ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி.மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார்... எப்ப வருது தெரியுமா?

CTP 3ம் தலைமுறை தொழிற்நுட்பத்துடன் கூடிய பேட்டரியை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவாக சார்ஜ் ஏறுவது, நீண்ட உழைப்பு அதிக திறன் மற்றும் பாதுகாப்பு நிறைந்த இந்த பேட்டரி குறித்த முழு தகவல்களைக் காணலாம்.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

இன்று உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மிக அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பெட்ரோல்/டீசல் விலைகள் அதிகமாக இருந்து வருகின்றன. மாற்றுச் சக்தி மூலம் இயங்கும் வாகனங்களை நோக்கி மக்கள் மெல்ல நகரத் துவங்கிவிட்டனர்.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

அதற்கான முதல் தேர்வு தான் எலெக்ட்ரிக் வாகனங்கள், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் எலெக்டரிக் வாகனங்கள் அதிகமாக வரத்துவங்கிவிட்டன. பெரிய பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் துவங்கிவிட்டனர்.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

இதற்கிடையில் கார் தயாரிப்பாளர்களும் எலெக்டரிக் கார்களை தயாரிக்கத் துவங்கிவிட்டனர் டாடா நிறுவனம் முதல் மற்ற சிறு சிறு நிறுவனங்கள் வரை எலெக்ரிக்வாகன தயாரிப்பில் இறங்கவிட்டன. இந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இதயமாக இருப்பது பேட்டரிகள் தான்.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

அதுவும் லித்தியம் அயான் பேட்டரிகளால் தான் வாகனங்களுக்குத் தேவையான அளவு திறனைக் கொடுக்க முடியும். அதிக அளவு மின்சாரத்தை வெளிப்படுத்தும் பேட்டரிகளை இந்த லித்தியம் அயானால் மட்டுமே உருவாக்க முடியும். பொதுவாக பேட்டரி என்பது சிறு சிறு செல்களால் உருவானது தான் பேட்டரி.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

பல சிறிய செல்களை இணைத்து ஒரு பேட்டரியை உருவாக்குவார்கள். இப்படியாக பேட்டரிக்குள் செல்களை கட்டமைக்கும் முறையில் தான் அதிகமான கொள்ளளவு கொண்ட பேட்டரிகள் உருவாகிறது. இந்த தொழிற்நுட்பத்திற்கு செல் -டூ-பேக் (CTP) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

இந்தCTP தொழிற்நுட்பத்தின் 2வது தலைமுறைதொழிற்நுட்பம் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த CATL என்ற நிறுவனம் தற்போது இந்த CTP தொழிற்நுட்பத்தில் 3வது தலைமுறையை உருவாக்கி அதில் பேட்டரியை தயாரித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

இந்த பேட்டரிக்கு குயிலின் எனப் பெயரிட்டுள்ளது. இந்த குயிலின் பெயர் சீனாவின் புராணக் கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். இந்த பெயரைத் தான் அந்த பேட்டரிக்கும் வைத்துள்ளனர். இந்த CTP 3.0 தொழிற்நுட்பம் முந்தை பேட்டரிகளை விட அதிக உழைப்பு, பாதுகாப்பு, சார்ஜிங் வேகம், மற்றும் குறைந்த தட்ப வெப்ப நிலையிலும் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

மேலும் இந்த பேட்டரியில் ஷாக் மற்றும் வைப்ரேஷன்களை தாங்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி குளிர் குறையும் திறன் அதிகரித்துள்ளது. இதனால் பேட்டரி சூடானால் விரைவாகக் குளிர் நிலைக்கு வந்துவிடும். அதனால் பேட்டரியில் சூடு அதிகமாக தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

இதே போல பேட்டரி ஃபாஸ்ட் மோடில் விரைவாக சார்ஜ் ஏறும் 10 நிமிடத்தில் பேட்டரியில் பெரும்பான்மையான சார்ஜ் ஏறிவிடும் தொழிற்நுட்பமும் இதில் இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் இந்த பேட்டரியை பொருத்தவரை தற்போது உள்ள பேட்டரியில் உள்ள குறைகளைப் போக்கும் வகையில் தொழிற்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 1000 கி . மீ பயணிக்கும் திறனுடைய பேட்டரி தயார் . . . எப்ப வருது தெரியுமா ?

இந்த குயிலின் பேட்டரிகள் வரும் 2023ம் ஆண்டு பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை CATL நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. தற்போது உள்ள பேட்டரி கார்கள் இந்த பேட்டரியை பயன்படுத்தினால் முழு சார்ஜில் 1000 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
CTAL Builds Electric battery with CTP 3point0 with 1000km in a single charge
Story first published: Monday, June 27, 2022, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X