பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு.. பாதுகாவலர் சொன்ன வினோத காரணம்

பிரபல 5 ஸ்டார் ஹோட்டலின் உள்ளே செல்ல ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

பைக்குகளில் டூர் செல்வது என்பது மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் விருப்பமான செயல்பாடுகளில் ஒன்று. பார்ப்பதற்கு இது எளிதாக தோன்றலாம். ஆனால் சொல்வதை காட்டிலும் செய்வது மிகவும் கடினமானது. டூர் செல்லும்போது பைக் ஆர்வலர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

இந்தியாவின் ஒரு பகுதியில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும். மற்றொரு பகுதியில் சூரியனின் வெப்பம் தகிக்கும். இப்படிப்பட்ட வித்தியாசமான காலநிலைகள், வித்தியாசமான மனிதர்கள், கரடு முரடான சாலைகளை டூர் செல்லும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

ஆனால் இவை எதையும் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல், தங்கள் மனதிற்கு விருப்பமான பைக் டூரிங்கை பேரார்வத்துடன் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நீண்ட நெடிய பயணத்தின்போது மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுக்கு நல்ல ஓய்வு தேவை.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

அப்போதுதான் மறுநாள் அட்வென்சர் பயணத்திற்கு உடல் ஒத்துழைக்கும். எனவே ஒட்டுமொத்த பயணமும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு விட்டால், வழியில் உள்ள ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்து விடுவதை மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

நீண்ட தூர பயணங்களின்போது மோட்டார்சைக்கிள்களை கவனமாக இயக்க நல்ல உறக்கத்துடன் சேர்த்து, ஆரோக்கியமான உணவும் அவசியமான ஒன்று. இவை இரண்டும் ஒரு சேர கிடைக்கும் இடங்களில்தான் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் பெரும்பாலும் அறை முன்பதிவு செய்கின்றனர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

இப்படிப்பட்ட சூழலில், மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் இரண்டு பேர் தங்களுக்கு விருப்பமான டூரிங்கை சமீபத்தில் மேற்கொண்டிருந்தனர். அப்போது தங்குவதற்காக வழியில் இருந்த பிரபலமான ஹோட்டல் ஒன்றில் அறை முன்பதிவு செய்திருந்தனர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

ஆனால் அந்த ஹோட்டலில் அவர்களுக்கு மிக மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. Vikhyat shandilya என்பவர் வெளியிட்ட வீடியோ மூலமாக சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. இது மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் உள்ள ரேடிசன் ப்ளூ (Radisson Blu) ஹோட்டல்தான் தற்போது புகாருக்கு உள்ளாகியுள்ளது. இது உலகம் முழுக்க மிகவும் பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களிலும் ரேடிசன் ப்ளூ ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதனிடையே இந்த வீடியோவில் தோன்றிய நபர்கள், ஹோட்டலில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்னை குறித்து விளக்குகின்றனர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

இவர்கள் இருவரும் சமீபத்தில் அதிகமான லக்கேஜ்களுடன் ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) மோட்டார்சைக்கிள்களில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். ராயல் என்பீல்டு ஹிமாலயன் இந்தியாவில் மிகவும் பிரபலமான அட்வென்ச்சர் டூரர் மாடலாக திகழ்கிறது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

அடிக்கடி லாங் டிரிப் அடிப்பவர்களின் முதன்மையாக தேர்வாக ராயல் என்பீல்டு ஹிமாலயன்தான் இருந்து வருகிறது. சரி, இனி என்ன பிரச்னை என்பதை பார்க்கலாம். சம்பந்தப்பட்ட பைக்கர்கள் ஹோட்டலுக்கு வந்தபோது, நுழைவுவாயிலில் வைத்து பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

''நாங்கள் ஹோட்டலில் முன்பதிவு செய்துள்ளோம். தற்போது அதற்காக வந்துள்ளோம்'' என அவர்கள் இருவரும், பாதுகாவலர்களிடம் தெரிவித்தனர். ஆனால் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

அப்போது புரோட்டோகால் படி பைக்கை அனுமதிக்க முடியாது என பாதுகாவலர் தெரிவித்தார். இதன்பின் ''எங்கள் பைக்குகளில் அதிகப்படியான லக்கேஜ் உள்ளது. அவற்றை இறக்கி வைத்ததும் இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பைக்குகளை பார்க்கிங் செய்து விடுகிறோம்'' என பைக்கர்கள் கூறினர்.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

ஆனால் அப்போதும் கூட அந்த பாதுகாவலர் பைக்கர்களை அங்கிருந்து கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்கள், எவ்வித பிரச்னையும் இன்றி ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைந்தன.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

வீடியோவில் கூட அதனை காண முடிகிறது. இதனிடையே ஹோட்டல் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசிய பின்பு, பைக்கர்கள் இருவரும் ஹோட்டல் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

இந்த சூழலில் ஹோட்டல் வளாகத்திற்குள் பைக்குகளை அனுமதிக்க முடியாதது ஏன்? என சம்பந்தப்பட்ட பைக்கர்கள் இருவரும் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

புரோட்டோகால் தொடர்பாக ஹோட்டல் பாதுகாவலரின் தவறான புரிந்துணர்வு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்ற மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் அமைந்துள்ளது.

பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... காவலர் சொன்ன காரணம் இதுதான்

மோட்டார்சைக்கிள்களில் டூர் செல்லும் நபர்கள், ஹோட்டல்களில் அறை புக்கிங் செய்யும் முன்பாக பார்க்கிங்கிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து கொள்வது நல்லது. நீங்கள் மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்கில் சென்று, ஒருவேளை நீங்கள் புக்கிங் செய்துள்ள ஹோட்டல் பார்க்கிங் வசதியை வழங்காவிட்டால், அது பெரிய பிரச்னையாக மாறிவிடும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Customers On Royal Enfield Himalayan Motorcycle Denied Entry Into Radisson Blu Hotel. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X