Just In
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 4 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 6 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 11 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலிஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடேங்கப்பா... ஆட்டோ ரன்னிங்கில் இருக்கும்போதே சக்கரத்தை மாற்றிய இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ
ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் சக்கரத்தை மாற்றும் இளைஞர்களின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆட்டோ ஓட ஓட அதன் சக்கரத்தை மாற்றும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு சமூக வலை தளங்களில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை இந்த வீடியோ ஈர்த்துள்ளது. இது ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் ஸ்டண்ட் என ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் இதுபோன்ற ஸ்டண்ட்கள் மிகவும் அபாயகரமானது என சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற ஸ்டண்ட்களை செய்யும்போது விபத்து நிகழ்ந்தால், பலர் பாதிக்கப்படுவார்கள் என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கருத்தாக உள்ளது. எது எப்படியோ இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பது என்பது மிகவும் 'த்ரில்' ஆக இருக்கும். அதை யாராலும் மறுத்து விட முடியாது. இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 19ம் தேதி இணையத்தில் தென்பட்டது.
அதன்பின் மெல்ல மெல்ல பிரபலமாக தொடங்கியது. தற்போது ஆயிரக்கணக்கான லைக் மற்றும் ஷேர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. பழைய மஞ்சள் நிற ஆட்டோ ஒன்று சாலையில் பயணிக்கும் காட்சியுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. ஆனால் இது டிவிஎஸ் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட பழைய ஆட்டோ போல் தெரிகிறது.
இதனிடையே சில வினாடிகள் கடந்த பிறகு, ஆட்டோ டிரைவர் பின்பக்க வலது சக்கரத்தை அலேக்காக தூக்குகிறார். இதன்பின் ஆட்டோ ஒரு பக்கம் சாய்ந்தவாறே பயணிக்கிறது. பின்பக்க வலது சக்கரம் காற்றில் இருந்த சூழலில், ஆட்டோவிற்கு உள்ளே இருந்து வந்த நபர் ஒருவர் போல்ட்டுகளை தளர்த்தி சக்கரத்தை கழற்றுகிறார்.
அந்த சமயத்தில் மற்றொரு ஆட்டோ அங்கே வருகிறது. இரண்டாவது ஆட்டோவில் ஸ்பேர் சக்கரத்தை கொண்டு வந்த நபர் அதனை முதலாவது நபரிடம் கொடுக்கிறார். அதனை பெற்ற உடனேயே முதலாவது நபர் அதனை ஆட்டோவில் பொருத்துகிறார். இந்த வேலை முடிவடைந்ததும் ஆட்டோ நிற்கிறது. ஆனால் அப்போதும் கூட பின்பக்க வலது சக்கரம் காற்றிலேயேதான் இருக்கிறது.
உண்மையில் இது மிக சிறப்பான ஒரு ஸ்டண்ட்தான். ஆனால் இது மிகவும் அபாயகரமானது என்பதையும் மறுத்து விட முடியாது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஸ்டண்ட் பொது சாலையில் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த சாலை காலியாகவும் இல்லை. சிறிய 2-லேன் நெடுஞ்சாலையில் இந்த ஸ்டண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலையின் இரு புறமும் வீடுகள் வேறு இருக்கின்றன. உண்மையில் ஸ்டண்ட் செய்த ஆட்டோ நிற்கும்போது அதன் பின்னால் மேலும் சில வாகனங்கள் வந்து நிற்கின்றன. ஒருவேளை ஆட்டோ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்திருந்தால் பலர் காயமடைந்திருக்கலாம். உயிரிழப்புகள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஒரு வாகனம் ஓட ஓட அதன் சக்கரத்தை மாற்றும் ஸ்டண்ட்டை செய்வது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பு சிலர் இதுபோன்ற ஸ்டண்ட்களை செய்துள்ளனர். கார் 2 சக்கரங்களில் ஓடி கொண்டிருக்கும்போது, அதன் வீலை மாற்றும் வீடியோக்கள் இதற்கு முன்பு வெளியாகியுள்ளன. ஆனால் ஆட்டோரிக்ஸா ஒன்றில் இதுபோன்ற ஸ்டண்ட்டை செய்வது கேமராவில் சிக்கியிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என தெரிகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இது த்ரில் ஆக இருக்கலாம். அதேபோல் பார்ப்பதற்கும் வேடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் இது போன்ற ஸ்டண்ட்கள் கரணம் தப்பினால் மரணம் என்பது போலதான். உண்மையில் மூன்று சக்கரங்களில் ஒன்றை இவ்வளவு நேரத்திற்கு காற்றிலேயே நிறுத்திய டிரைவரின் திறன்கள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில்தான் உள்ளது.
அந்த நேரத்தில் சக்கரத்தை மாற்றுவதற்கும் கூட கண்டிப்பாக தைரியம் வேண்டும். இவர்களின் திறன்கள் அருமையாக இருந்தாலும், மிகவும் அபாயகரமான இந்த ஸ்டண்ட்டை பொது சாலையில் செய்வது என அவர்கள் எடுத்த முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
-
மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!