உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

மிதக்கும் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கத்தையும், அதன் ரகசியங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

விடுமுறை நாட்களை உற்சாகமாக கழிக்க உல்லாச கப்பல்கள் மிகவும் ஏற்றவை. ஆடம்பரம், சொகுசு, அழகு என உல்லாச கப்பல்கள் அனைவரையும் வசீகரிக்கிறது. ஆனால் வசதி படைத்தவர்களால் மட்டுமே உல்லாச கப்பல்களில் பயணிக்க முடியும் என்ற சூழல் இருக்கிறது. ஏனெனில் உல்லாச கப்பல்களில் பயணம் செய்வதற்கான கட்டணம் மிகவும் அதிகம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

என்றாலும் வாழ்நாளில் ஒரு முறையாவது உல்லாச கப்பலில் பயணம் செய்து பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் நடுத்தர வர்க்க மக்களிடமும் காணப்படவே செய்கிறது. அத்துடன் மிதக்கும் சொர்க்கமாக திகழும் உல்லாச கப்பல்களை பற்றி, பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பலருக்கும் இருக்கிறது.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. உல்லாச கப்பல்கள் பற்றிய பல்வேறு ஆச்சரியமான தகவல்களையும், பலருக்கும் தெரியாத ஒரு சில ரகசியங்களையும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

Image Credit: Reddit

பிணவறை:

உல்லாச கப்பல்கள் என்றாலே, அதன் ஆடம்பரமான ஒரு பக்கம் மட்டுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும். அப்படி இருக்கையில் எடுத்த உடனேயே பிணவறை என்றால், உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருக்கும். ஆனால் இது உண்மைதான். பெரும்பாலான உல்லாச கப்பல்களில் கண்டிப்பாக பிணவறை இருக்கும்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பேர் உல்லாச கப்பல்களில் பயணிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இளம் வயதினரை காட்டிலும், வயதானவர்கள்தான் உல்லாச கப்பல்களில் அதிகமாக பயணிக்கின்றனர். எனவே எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற ரீதியில், உல்லாச கப்பல்களில் பிணவறை ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

ஏனெனில் விடுமுறை காலம் முடியும் வரை மரணம் காத்திருக்காது. எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம். ஒவ்வொரு ஆண்டும் உல்லாச கப்பல்களில் 200 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்ற செய்தி உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகதான் இருக்கும். எனவே உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பிணவறை அமைக்கப்பட்டுள்ளது.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

அதே சமயம் உல்லாச கப்பல்களில் பல முறை பயணித்தவர்கள் மற்றொரு விஷயத்தையும் கூறுகின்றனர். அதாவது உல்லாச கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கு மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்களை உடனடியாக ஹெலிகாப்டரில் கூட மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்களாம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

ஜெயில்:

உல்லாச கப்பல்கள் என்றாலே நன்றாக குடித்து விட்டு ஆட போடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நீங்கள் உற்சாகமாக பொழுதை கழிக்கலாம். அதற்காகதான் அவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், உங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் நீங்கள் விதிமுறைகளையும் மீற கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

புயல், சூறாவளி போன்ற பல்வேறு சவால்களை, உல்லாச கப்பல்கள் பயணத்தின்போது எதிர்கொள்கின்றன. சில சமயங்களில் பயணிகளாலேயே கடுமையான சவால்கள் ஏற்பட கூடும். அதாவது ஒரு சில பயணிகள், மற்றவர்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். அவர்களுடன் சண்டைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடலாம். அல்லது விதிமுறைகளை மீறலாம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

அதுபோன்ற பயணிகளை அடைத்து வைப்பதற்காக பெரும்பாலான உல்லாச கப்பல்களில் ரகசிய சிறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறை சிறிய அளவில்தான் இருக்கும். உல்லாச கப்பல்களின் கீழ் தளங்கள் ஏதேனும் ஒன்றில், இந்த சிறை ஏற்படுத்தப்பட்டிருக்கும். கட்டுக்கடங்காத பயணிகளை இந்த சிறையில் அடைத்து வைத்து விடுவார்கள்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

இவ்வாறு சிறையில் அடைக்கப்படும் பயணிகள், உல்லாச கப்பல் அடுத்ததாக செல்லவுள்ள துறைமுகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் உல்லாச கப்பலின் பயணம் முடியும் வரை சிறையிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். எனவே உல்லாச கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால், எதற்கும் கொஞ்சம் சூதானமாக நடந்து கொள்ளுங்கள்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

