70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

போபாலை சேர்ந்த டாக்டர் ஒருவர், 70 லட்ச ரூபாய் மதிப்புடைய லக்ஸரி காரில் குப்பை அள்ளி, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

By Arun

போபாலை சேர்ந்த டாக்டர் ஒருவர், 70 லட்ச ரூபாய் மதிப்புடைய லக்ஸரி காரில் குப்பை அள்ளி, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை ஒரு சவாலாக எடுத்து கொண்டு டோனி, கோஹ்லி, சல்மான் கான் உள்ளிட்டோரும், தன்னை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலை சேர்ந்தவர் டாக்டர் அபினித் குப்தா. சொந்தமாக ஸ்கின் கிளீனிக் வைத்து நடத்தி வரும் இவர், 70 லட்ச ரூபாய் மதிப்பிலான டிசி அவன்டி லக்ஸரி காரில் குப்பை அள்ளி, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

டிசி அவன்டி லக்ஸரி காரின் பின்பகுதியில் டிராலி ஒன்றை இணைத்து கொண்ட டாக்டர் அபினித் குப்தா, போபால் நகர் முழுவதும் சுற்றி வந்து, குப்பைகளை அள்ளியுள்ளார்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில், தனது பங்களிப்பை வழங்குவதற்காகதான் டாக்டர் அபினித் குப்தா, லக்ஸரி காரில் குப்பை அள்ளியுள்ளார். சமூகத்தில் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் அவரது நோக்கம்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

இந்தியாவை பொறுத்தவரை, சாலையில் லக்ஸரி கார் சென்றாலே ஆச்சரியமாகதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட லக்ஸரி காரில் குப்பை அள்ளினால், மக்கள் வியப்படையாமல் இருப்பார்களா என்ன?

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

எனவே லக்ஸரி காரில் குப்பை அள்ளினால், பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பதால்தான், டாக்டர் அபினித் குப்தாவிற்கு இந்த ஐடியாவே தோன்றியதாம்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

டாக்டர் அபினித் குப்தா, லக்ஸரி காரில் குப்பை அள்ளியதுடன் நின்று விடவில்லை. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரும் தன்னை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

இதுகுறித்து டாக்டர் அபினித் குப்தா கூறுகையில், ''தூய்மையை பற்றி நாம் சிந்திக்காத வரை, நமது சுற்றுப்புறத்தை நம்மால் சுத்தமாக வைத்திருக்க முடியாது. சுற்றுப்புறத்தில் தூய்மையை பராமரிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை'' என்றார்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

டாக்டர் அபினித் குப்தா மேலும் கூறுகையில், ''தூய்மையில் எனக்கு எப்போதும் அதிக நம்பிக்கை உண்டு. எங்கள் குடும்பத்தின் அடிப்படை கொள்கைகளில் தூய்மையும் ஒன்று'' என்றார்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

டாக்டர் அபினித் குப்தா, தான் குப்பை அள்ளும் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் டோனி, விராட் கோஹ்லி, சல்மான் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரையும் டேக் செய்துள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.

அபினித் குப்தா விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் களத்தில் இறங்கி, குப்பைகளை அள்ளினால் ஆச்சரியம்தான். ஆனால் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

டிசி அவன்டி லக்ஸரி காரானது, டாக்டர் அபினித் குப்தா, அவரது தந்தைக்கு பரிசாக வழங்கியது. அந்த காரில் குப்பை அள்ளி, பிரச்சாரம் செய்யும் பணிக்கு அபினித் குப்தாவின் குடும்பமும் ஆதரவு அளித்துள்ளது.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

பொதுவாக விலை உயர்ந்த கார்களில் குப்பை அள்ளுவது தொடர்பான செய்திகளை அடிக்கடி கேள்விபட்டிருப்போம். ஆனால் சரியாக சர்வீஸ் செய்யாதது போன்ற காரணங்களால், கார் உற்பத்தியாளர்களை அவமானப்படுத்துவதற்காகவே சிலர் அவ்வாறு செய்வதுண்டு.

70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்!

ஆனால் டாக்டர் அபினித் குப்தா வேறு ரகம். பல லட்ச ரூபாய் மதிப்புடைய லக்ஸரி காரை காட்டிலும், தூய்மையே முக்கியமானது என்பதை சொல்லும் விதமாக, ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி விட்டார் டாக்டர் அபினித் குப்தா. வாழ்த்துக்கள்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rs. 70 Lakh Car Used to Carry Garbage in Bhopal, Doctor Urges Salman Khan, Ranbir Kapoor, MS Dhoni and Others To Follow Him. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X