ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

ரூ 30 செலவில் பைக்களுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவியை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அவர் அதை தனது பைக்கில்பொருத்தி டெஸ்ட் செய்துள்ளார். இது குறித்த விளக்கமான செய்தியை நாம் கீழே காண்போம்.

ரைடு ஸ்டார் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ரூ 30 செலவில் தயாரிக்கப்பட்ட பைக்கிற்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி ஒன்றை அதில் வரும் இளைஞர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

அதில் அவர் கனமான ஒரு இரும்பு தகடு வடிவிலான ஒருபொருளை காண்பிக்கிறார். அதில் ஒரு பகுதி பைக் ஹேண்டபரில் பொருத்துவது போலவும், மற்றொருபுறம் முன்புற பிரேக்கில் பொருத்துவது போலவும் அது டிசைன் செய்யப்பட்டுள்ளது. மற்றம் பைக் ஹேண்ட்பரில் பொருத்தும் கருவிக்கு அருகே ஒரு போல்ட் மற்றும் நட் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

இது எந்த பைக்கிற்கு வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம். தேவையில்லாவிட்டால் நாமளே கழட்டி விடலாம். நமது பைக்கில் ஹேண்டில் பாரின் அளவிற்கு ஏற்ப இதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அனைத்து வித பைக்குகளுக்கு பொருந்தும் க்ரூஸ் கண்ட்ரோல் கருவியாக இது செயல்படும்.

ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

இந்த கருவி சிட்டிக்குள் அல்லது அதிகமான டிராபிக் உள்ள பகுதிக்கு செல்லும் போது பயன்படுத்த முடியாது. ஆனால் அதிக தூரம் செல்லும் போது அல்லது நெடுஞ்சாலைகளில் செல்லும் போது இதை பயன்படுத்த முடியும்.

ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

நமது பைக்கின் அக்ஸிலரேட்டர் பகுதியில் இதை பொருத்தியிருக்க வேண்டும். நமக்கு தேவையான அளவிற்கு ஆர்.பி.எம் கிடைத்தவுடன் இனி பைக்கின் ஆக்ஸிலேரேட்டரை அதிக நேரத்திற்கு அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேவையில்லாத நேரம் இந்த கருவியில் உள்ள ஹக்கை பயன்படுத்தி அந்த அக்ஸிலரேட்டர் டென்ஷனில் இதை நாம் வைத்துக்கொள்ளலாம். இதை அவர் தனது ராயல் என்பீல்டு பைக்கில் பொருத்தி சோதனை செய்துள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.

இதன் மூலம் நாம் பைக்கில் வேகம் குறையாமல் மற்றும் எரிபொருளை வீணாக்காமல் நமது கைகளுக்கும் சற்று ஓய்வு கொடுத்துவிட்டு பயணிக்கலாம். ஆனால் இந்த கருவியை அவர் ஒரு முயற்சியாக மட்டுமே செய்துள்ளார். இந்த கருவியை அவர் வெறும் 30 ரூபாய் செலவில் செய்துள்ளார்.

ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

இதை சோதனை செய்து இதில் உள்ள குறை நிறை குறித்து ஆராய்ந்து இதற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் இன்றும் அவர் இறங்கவில்லை. எனினும் தொடர்ந்து அதற்கான பணி நடக்கும் என தெரிகிறது. அதன் பின் இந்த கருவி மக்கள்பயன்பாட்டிற்கு வரும் என நம்புவோம்.

ரூ 30 செலவில் பைக்குகளுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் கருவி.... இந்திய இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு

இதுவரை கார்களிலும் உயர் ரக பைக்களிலும் மட்டுமே இருந்த க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இருந்தது. இதனால் இதை உயர் ரக வசதியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இது போன்ற கருவியை வெறும் ரூ 30 செய்திருப்பது சிறந்த கண்டுபிடிப்பு தான். இது பயன்பாட்டிற்கு வந்தால் எல்லா பைக் ஓட்டுநர்களும் இதை வாங்கி தங்கள் வண்டியில் மாட்டி விடுவார்கள் போல.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Royal Enfield rider creates Cruise Control device for just Rs 30 – Watch how it works.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X