கிச்சன்:

உல்லாச கப்பல்களின் சமையல் அறை மிகவும் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீல்ஸ்களை உல்லாச கப்பல் பணியாளர்கள் பரிமாறுகின்றனர். ஒரு உல்லாச கப்பலில் வெறும் 7 நாட்களில் 100 டன் உணவு பரிமாறப்படுகிறது. உல்லாச கப்பல்களில் பயணிகள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

எனவேதான் சமையல் அறை பெரிதாக ஏற்படுத்தப்படுகிறது. ஏழு நாட்கள் பயணம் செய்யும் ஒரு உல்லாச கப்பலில், 3.5 டன் அரிசி, 5.5 டன் மாவு, 31 டன் காய்கறிகள், 8 டன் சிக்கன் மற்றும் 15.8 டன் ஆயில் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அடேங்கப்பா!!! ஆனால் உணவு விஷயங்கள் உல்லாச கப்பல்களை பொறுத்து மாறுபடலாம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

உணவு:

உல்லாச கப்பல்களில் பரிமாறப்படும் உணவு உண்மையில் நம்ப முடியாத அளவிற்கு சுவையாக இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடும் உணர்வு உங்களுக்கு ஒவ்வொரு நாளும் நிச்சயம் ஏற்படும். உல்லாச கப்பல்களில் வழங்கப்படும் பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர் ஆகிய அனைத்திற்குமான செலவு டிக்கெட் கட்டணத்திலேயே அடங்கி விடும்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

இதுதவிர உல்லாச கப்பல்களில் விசேஷமான ரெஸ்டாரெண்ட்களும் தனியாக இருக்கும். நீங்கள் அங்கும் கூட உணவை சுவைக்க முடியும். ஆனால் இது டிக்கெட் கட்டணத்தில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

Image Credit: Spencer Althouse/Instagram

என்ன நாள் என சொல்லும் எலவேட்டர்கள்!!

உல்லாச கப்பல்களில் பயணிக்கும்போது விடுமுறையில் இருப்பதால் நீங்கள் என்ன நாள் என்பதை மறந்து விடக்கூடும். இதற்காக எலவேட்டர்களில் இருக்கும் ஃப்ளோர் டைல்ஸ் தினமும் காலை மாற்றப்படும். இன்று என்ன நாள்? என்பதை அது உங்களுக்கு சொல்லும். மேலே உள்ள படத்தில் நீங்கள் அதனை காணலாம்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

டவல் அனிமல்!!

ஹோட்டல்களில் இருக்கும் துப்புரவு பணியாளர்களை போலவே, உல்லாச கப்பல்களிலும் வேலை ஆட்கள் இருப்பார்கள். உங்கள் அறையை நேர்த்தியாக வைத்திருக்க அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் படுக்கை விரிப்பை அவர்கள் குறைந்தபட்சம் தினமும் ஒரு முறையாவது மாற்றி விடுவார்கள். சில சமயங்களில் ஒரு நாளைக்கு இரு முறை கூட மாற்றப்படும்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

ஒரு சில உல்லாச கப்பல்களில் இருக்கும் இத்தகைய பணியாளர்கள் டவல்களை மடித்து விலங்குகளை போல் செய்வதில் கெட்டிக்காரர்கள். இவர்கள் உங்களுக்காக டவலை மடித்து, ஏதேனும் ஒரு விலங்கை போல் செய்து வைத்து விட்டு சென்று விடுவார்கள். எனவே டவல் குரங்கு அல்லது டவல் யானையின் மீது உங்களது கூலிங் கிளாஸ் வைக்கப்பட்டிருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

ஸ்பா, ஜிம்

என்னதான் உல்லாச கப்பலாக இருந்தாலும் பாத்ரூம் கொஞ்சம் சிறியதாகதான் இருக்கும். பெரும்பாலான உல்லாச கப்பல்களின் பாத்ரூம் சிறியதாகதான் இருக்கிறது. அதேசமயம் மிகவும் சொகுசான உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் உல்லாச கப்பல்களில் இருக்கும். ஆனால் மசாஜ் செய்வதற்கான கட்டணம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cruise Ship Secrets. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X