பெட்ரோல், டீசல் விலை தந்திரமாக ரூ.15 உயர்வு... மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

சென்னையில் கடந்த ஓராண்டில், பெட்ரோல் விலை 12.78, டீசலின் விலை 15.31 என வரலாறு காணாத வகையில், தந்திரமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

By Arun

சென்னையில் கடந்த ஓராண்டில், பெட்ரோல் விலை 12.78, டீசலின் விலை 15.31 என வரலாறு காணாத வகையில், தந்திரமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

ஆனால் அந்த நேரத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமே வழங்கப்பட்டது. அவை மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்தன.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

அதன்பின் மாதத்திற்கு 2 முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தின. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை செயல்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

தங்கம் விலையை போல், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையையும் தினசரி நிர்ணயிக்கும் இந்த திட்டம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட நாட்களாகவே ஆலோசித்து வந்தன. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

இதன்படி பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் திட்டம் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, விசாகப்பட்டிணம், உதய்பூர், ஜாம்ஷெத்பூர், சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், கடந்தாண்டு மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை, நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை பைசா கணக்கில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. பைசா கணக்கில் மட்டுமே என்பதால், அப்போது யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அதன்பின் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து விட்டது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த தினமான 16-6-2017ல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 57.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

ஆனால் இன்று (5-6-2018) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 80.80 ரூபாய்க்கும், டீசல் 72.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் பெட்ரோலின் விலை 12.78 ரூபாயும், டீசலின் விலை 15.31 ரூபாயும் என வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

மாதம் ஒரு முறை மற்றும் 2 முறை விலை நிர்ணயிக்கும் சமயங்களில் எல்லாம், 1 ரூபாய் விலை உயர்த்தினால் கூட நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். எதிர்கட்சிகளும், மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

ஆனால் இன்று அப்படிப்பட்ட நிலை இல்லை. இங்குதான் மத்திய அரசின் சூட்சமம் மறைந்திருக்கிறது. ஒரேயடியாக உயர்த்தினால்தானே பெரிய அளவில் எதிர்ப்பு வரும். பைசா கணக்கில், அதாவது கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்தினால், அந்த விஷயம் பெரிதாக்கப்படாது என்பதுதான் அந்த சூட்சமம்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

அதிகம் கவனிக்க முடியாத வகையில், அதாவது கண்ணுக்கு தெரியாத வகையில் கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, மத்திய அரசு தனது திட்டத்தில் வெற்றி பெற்று விட்டது. வழக்கம் போல மக்கள் தோல்வியடைந்து விட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

ஆனால் எவ்வளவு நாட்களுக்குதான் இப்படி மக்களை ஏமாற்ற முடியும்? நாளடைவில் மத்திய அரசின் சூட்சமத்தை புரிந்து கொண்ட மக்கள், பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

இதுகுறித்த கேள்வி பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தற்போது எழுப்பப்பட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் திட்டம் மாற்றப்படாது என்றும், அந்த திட்டமே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சொல்லி, மக்களை எரிச்சலடைய வைத்துள்ளார் தர்மேந்திர பிரதான்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2010-2014க்கு இடைப்பட்ட சமயத்தில், எண்ணெய் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாகவும், அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் தொலை நோக்கு திட்டத்தை மத்திய பாஜ அரசு செயல்படுத்தும் எனவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை வாபஸ் பெற முடியாது என மத்திய அமைச்சர் கையை விரித்து விட்டதால், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கவலையடைந்துள்ளனர். மாதாந்திர பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கே அவர்கள் பெருந்தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, இதர அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Daily fuel pricing to stay, says oil minister Pradhan. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X