க்ரூஸ் கப்பலில் பயன்படுத்தப்படும் எஞ்ஜின் எவ்வளவு குதிரை திறனை வெளிப்படுத்தும்? இதோ அது பற்றிய சுவாரஷ்ய தகவல்!

க்ரூஸ் கப்பலின் இயக்கத்திற்கு உதவியாக இருக்கும் எஞ்ஜின் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

மிக பிரமாண்டமான உருவம் கொண்ட க்ரூஸ் கப்பல்கள் கடல்களில் மிதப்பதே மிகப்பெரிய அதிசயம்தான். அவை அதிக குதிரை திறன் வேகத்தில் இயக்குகின்றன என்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக. அண்மையில் கப்பல்கள் மிதப்பதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணிகளை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்டிருந்தது.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இதேபோல் தற்போது பாரிய உருவம் கொண்ட இந்த க்ரூஸ் கப்பல்களின் இயக்கத்திற்கு பின்னால் இருந்து உதவும் மோட்டார் (எஞ்ஜின்)கள் பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, கப்பல்களில் என்ன மாதிரியான மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன, தோராயமாக ஓர் கப்பல் இயங்க எந்தளவு குதிரை தேவைப்படுகின்றது என்பது போன்ற சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

பொதுவாக ஓர் க்ரூஸ் கப்பல் இயங்க சுமார் 50 ஆயிரம் குதிரை திறன் தேவைப்படுகின்றது. ஒரு குதிரை திறன் என்பது 746 வாட்களுக்கு சமம் ஆகும். இத்தகைய திறன் சில கப்பல்களில் நேரடியாக ப்ரொப்பல்லர்களுக்கு செல்லும் வகையில் கடத்தப்படுகின்றன. இதேதிறன் வேரு சில கப்பல்களில் மின்சாரமாக மாற்றப்பட்டு ப்ரொப்பல்லர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் கப்பலின் இயக்கத்திற்கு மட்டுமின்றி கப்பல்களில் இருக்கும் பிற மின்சாதனங்களுக்கும் பயன்படுத்தப்படும். எனவே கப்பல்களுக்கு தேவையான மின்சாரம் இந்த மோட்டார்களின் வாயிலாகவே கிடைக்கின்றன.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

க்ரூஸ் கப்பல்களில் என்னென்ன மாதிரியான எஞ்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன?

ஒரு காலத்தில் சற்று பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் மனித விசை அல்லது காற்றின் உதவியால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னர் நீராவியால் இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. 1800 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலேயே நீராவியால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

தற்போது கடல்களில் உலாவிக் கொண்டிருக்கும் பெரும்பாலான மாடர்ன் கப்பல்கள் டீசலால் இயங்கக் கூடியவை ஆகும். இவற்றால் ஏற்படும் காற்று மாசு மிக அதிகம். எனவேதான், பசுமை இயக்கத்திற்கு கப்பல்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதே ராயல் கரீபியன் க்ரூஸ் கப்பல்.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

அதேவேலையில், இப்போதைய சூழலில் டீசலால் இயங்கும் கப்பல்களே மிக அதிகளவில் இருக்கின்றன. இவற்றில் காற்று மாசை குறைக்கும் பொருட்டு தனி சிறப்பு திறன் கொண்ட கேடலிக்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கேஸ் டர்பைன் சிஸ்டம் கொண்ட கப்பல்களை பராமரிக்க குறைந்தளவு பணியாளர்களே போதும்.

ஒரு க்ரூஸ் தன்னுடைய இரு வார பயணங்களுக்கான ஏற்றி செல்லும் திறன் கொண்டது. எனவேதான், க்ரூஸ் கப்பல்கள் சில நாட்கள் கடந்த கடலில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

க்ரூஸ் கப்பல் ப்ரொப்பல்லர்கள் பற்றிய சிறப்பு தகவல்?

'ப்ரொப்பல்லர்கள்' இதற்கு திருகுகள் என்று பொருள் உண்டு. பெரிய உருவம் கொண்ட கப்பல்கள் இடம் விட்டு இடம் செல்ல இவையே உதவுகின்றன. ஓர் கப்பல் முன்னோக்கி செல்வது அல்லது பின்னோக்கி செல்வது இவையிரண்டிற்கும் இவையே உதவுகின்றன. 2 லட்சம் டன் எடைக் கொண்ட கப்பலைக் கூட இந்த ப்ரொபல்லர்கள் அசால்டாக கடலில் நீந்த செய்கின்றன.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இதுமட்டுமின்றி 360 டிகிரி திருப்புதலுக்கும் இந்த ப்ரொப்பல்லர்கள் உதவுகின்றன. டீசல் மோட்டார் கொண்ட கப்பல், டீசலில் இருந்து மின்சாரத்தை பெற்று இயங்கும் கப்பல் ஆகிய இரண்டிலும் இந்த மாதிரியான ப்ரொப்பலர்களே பயன்படுத்தப்படுகின்றன.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

கப்பல்களின் கட்டமைப்பில் கையாளப்படும் சில பசுமை யுக்திகள்:

ஓர் கார் இயங்குவதைக் காட்டிலும் ஓர் கப்பல் இயங்குவதினால் எக்கசக்க அளவில் காற்று மாசு ஏற்படுகின்றது. இதில் பெரியளவில் மாற்றத்தைச் செய்ய முடியாது. இருப்பினும், கப்பல் கட்டுமானத்தின் வாயிலாக சில பசுமை யுக்திகள் நிறுவனங்கள் கையாள்கின்றன. அந்தவகையில், கப்பல்களில் அதிக ஏசி பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு சிலிகான் ஹல் பூச்சு பயன்படுத்தப்படுகின்றது.

க்ரூஸ் கப்பல் கடலில் சல்லுனு போக உதவும் எஞ்ஜினை பற்றி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும்?.. இது அவை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இத்துடன், எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதமாக எல்இடி லைட்டுகள், தானியங்கி லைட்டுகள் (இவை தேவைப்படும்போது மட்டுமே ஒளிரும் மற்ற நேரங்கள் அவை அணைந்துவிடும்) உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. ஓர் பெரிய க்ரூஸ் கப்பலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளால் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: Wärtsilä Corporation

Most Read Articles
English summary
Cruise ships engine type
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X