பவர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர். பிஎம்டபிள்யூ ஐ8, சமீபத்திய தலைமுறை எக்ஸ்5எம் உள்ளிட்ட கார்கள் சச்சின் டெண்டுல்கரிடம் உள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

ஆனால் அதற்கு முன்பிருந்தே அவர் பிஎம்டபிள்யூ கார்களை ஓட்டி வருகிறார். புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் கார் ஒன்றை சச்சின் கடந்த 2002ம் ஆண்டு வாங்கினார். பல நிகழ்ச்சிகளுக்கு சச்சின் இந்த காரில்தான் வந்து கொண்டிருந்தார். ஆனால் சில காலம் பயன்படுத்திய பிறகு, அந்த காரை சச்சின் டெண்டுல்கர் விற்பனை செய்து விட்டார்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

தற்போது அந்த கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் அந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. விற்பனை செய்வதற்கு முன்னதாக, சில ஆண்டுகள் சச்சின் இந்த காரை பயன்படுத்தினார். சச்சின் டெண்டுல்கரால் பயன்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி ரக காரானது, ப்ளூ கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

எக்ஸ்5 காரின் ஸ்டாண்டர்டு வெர்ஷன்தான் ஏராளமான வாடிக்கையாளர்களின் தேர்வாக உள்ளது. ஆனால் இது எம் பவர் வெர்ஷன் ஆகும். இந்திய சாலைகளில் இது நிச்சயம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதற்கென செய்யப்பட்டுள்ள விளம்பரத்தில் இந்த கார் 80 கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

ஆனால் இதுபோன்ற கார்களில் ஹை-பெர்ஃபார்மென்ஸ் இன்ஜின்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதிக கவனத்துடன் அவை தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக எவ்வித தொல்லையையும் கொடுக்காமல் லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடும் திறன் அவற்றுக்கு உண்டு. தற்போது விற்பனைக்கு வந்திருப்பது 2002 மாடல் பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் கார் ஆகும்.

MOST READ: சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

இந்த காரில் 4.6 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 347 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இது பெர்ஃபார்மென்ஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். மணிக்கு 100 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 7 வினாடிகளில் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

ஆனால் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து இந்த காரின் வேகம் மணிக்கு 249 கிலோ மீட்டர்களாக வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் லெதர் இருக்கைகள், ரிமோட் லாக்கிங், ஆடியோ சிஸ்டம், 4 விண்டோக்களுக்கும் பவர் விண்டோ, ஏபிஎஸ்+இபிடி, டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் சன் ரூஃப் உள்ளிட்ட வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

இந்த காருக்கு 21 லட்ச ரூபாய் விலையாக கோரப்பட்டுள்ளது. இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ், வசதிகள் ஆகியவற்றை வைத்து பார்க்கையில், இது நியாயமான விலையாகவே தோன்றுகிறது. அத்துடன் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்த கார் என்ற விஷயமும் இந்த காருக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கிறது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சச்சின் டெண்டுல்கரின் கார்... நீங்களும் கூட வாங்கலாம்

முன்னதாக கடந்த ஆண்டும் இந்த கார் யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்போது இந்த கார் 72 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியிருந்தது. தற்போது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை நீங்கள் வாங்குவதாக இருந்தால் விற்பனையாளரை நேரடியாக தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cricketer Sachin Tendulkar’s BMW X5M For Sale - Price Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X